சக்கரவர்த்திக் கீரை
உப்பு கார்ப்பு ஆகிய இரு கைகளை உடைய இக்கீரையை குழம்பு பதத்தில் சமைத்து ருசி யாக அமையும் இதனை மாதம் இருமுறை மும்முறை எல்லோரும் சாப்பிடக்கூடிய வகையில் பயன்படுத்த சீதோசன நிலை தரக்கூடியது இதன் பயன் மலச்சிக்கலைத் தடுக்கும் உடலில் உஷ்ணத்தை தடுக்கும் மண்ணில் கண் காது மூக்கு போன்ற பகுதிகளில் ரத்த நாளங்களை வலுப்பெறச் செய்யும்
சிறுகீரை
உடலுக்கு இதமான கீரை எளிதில் செரிக்கும் உடலில் சேரும் நச்சுகளை அகற்றும் பித்தம் தொடர்பான நோய்களை தடுக்கும் குழம்பு வைத்து சாப்பிடலாம் ருசியாக இருக்கும் மருந்துண்ணும் காலத்திலும் வயிற்று நோய் உள்ள காலத்திலும் சாப்பிடக்கூடாது
மணத்தக்காளி
சுவைமிக்க கீரைகளில் இதுவும் ஒன்று குழம்பை சமைக்கலாம் வாரம் ஒரு முறை உண்ணத்தக்கது குளிர்ச்சி தரவல்லது இதன் பயன் உடலுக்கு வனப்பு வலிமையும் தரவல்லது குடல் அழற்சி மூலநோய் உள்ளவர்கள் இக்கீரையை வாரம் இரண்டு முறை சமைத்து உண்ணலாம் ஆவியில் வேகவைத்த கீரை தினமும் ஒரு வேளை பருகி வர வயிற்றுப்புண் குணமாகும். குரல்வளம் ஆண்மையை பெருக்கும் இக்கீரை.
பசலைக்கீரை
இனிப்புச் சுவையுடைய இக்கீரையை கடையில் குழம்பு போன்ற பக்குவத்தில் சமைத்து உண்ணலாம் வாரம் ஒருமுறை உன்னால் நலம் உடம்பில் வாயு பித்தம் ஆகியவற்றை குறைக்கும் ஆண்மையை பெருக்கும் இல்லற வாசிகள் இன்பத்துக்கு உறுதுணையாக பசலைக்கீரை பயன்படுகிறது இதன் பயன் ஆண்மையைப் பலப்படுத்தும் மலச்சிக்கலைப் போக்கும் குளிர்ச்சியைத் தரும் ஆஸ்துமா போன்ற நோய் உள்ளவர்கள் இதனை கோடை காலத்தில் மட்டுமே உண்ணவும் . வெந்தயக்கீரை சுவையும் மணமும் ருசியும் மிக்க கீரை வெந்தயக்கீரை
குழம்பு இட்லி நல்ல துணையாகும்
குளிர்ச்சியைத் தந்து பித்தத்தை சற்று கட்டுப்படுத்தும் அஜீரணத்தை நீக்கும் கல்லீரலை நன்கு செயல்படத் தூண்டும் புரதம் தாதுக்கள் வைட்டமின் சி போன்றவை ஏராளமாக உண்டு வாரம் ஒரு முறை உண்டு வர மூட்டுவலி இடுப்புப் பிடிப்பு போன்றவை நீங்கும் சிறுநீர் கோளாறு வரவே வராது
தண்டு கீரை
தண்டு கீரை கடையல் குழம்பு போன்ற பக்குவத்தில் உள்ள வைட்டமின் A, C போன்றவையும் புரதம் தாது சுண்ணாம்பு சத்து இரும்பு கந்தகம் போன்றவை மிகுந்துள்ளன வாரம் ஒரு முறை உண்ணலாம் கீரையை விட தண்டு கீரை பழம் மிகவும் குளிர்ச்சி தந்து பித்தத்தை குறைக்கும்
அகத்திக்கீரை
இக்கீரையில் எளிதில் செரிமானம் ஆகாது எனவே வயிற்றுக்கோளாறுகள் வயதானவர்கள் உண்ணலாகாது வாலிப வயதில் உள்ளவர்கள் கடும் உழைப்பாளிகள் மாதமொருமுறை குழம்பாக்கி உள்ள வைட்டமின் இரும்புச்சத்து சுண்ணாம்புச் சத்து மிகுந்த கீரை அடிக்கடி உண்ணல் ஆகாது விஷங்களை முறிக்கும் கண்பார்வை நரம்புகளுக்கு வலுவூட்டும் கிருமிகளைக் கொள்ளும்
பொன்னாங்கண்ணிக் கீரை
தேங்காய் துருவலுடன் குறுக்கிடாமல் பொரியல் செய்து சாப்பிட்டால் பொன்னாங்கண்ணிக் கீரை மிகவும் ருசியாக இருக்கும் நன்கு சுவையுள்ள இக்கீரை உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் மண்ணீரலும் மூலம் போன்ற நோய் உள்ளவர்களுக்கும் கண் பார்வைக்கோளாறு உடையவர்களுக்கும் மிகுந்த நலம் அளிக்க வல்லது
கரிசலாங்கண்ணி கீரை
நண்டு சுவையுடைய கரிசலாங்கண்ணிக் கீரையை பகலில் பருப்புடன் பொரியல் செய்து உண்ணலாம் ருசியாக இல்லாது போனாலும் கபம் வாயு போன்றவற்றை நீக்கி இரைப்பை வலிமை பெற உதவும் வாரம் ஒருமுறையாவது உண்டு வரவேண்டும் கண் பார்வை தெளிவுபெறும் பல நோய்கள் வராது ஈரல் வலுப்பெறும் வயதான தோற்றத்தை கட்டுப்படுத்தும் தூதுவளைக் கீரை
இதன் இலைகளை எடுத்து நெய்யில் வதக்கி புளி மிளகாய் உப்பு இவற்றுடன் துவையல் செய்து தினமும் உண்டு வர தாது பலம் பெறும் நுரையீரலில் கோளாறு வராது நரம்புகள் வலிமை பெறும் ஆண்மை விருத்தியடையும் நினைவாற்றல் விரிவடையும் ஆஸ்துமா மற்றும் நரம்புத் தளர்ச்சி உடையவர்கள் வாரம் மூன்று முறை தூதுவளையை உண்ணலாம்
அரைக்கீரை பத்திய உணவுக்கு பெரிதும் உதவும் கீரை ஒரு சோகமான மகளிருக்கு உடனடியாக ஊட்டத்தை அளிக்க வல்லது எவ்வகை நோயாளிக்கும் ஏற்புடைய கீரை அன்றாடம் சாப்பிடக்கூடிய ஒரு சில கீரைகளில் அரைக்கீரை முதன்மையானது கண்பார்வை சீர்பெறும் உடம்பில் ரத்த நாளங்கள் தாதுக்கள் பலம்பெற ஈரல் போன்ற உறுப்புகள் நல்ல நிலையில் இயங்க உதவும் கடையில் குழம்பு பொரியல் ஆகிய பக்குவகங்களில் பயன் படுத்தலாம்
முடக்கத்தான் கீரை கீல் வாயு காரணமாக வரும் மூட்டு அழற்சி வாய்வு பிடிப்பு உடையவர்கள் வாரம் ஒருமுறை முடக்கத்தான் கீரை சூப் அல்லது துவையலாக செய்து சாப்பிட்டுவர அவை விலகும் சாதாரணமானவர்கள் மாதம் ஒரு முறை முடக்கத்தான் கீரையை பயன்படுத்தலாம்
கொத்துமல்லிக் கீரை கொத்தமல்லிக் கீரையைத் துவையல் ஆகி இட்லி தோசை போன்றவற்றிற்கு பயன்படுத்தலாம் கார்ப்பும் இனிப்பும் மிக்க கீரை துவையல் இதயத்துக்கு நல்லது பித்தத்தை தணிக்கும் சிறுநீர் தடையை விலக்கும்
புதினாக்கீரை எளிதில் செரிமானமாகாத கீரைகளில் புதினா ஒன்று இனிப்புச் சுவையுடையது இதய நோயாளிகளுக்கும் கபம் இருமல் வாந்தி வயிற்றுப் போக்கு உடையவர்கள் அன்றாட உணவில் புதினாவை துவையல் செய்து சாப்பிட்டு வர அவை விலகும் மாமிச உணவை அதிகமாக உள்ளவர்கள் கட்டாயம் உணவில் சேர்க்க வேண்டும்
கருவேப்பிலை கருவேப்பிலை துவையல் செய்து உண்டு வர மேனி அழகு பெறும் வாய்க்கு ருசி கூட்டும் பசியை தூண்டி செரிமானத்துக்கு உதவும் குழந்தைகளுக்கு செரிமான சக்தியை கூட்ட வல்லது மனமுள்ள கீரை இட்லி பொங்கல் ஆகியவற்றுக்கு கருவேப்பிலை துவையல் சுவையான காம்பினேசன் ஆகும்
பண்ணைக்கீரை குடல் சுத்தம் செய்து வலிமை தரக்கூடிய கீரை 15 நாட்களுக்கு ஒருமுறை சாப்பிடலாம் மேல் தோலில் பாதுகாப்பு நல்லது காரம் புளி சேர்க்காமல் பொரியல் செய்து சாப்பிட்டு வரலாம் கரப்பான் உடையவர்கள் அடிக்கடி சாப்பிடலாம்
கருத்துகள்
கருத்துரையிடுக