முருங்கை மரம் மருத்துவ வரம் Moringa oleifera


  •  நம் நாட்டில் ஒரு பழமொழி உள்ளது முருங்கை நட்டவன் வெறுங்கையோடு போவான் இதற்கு அர்த்தம் என்னவென்றால் முருங்கை மரம் வைத்து அதில் உள்ள அனைத்து வகையான பொருளையும் பயன்படுத்தி வந்தால் அவன் வயோதிகத்திலும் கையில்  ஊன்றுகோல் இல்லாமல் நடமாடுவார் என்று அர்த்தம் முருங்கை வீட்டில் சாதாரணமாக வளரக்கூடிய மரம் இதன் இலை பூ காய் பட்டை முதலியவை  உபயோகப்படுகின்றன
  •   இலை கறியாக சமைத்து ரசமாக வைத்து அருந்த சர்க்கரை வியாதி குணம் பெறும் இலையை அரைத்து வாத வீக்கங்களுக்கு யானைக்கால் வீக்கம் மீது பூசி வர குணமாகும் ஆமணக்கு நெய்யில் வதக்கி வைத்துக் கட்ட மேற்கூறிய வீக்கங்கள் தணியும் 
  • பூ ஆழாக்கு பசும்பாலில் 30 முருங்கைப் பூவைப் போட்டு நன்றாக காய்ச்சி வடித்து சீனா கற்கண்டு சேர்த்து தினமும் இரவில் படுக்கப் போகும் முன் அருந்த தாது விருத்தியும் வன்மையும் உண்டாகும் இப்பூவை அனேக லேகியங்களில் சேர்த்து தாது புஷ்டிக்கு உபயோகிக்கின்றனர்
  •  காய் இது பத்தியத்திற்கு உகந்ததாக சமையல் சேர்த்துக்கொள்ளலாம் குழந்தைகளின் வயிற்றுப் பூச்சிகள் வெளியேறும்
  •  பட்டை பட்டையை சிதைத்து வீக்கங்களுக்கு வைத்து கட்டலாம் வீக்கங்கள் குறையும் இதனை எண்ணெய்யில் கலந்து காதில்விட காதில் ரணம் ஆறும் பாலில் கலந்து நெற்றியில் பூசி வர தலைவலி போகும் இவ்வாறு பல்லாயிரம் ஆண்டுகளாக வழி வளர்ந்து ஈடுஇணையற்ற ஏற்ற மிக்க சித்த முறையை பயன்படுத்த மறந்து எளிய நோய்க்கும் ஆங்கில மருத்துவம் செய்து மிகுந்த பொருளைச் செலவு நாம் செய்து கொண்டிருக்கிறோம் தமிழகத்தில் தமிழனாய் பிறந்த நம் தமிழ் வைத்திய முறையை பின்பற்றுவதன் மூலம் நன்மையும் நம்மை சார்ந்தவர்கள் சந்ததியினரையும் நோயற்ற வாழ்வு உடையவளாக செய்வது நம் கடமையாகும் 

கருத்துகள்