மனிதனுடைய தேக வளர்ச்சி என்பது உணவு உடை இருப்பிடம் பழக்கவழக்கங்கள் எண்ணங்கள் வாழ்க்கை முறையை சார்ந்தே வளர்கிறது உண்ணும் உணவில் உதாரணமாக இளமையை தக்க வைக்கும் பருப்பு வகைகளும் பாதாம் பருப்பு பேரீச்சம்பழம் கோதுமை கறிவேப்பிலை தக்காளி எலுமிச்சம் பழம் ஆப்பிள் மாதுளை கொத்துமல்லி போன்றவற்றுக்குச் சக்தி உண்டு ரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்கள் உடல் நாளுக்கு நாள் மெலிந்து எலும்பும் தோலுமாக காட்சியளிப்பார்கள் என்ன காரணம் என்றே தெரியவில்லை நன்றாகத்தான் சாப்பிடுகிறேன் உடல் ஒட்டவில்லை என்று புலம்புவார்கள் இவர்கள் குரலில் தான் பிரச்சினை உடலின் ஈர்ப்பு சக்தி போதிய அளவு இல்லை என்றால் என்ன சாப்பிட்டாலும் உடம்பு தேராது இதற்கு நமது முன்னோர்கள் ஒரு எளிய முறையை குறிப்பிட்டுள்ளனர் ஆறு மாதத்துக்கு ஒருமுறையாவது குடலை சுத்தம் செய்வது தான் அந்த முறை குடலியக்கம் சீராக இருக்க குறைந்தது உணவுப் பழக்க வழக்கங்களில் சரிவர இருப்பதே அதற்கு சில நாம் கடைபிடிக்க வேண்டிய முறைகள் உண்டு குழந்தை சிறுவர்களாய் இருந்தால் வாழைப்பழத்தை துண்டுகளாக்கி விளக்கெண்ணெய் தேய்த்து 4 அல்லது 5 துண்டுகளாக காலை பல் துலக்கியதும் விளங்க செய்வார்கள் 11 மணிக்குள் மிளகு ரசம் இரண்டு வேளை பருக பேதியாகும் . உடலில் தங்கிய பூச்சிகள் அசுத்தங்கள் கசடுகள் வெளியேறும் அதற்கு இரண்டு நாள் கழித்து பார்த்தால் பசி பசி என்று சிறுவர்கள் அதிக அளவில் உண்பார்கள். உடம்பும் சதை பிடித்து வளரும் இதற்கு நிரந்தர தீர்வு என்ன உடனே பலன் தரும் உணவை உண்பது தான் அவை என்னென்ன ஆப்பிள் சாறு மாதுளைச் சாறு தேன் 2 ஸ்பூன் அல்லது கேரட் சாறுடன் தேன் 2 ஸ்பூன் அல்லது பாதாம் பருப்பு 2 பேரிச்சம்பழம் பசும்பால் அல்லது புழுங்கல் அரிசி கடலைப்பருப்பு எண்ணெய் பனை வெல்லம் ஏலக்காய் சேர்த்த சக்கரை பொங்கல். அல்லது உளுந்து சேர்த்த பலகாரங்கள் .அல்லது கோதுமை சோயாபீன்ஸ் புழுங்கல் அரிசி அவல் கலந்த கஞ்சி. அல்லது வேர்க்கடலை வெல்லம் ராகி அடை கலந்த உருண்டை .முருங்கைக்கீரை பொன்னாங்கண்ணி கீரை மணத்தக்காளி கீரை இவற்றில் ஏதாவது ஒன்றை தினசரி பகல் உணவில் சமைத்து உண்ணுவது. இப்படி பலன் தரும் உணவு வகைகளை சாப்பிட்டு வர உடல் செழுமையும் இளமையாகும் வளரும்
கருத்துகள்
கருத்துரையிடுக