கர்ப்பிணி தாய்மார்களுக்கு
பிரசவ லேகியம் பூண்டு லேகியம் மற்றும் குழந்தைக்கான உரை மருந்து பிரசவ லேகியம் பாரம்பரியமிக்க லேகியம் இது சுக்கு கொத்துமல்லி பனை சர்க்கரை நெய் சேர்த்த பிரசவ லேகியம் 7மாத கர்ப்பம் முதல் குழந்தையும் ஒரு வயது வரை தாய்க்கு தருவது இதன்மூலம் கர்ப்ப சூடு குறையும் இயற்கையான இரும்பு மற்றும் கால்சியம் சத்தும் கிடைக்கிறது இதனுடன் உரை மருந்து தருவது வழக்கம் பூண்டு லேகியம் நன்றாக பால் சுரக்க உதவும் இந்த மூன்று லேகியத்தின் செய்முறையும் பார்க்கலாம்
தேவையானவை
இரண்டு அல்லது மூன்று துண்டுகள் சித்தரத்தை இரண்டு துண்டுகள் கண்டந்திப்பிலி 1 -துண்டு -அரிசித்திப்பிலி- சிறிதளவு ஏல அரிசி சிறிதளவு கசகசா 2 டீஸ்பூன் சோம்பு 2 டீஸ்பூன் ஓமம் 2 டீஸ்பூன் கிராம்பு பத்து பட்டை அரை துண்டு வசம்பு 2 துண்டு -மிளகு 50 கிராம் சீரகம் 2 டீஸ்பூன் இஞ்சி 1 துண்டு வெல்லம் 250 கிராம் சாத்துக்குடி சாறு அரை கப் நெய் 3 டீஸ்பூன் நல்லெண்ணெய் ஒரு டீஸ்பூன் தேன் ஒரு டீஸ்பூன் இப்போது எப்படி செய்ய வேண்டும் அரிசி திப்பிலி ஏலரிசி கசகசா சோம்பு ஓமம் கிராம்பு பட்டை மிளகு சீரகத்தை வெய்யிலில் ஒரு நாள் முழுவதும் காய வைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும் சுக்கு வசம்பு சித்தரத்தை கண்டந்திப்பிலி சிறிதாக நறுக்கி அடுப்பில் வெறும் வாணலியை வைத்து தனித்தனியாக பொருட்களை பொன் வறுவலாக வறுத்து கொள்ளவும் ஆறியதும் மிக்ஸியில் போட்டு நைசாக அரைக்கவும் அரைத்த அவற்றை நன்றாக சலித்து வைக்கவும் இந்த தோல் சீவி அரைத்து சாறை வடிகட்டி வைக்கவும் கொஞ்ச நேரம் கழித்து தெளிந்ததும் மேலாக வடித்து எடுத்துக் கொள்ளவும் அத்துடன் சாத்துக்குடி சாறையும் சேர்த்து அடுப்பில் வைக்கவும் வெல்லத்தை தூள் செய்து அதில் கொட்டவும் வெல்லம் கரைந்ததும் வடிகட்டி திரும்ப அடுப்பில் வைத்து 2 நிமிடம் கொதிக்கவிடவும் ஒளித்து வைத்துள்ள பொடியை அதில் தூவி கட்டியில்லாமல் கிளறவும் நெய் நல்லெண்ணெய் சேர்த்து அடுப்பில் சிம்மில் வைத்து கிளறவும் கையில் ஒட்டாமல் அல்வா போல் வந்ததும் இறக்கி தேனை விட்டு கிளறி ஆற விடவும் நன்கு ஆறியதும் பாட்டிலில் மூடி போட்ட பாத்திரத்தில் எடுத்து வைத்தால் மாதக் கணக்கில் கெடாமல் இருக்கும்
பூண்டு லேகியம்
பூண்டு அரை கப் பால் விட்டு வேக வைத்து அத்துடன் இஞ்சிச்சாறு வடிகட்டிய கருப்பட்டியை சேர்த்து அடுப்பில் வைத்து கடைந்து இறக்கி வைத்து உருட்டிக் கொடுக்க மறுநாள் காலை இஞ்சி மேல் பொடி தேன் கொடுக்கவும்
பச்சிளம் குழந்தைக்கு உரை மருந்து குழந்தை
பிறந்து பத்து பதினைந்து நாட்களில் ஐந்து அல்லது ஏழு வயது வரை தொடர்ந்து உரை மருந்து கொடுக்கலாம் கடுக்காய் சித்தரத்தை சுக்கு ஜாதிக்காய் மாசிக்காய் வசம்பு என்ற ஆறு கடைச்சரக்குகள் நெல்லை வேக வைக்கும்போது நெல்லுடன் இவற்றை அப்படியே வெள்ளைத்துணியில் முடித்து வைத்துவிடவும் அரைவேக்காடு ஏற்படுதல் எடுத்து நிழலில் உலர்த்தி வைத்துக் கொள்ளவும் உரை மருந்து தயார் களத்தில் உள்ள உரைகல் ஒன்று தேவை அதில் வெந்நீர் வெற்றிலைச் சாறு துளசிச் சாறு ஓம கஷாயம் இஞ்சி சாறு இவற்றில் ஒன்றை விட்டு ஒன்று ஒன்றாக வயதுக்கேற்றபடி 2 அல்லது 5 தடவை உரைத்து விழு தேன் அல்லது சர்க்கரை சேர்த்துக் கொள்வோம்
கருத்துகள்
கருத்துரையிடுக