நோய்களிலிருந்து பாதுகாக்கும் மாம்பழம் -mango vitamins




  •  மாம்பழம் அனைவரும் விரும்பும் ஒரு அற்புத கனி .
  •  இதை சாப்பிடாதவர்கள் இருக்க முடியாது  இதற்கும் நாட்டில் ஒரு பழமொழி உண்டு மாதா ஊட்டாத அன்னத்தை மாங்காய் ஊட்டும் என்பது தான் .
  • உலக நாடுகள் பலவற்றுக்கும் ஏற்றுமதியாகி அன்னிய செலாவணியை ஈட்டும் மாம்பழம் தமிழ்நாட்டு மக்களின் இதயக்கனி என்றால் மிகையல்ல. நம் தமிழ்நாட்டின் மாங்காயின் மருத்துவக் குணத்தை அனுபவித்தவர்கள் அதை அப்படியே ஒரு பாடமாக சொல்லியுள்ளனர் 
  • சிறு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை எல்லோரும் மாங்காய்  வெல்லம் கலந்த பச்சடி சாப்பிடுவது செரிமானத்திற்கும் மலச்சிக்கலுக்கும் உகந்ததாகும் மாவிலையை எடுத்து எரித்து வரும் சாம்பலை வெண்ணெயில் குழைத்து தீப்புண் மீது தடவி வர அவை விரைந்து ஆறும்.
  •  சீதபேதி ரத்த பேதி ஆகும்போது மாவிலைக் கொழுந்து அரச இலை கொழுந்து ஐந்து சேர்த்து வெந்தயம் அரை டீஸ்பூன் தூள் செய்து கலந்து பருகிவர மூன்று நாளில் அவை கட்டுப்படும் புளிப்பில்லாத மாங்காயை மோர் சாதத்துடன் சாப்பிட்டு வர தாது பலம் கூடும்.
  •  ஆனால் சரும நோய்கள் அதிகரிக்கும் அதனால் அளவுடன் சாப்பிடவும் மல்கோவா மாம்பழத்தை தினசரி ஒன்று வீதம் சாப்பிட்டு வருபவர்களுக்கு தேகம் வலிமை பெறும் ரத்தம் பெருகும் திசுக்களுக்கு ஆக்ஸிஜனை எடுத்துச் செல்லும் ஹீமோகுளோபின் மாம்பழத்தில் நிறைய உண்டு 
  • .ஹீமோகுளோபின் குறைவாக உள்ளவர்கள் தினசரி மாம்பழ ஜூஸ் பாலுடன் கலந்து சாப்பிட ஹீமோகுளோபின் ரத்த சோகை விலகும் பெண்களின் மேனி எழில் மிகுந்து வழுவழுவென இருக்க மாம்பழச்சாறு பெரிதும் துணைபுரியும் வாழ்க்கையில் ஈடுபட்டுள்ள ஆண்களின் தாதுவை விருத்தி செய்து உடலுறவில் பரமத்தி ஊட்ட வல்லது.
  •  மாம்பழம் இனிப்பு மாம்பழமே இந்த செய்கைக்கு பெரிதும் உதவும் உடலுக்கு வலுவூட்டி செரிமானத்தை ஊக்குவித்து சிறுகுடலில் பெருங்குடலில் செய்கையை செயல்படுத்துவதால் மாம்பழம் பொதுவாக வாயு வயிற்று கோளாறு மற்றும் மலச்சிக்கல் அறுக்கும் பெருங்குடல் அழற்சி புற்றுநோய்களை தடுக்கும் ஆற்றல் மாங்காய் மாம்பழம் இரண்டுக்கும் உண்டு .
  • உச்சி நேர வெயிலில் பித்த மயக்கம் வருவதுண்டு இதனை தடுக்க காலையில் மாம்பழம் தண்ணீர் கலந்த ஜூஸ் தீர்க்கும் இதில் சிறிது சுக்குப் பொடி ஏலக்காய் பொடி 2 சிட்டிகை சேர்த்து பருகி வர மயக்கம் ருசியின்மை காணாமல் போகும்.
  •  தீராத தலை வலி கண்பார்வை குறைபாடு உள்ளவர்கள் மற்றும் என்று தவறாக கருதி அவதிப்படும் நோயாளிகள் மல்கோவா மாம்பழம் அல்லது காலம் எனும் மாம்பழத்தை சாறு பிழிந்து அதில் தேன் 2 ஸ்பூன் ஏலக்காய்-3 சிட்டிகை குங்குமப்பூ 5 இதழ் கலந்து சிறிது தண்ணீர் சேர்த்து தினசரி காலை மாலை இரு வேளையும் வெறும் வயிற்றில் பருகி வர மேற்கண்ட நோய்கள் தணியும் .
  • தாது பல குறைவால் நரம்புத்தளர்ச்சி உடல் உறுதி இருப்பவர்கள் இப்படி மூன்று மாதம் சாப்பிட்டு வர தாது விருத்தி உடல் பலம்  தாது பலம் பெருகி உடலுறவில் பூரண பலம் பெறுவார்.
  •  மூல நோயாளிகள்  மாங்காய் மாம்பழம் சாப்பிட கூடாது  அப்படி சாப்பிட வேண்டுமென்றால் பால் கலந்து சாப்பிடவேண்டும் .
  • மாங்காயின் பருப்பினை துண்டுகளாக நறுக்கி மோரில் கலந்து சாப்பிட ரத்த மூலம் கட்டுப்படும் சிறு குழந்தைகளின் வயிற்றுப் பூச்சிகள் வெளியேறும்.
  •  மாதவிலக்கின் போது ரத்தம் அதிகம் வெளியேறினால் மேற்கொண்ட மாங்காய் பருப்பினை நெய்யில் வதக்கி சாப்பிடலாம் அல்லது மோரில் கலந்து சாப்பிடலாம் அதிக ரத்தப்போக்கு கட்டுப்படும் .
  • மா மரப்பட்டை நாவல் மரப்பட்டை மருத மரப்பட்டை இலை சமஅளவு எடுத்து ஒன்றிரண்டாக இடித்து அரை லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைத்து 100 மில்லியாகச் சுருக்கி வடிகட்டி அதில் தேன் 2 ஸ்பூன் கலந்து பருகி வர இதய நோய் தணிந்து இதயம் வலுப்பெறும்.
  •  இவ்வாறு அழகும் கவர்ச்சியும் இல்லற வாழ்க்கைக்கும் வயிற்றுக்கு வலிமையும் சருமத்திற்கு நிறமும் நிறமும் இதயத்துக்கு  கண்களுக்கு ஒளியும் வழங்க வல்ல மாம்பழத்தை சாப்பிட்டு உடல் முழு ஆரோக்கியம் பெறுவதுடன் நீடித்த ஆயுளும் பெறுவார் என்பதில் ஐயமில்லை நோயாளிகளும் சர்க்கரை நோயாளிகளும் மாம்பழத்தை உண்பதை தவிர்க்கவும் .

கருத்துகள்