முடக்கத்தான் கீரை மருத்துவ மகிமை- mudakathan keerai

 


நம் நாட்டு சித்தர்களின் மொழிப் புலமைக்கு எடுத்துக்காட்டாக தான் முடக்கத்தான் எனும்பெயர் மூலிகையின் பெயரிலேயே  எந்த நோயை தீர்க்கும் என்பதை உணர்த்தும் வகையில் அந்த மூலிகை பெயரை சூட்டியுள்ளனர் முடக்கு +அறுத்தான் =முடக்கத்தான் மூட்டுகளில் நீர் சேர்ந்து வீக்கமடைந்து வலியுடன் கால் கைகளை நீட்ட முடியாமல் அவதிப் படுபவர்கள் கீழே உட்கார முடியாத ஒருவன் கழுத்துப்பகுதியில் முதுகுத்தண்டு மேற்பகுதியில் எலும்புகள் உரசலால் வலி ஏற்பட்டு  அவர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்த மூலிகை முடக்கு அறுத்தான் எனப்படும் முடக்கத்தான் உடம்பு இயக்கம் குறிப்பாக மூட்டு பகுதியில் இணைப்பு எலும்புகள் ஆகியவற்றில் இயக்கத்தை முடக்கும் இப்படிப்பட்ட நோய்கள் பெண்களுக்கு 40 வயது பின்னரும் ஆண்களுக்கு 50 வயதுக்குப் பின்னரும் ஏற்படும் அதற்கு முன்பாகவே வாரம் ஒருநாள் இந்த முடக்கத்தான் கீரை பூண்டு மிளகு சீரகம் வெங்காயம் பெருங்காயம் கருவேப்பிலை ஆகியவற்றை சூப் போல் செய்து சாப்பிட்டு வர படிப்படியாக ஓரிரு மாதங்களில் மூட்டுகளில் தங்கிய நீர் வடிந்து தலைவலி குறைந்து இயல்பாக நடப்பது அக்காலத்தில் இப்படி வாரம் ஒரு நாள் முடக்கத்தான் கீரை ரசம் முடக்கத்தான் கீரை மசியல் சாப்பிட்டு வருபவர்கள் 60 வயதுவரை நன்றாக நடனம் ஆடுவார்கள் அதிலும் குறிப்பாக தோசை மாவில் வாரம் ஒரு நாள் இந்தக் கீரையை அரைத்து கரைத்து தோசை செய்து சாப்பிட அதிலும் குறிப்பாக தோசை மாவில் இப்படி உணவு வழியாகவே முடக்கத்தான் கீரையை சாப்பிட்டு வர உடலில் வலு பெற்று மூட்டுக்கள் வலுப்பெற்று முடக்கம் இன்றி நன்கு நடமாடினர் என்பதையும் இன்று கிராமத்தில் நடமாடும் முதியவரை கண்டு கேட்டு அறியலாம் மனித வாழ்வு நடமாட்டம் மூட்டுக்களில் செயல்திறனில் உறைந்து கிடைக்கிறது இந்த மூட்டுக்களில் வரக்கூடிய  நோய்களை எதிர்க்கக்கூடிய கூடிய மூலிகையை மொடக்கத்தான் முடக்கத்தான் தோட்டங்களில் வரக்கூடிய கொடிவகை இதன் காய் சிறுவர்கள் பறித்து நெற்றியில் மோதிப்  பட்டென்று உடைப்பார்கள் இவ்வளவு அரிய பயனளிக்கும் முடக்கத்தான் தேடிச் சென்று வாரம் ஒருநாள் மேற்கொண்ட உணவுப் பகுதிகள் சாப்பிட்டு வாருங்கள் மூட்டுகளுக்கு கவசமாகும் முடக்கத்தான் நம்மை முடக்காமல் நடக்க வைக்கும் 



கருத்துகள்