இன்பம் தரும் இஞ்சி Ginger Health Benefits

 

இஞ்சி

இஞ்சியை சாதாரணமாக தமிழ்நாட்டு சமையலில் சேர்த்துக் கொள்வது மிகப் பழங்கால வழக்கத்தில் ஒன்று 
இதனால் பித்தம் பித்த வாய்வு பித்தம் சம்பந்தப்பட்ட நோய் அனைத்தும் வராமல்  தடுத்து உணவுகளை எளிதில் ஜீரணிக்க செய்து விடுகிறது .
சரி இதன் மருத்துவ மகிமைகளை பார்ப்போம் இஞ்சி வெள்ளை வெங்காயம் இரண்டும் ஒரு அவுன்ஸ் தேன் அரை அவுன்ஸ் ஒன்றாக கலந்துகொண்டு. வாந்தி குமட்டல்.  மயக்கமும் வாந்தியும் வரும்போது 1/2 வீதம் கொடுத்துவர நீங்கும்  அதற்கு பதில் மாதுளம் பழரசம் சேர்த்துக் கொடுத்து வர இருமல் இரைப்பு ஆஸ்துமா தீரும்.
 இஞ்சியை சுத்தம் செய்து மேல்தோல் சீவி போட்டு சிறு துண்டுகளாக நறுக்கி 150 கிராம் எடுத்து ஒரு கண்ணாடி ஜாடியில் போட்டு சுத்தமான தேனும் 150 கிராம் விட்டு நான்கு நாள் கழித்துத் தினம் காலையில் வெறும் வயிற்றில் ஓரிரு துண்டுகள் தொடர்ந்து ஒரு மண்டலம் சாப்பிட வேண்டும் இப்படி சாப்பிட்டால் உடல் ஆரோக்கியமாகி பித்தம் சரியாகும் ஆயுள் பெருகும் முகப்பொலிவும் அழகும் உண்டாகும் மனோதிடம் நெஞ்சுரம் பெரும்.
 வேம்பு காயகல்பம் போன்று இதுவும் ஒரு காயகல்ப முறையே ஆஸ்துமா நோயாளிகளுக்கு இஞ்சி 15 கிராம் வெள்ளெருக்கன் பூ 5 மிளகு 10 இவைகளை நசுக்கி இரண்டு குவளை நீர்விட்டுக் காய்ச்சி ஒரு குவளையாக சுண்ட வைத்து வேளை ஒன்றுக்கு அரை குவளையாக குடித்துவர இரைப்பு  இருமல் சளி நுரையீரல் அடைத்து வெளியேறாமல் தொல்லை கொடுக்கும்போதும் இந்தக் கஷாயத்தை காலை மாலை நோய் தீரும் வரை கொடுக்கலாம் .
இஞ்சி கஷாயம் கால் டம்ளர் 20 கிராம் கற்கண்டு தூள்  சேர்த்து அதனுடன் ஒரு எலுமிச்சம்பழம் ரசம் பிழிந்து 1/2 படி பசும்பாலில் கலந்து காலையில் சாப்பிட்டு வர பித்த ரோகங்கள் பித்த சம்பந்தப்பட்ட வாயு பித்த சம்பந்தப்பட்ட கப நோய்கள் யாவும் விலகிப்போகும் .
அத்துடன் டயாபடீஸ் என்ற நீரிழிவு சர்க்கரை மூலம் கழிவதை தடுத்து நிறுத்தி களைப்பு  பசி தாகம்  அடிக்கடி சிறுநீர் போவதும் ஆஸ்துமா இளைப்பு மயக்கம் இருமல்   குடைச்சல் வலிகள் நீங்கும் 

கருத்துகள்