ஆதி மருந்து திப்பிலி piper longum

 திப்பிலி



 இந்தியாவுக்கே உரிய திப்பிலி தான் சிறந்த மருத்துவத்தின் முதல் மூலிகை இது மருத்துவ குணம் மிக்கது திப்பிலி இருமல் இளைப்பு மயக்கம் சுவையின்மை இருமல் தலைவலி ஈரல் கட்டி பெருவயிறு குளிர் சுரம் கண் நோய்கள் ஆகியவற்றை போக்க வல்லது உடம்பிற்கு அழகு . பிணிகளை அகற்ற வல்லது இதன் மருத்துவ குணங்களை பார்ப்போம்.

  •  இருமல் தீர திப்பிலி 100 கிராம் கரிசலாங்கண்ணி இலை 1 பிடி எடுத்து இடித்து 500 மில்லி நீரில் போட்டு காய்ச்சி சுண்டிய பின் அடியில் நீக்கும் திப்பிலி கரிசாலை  வறுத்து பொடி செய்து அதில் தேவையான அளவு சர்க்கரை சேர்த்து காலை மாலை அரை டீஸ்பூன் எடுத்து சாப்பிட்டால் இருமல் உடனே குணமாகும் .
  • பெண்களுக்கு மாதவிலக்கின் போதும் ஏற்படும் வெள்ளை பெரும்பாடு குணமாக திப்பிலி 100 கிராம் தோற்றான் விதை 30 கிராம் இரண்டையும் லேசாக வறுத்து பொடி செய்து அத்துடன் வெந்தயப் பொடி சம அளவு கலந்து அதில் தினம் காலை மாலை அரை டீஸ்பூன் எடுத்து சாப்பாட்டு கஞ்சியுடன் சாப்பிட்டு வர பெரும்பாடு வெள்ளை படுதல் கட்டுக்குள் வரும்

  •  அதேபோல் காய்ச்சல் கோழை விலகிட திப்பிலி பொடியை கால் ஸ்பூன் எடுத்து கம்மாறு வெற்றிலை வைத்து தேன் கலந்து சாப்பிட காய்ச்சல் கோழை இருமல் விலகும் ஐந்து முதல் பத்து நாட்கள் இதை செய்ய வேண்டும்
  •  இளைப்பு நோய் கட்டுக்குள் கொண்டுவர திப்பிலிப் பொடி கடுக்காய் பொடியை சம அளவு எடுத்து தேனில் குழைத்து காலை மாலை குடித்து வந்தீங்கன்னா இளைப்பு நோய் குறையும் அதேபோல் சிலர் சிலருக்கு இளைப்பு இருமல் வாய்வு தொல்லைகள் இருக்கும் அவர்களுக்கு திப்பிலி 350 கிராம் மிளகு 175 கிராம் கருஞ்சீரகம் 100 கிராம் சித்தரத்தை 100 கிராம் லவங்கப்பட்டை 50 கிராம் ஓமம் 100 கிராம் தாளிசபத்திரி 50 கிராம் இலவங்கப்பத்திரி 50 கிராம் திரிபாலா 50 கிராம் இலவங்கம் 35 கிராம் ஏலம் 35 கிராம் சித்திரை மூலம் 35 கிராம் இவற்றை எல்லாம் எடுத்து லேசாக வறுத்து இடித்து பொடி செய்து அதை கொஞ்சம் சர்க்கரை கலந்து பத்திரமாக எடுத்து வைக்கவும் தினமும் அரை டீஸ்பூன் எடுத்து காலை மாலை பாலுடன் குடித்து வந்தால் இருமல் வாய்வு இளைப்பு ஆகியவை தீரும் .
  • ஆண்மை பெருகிட திப்பிலிப் பொடியுடன் வெந்தயம் சேர்த்து நெய்யில் கலந்து சாப்பிட விந்து இறுகிய ஆண்மை இருக்கும் திப்பிலி வேர் என்பது திப்பிலி கொடியின் வேர் சிறு முடிச்சுகளுடன் நீண்டு லேசாக மஞ்சள் நிறமாக இருக்கும் இதன் வேரை பாலில் கலந்து கொடுக்க நீர்வேட்கை இருமல் உடல் கடுப்பு ஆகியவை தீரும் .
  • அதேபோல் சிலருக்கு தீராத விக்கல் இருக்கும் அவர்கள் திப்பிலி 10 கிராம் சீரகம் 10 கிராம் லேசாக வறுத்து கஷாயம் செய்து தேன் கலந்து குடித்து வர நீண்ட நேர விக்கல் உடனே நிற்கும் .
  • சிலருக்கு உடலில் தேமல் இருக்கும் அது மறைய திப்பிலியை தூள் செய்து அத்துடன் வில்வ இலை பொடி அரை ஸ்பூன் கலந்து தேனுடன் காலை மாலை சாப்பிட்டு வர தேமல் மறைந்து ஒரு மாதம் தொடர்ந்து சாப்பிடவும் 
  •  திப்பிலி மருந்தாக பயன்படுகிறது இதன் பயன்பாடு மக்கள் நீண்டகாலமாக உள்ளது வீட்டில் சுக்கு மிளகு இருப்பது போல திப்பிலியும் இருந்தால் நுரையீரல் பாதுகாப்பாக இருக்கும் ஒழிப்பு பணியில் தீர்ப்பினை இடம் மிகவும் முக்கியமானது .

கருத்துகள்