benefits of drinking water/ நீரின் மருத்துவ பயன்கள்
இணைப்பைப் பெறுக
Facebook
X
Pinterest
மின்னஞ்சல்
பிற ஆப்ஸ்
நீரின் மருத்துவ பயன்கள்
நமக்குத் தண்ணீர் உடைய தேவையும் முக்கியத்துவமும் என்ன என்ன அப்படின்னு சிந்தித்துப் பார்க்காமல் தவிக்கும் நேரத்தில் மட்டும் தண்ணீரை குடித்துவிட்டு அடுத்தடுத்த வேலையை பார்க்கிறதுக்கு பலபேர் போய்விடுவோம் நம்ம உடம்போட இடையில 50 முதல் 75 சதவீதம் தண்ணீர்தான் நிரம்பியிருக்கும் இதுதான் அறிவியல் பூர்வமான உண்மை.
இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த தண்ணீரை நம்முடைய தேவைக்கு குறைவாக பருகும் போது அது பல பிரச்சனைகளை உண்டாக்கிவிடும் நீங்கள் குறைவான அளவுதான் தண்ணீர் குடிக்கிறீர்கள் அப்படின்னு உணர்த்தக்கூடிய அறிகுறிகள் பற்றி தான் பார்க்க போகிறோம் .
பொதுவாக நமக்கு தாகம் எடுக்கும் போது மட்டுமே தண்ணீர் குடிக்கிறோம் அதுவே போதுமானது என கூறிவிட முடியாது மற்ற நேரங்களில் லிக்விட் புட்ஸ் ல இருந்து உடலுக்குத் தேவையான நீர்ச் சத்து நமக்கு கிடைக்கிறது ஒவ்வொருவரும் தினமும் 2 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று சொல்லிவிடமுடியாது ஒவ்வொரு மனிதனுக்கும் இந்த அளவு மாறுபடும் அதனாலதான் சிலர் பாத்தீங்கன்னா 2 அல்லது 3 லிட்டர் தண்ணீரை குடித்து விடுவார்கள் ஆனால் சிலருக்கு இது ரொம்பவே கடினமான விஷயமாக இருக்கு நீங்க கூட டெய்லி எவ்வளவு தண்ணீர் குடிக்கிறீர்கள் அப்படிங்கறது சொல்லுங்க பார்க்கலாம் உங்களுடைய வயது நீங்கள் ஆணா பெண்ணா நீங்கள் இருக்கக்கூடிய இடத்தை உடைய சூழ்நிலை தற்போது சூழ்நிலை உங்களுடைய உடலுடைய நிலை நீங்கள் செயல்படும் விதம் இதெல்லாம் வைத்துதான் ஒருவருக்கு எவ்வளவு தண்ணீர் தேவை என்றுதான் சொல்லமுடியும்.
நீங்க உங்களுக்கு தேவையான அளவைவிட குறைவான அளவு தண்ணீர் குடிக்கிறீர்கள் அப்படிங்கறத சில அறிகுறிகளை வைத்து நம்ம தெரிஞ்சுக்கலாம் சிலருடைய வாயிலிருந்து துர்நாற்றம் வீசும் நீங்கள் குறைவாக தண்ணீர் குடிக்கிறது கூட இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.
நீங்கள் குறைவாக தண்ணீர் குடிக்கும் போது உமிழ் நீர் குறைவாக சுரக்கும் உமிழ்நீர் வாய் மற்றும் பற்களில் இருக்கிற பாக்டீரியாக்களை சுத்தம் செய்வது மிக மிக முக்கியமான விஷயம் நம்ம தண்ணீர் குறைவாக குடிக்கிறதுனால இது பாதிக்கப்பட்டு உங்களுடைய பற்கள் மற்றும் ஈறுகளின் ஆரோக்கியத்தைப் பாதிக்கும் இத்தனை நாளா உங்களுடைய வாயில் இருந்து துர்நாற்றம் வீசியது இதை தவிர்க்க நினைக்கும் போது நீங்கள் போதுமான அளவுக்கு தண்ணீர் குடிக்கிறது மிகவும் முக்கியமான ஒன்று நீங்கள் தொடர்ந்து உங்களுக்கு தேவையான அளவு தண்ணீர் குடிக்காமல் இருந்து வரும் போது உங்களுடைய உடல் சோர்வாகவும் அசதியாக நீங்கள் உணர்வீர்கள்.
நம்முடைய உடலில் நீர் குறையும் போது நம் உடல் பாகங்களுக்கு தேவையான ஆக்ஸிஜன் முறையாக இருக்காது இதனால் உங்களுக்கு சோர்வு ஏற்படலாம் உடல் எடையில் 5 சதவிகிதம் நீர்ச்சத்து குறைந்தால் கூட வேலை செய்யற திறன் 30 சதவீதம் குறைவதாக சொல்றாங்க அப்படி நம்ம உயிர்வாழ தண்ணீர் உடைய பங்கு எந்த அளவுக்கு முக்கியம் அப்படிங்கிறது நீங்களே பாத்துக்கோங்க .
இது மட்டுமில்லாம உடலுக்கு தேவையான தண்ணீர் பருகாமல் இருக்கும் போது உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியும் குறையும் இதனால் உங்கள் உடல்நிலை அடிக்கடி பாதிக்கப்படலாம் அடிக்கடி நோய்வாய்ப்படும் நபராக இருந்தீங்கன்னா போதுமான அளவு தண்ணீர் குடிக்கிறீர்கள் அப்படிங்கறது கவனிச்சுக்கோங்க.
நாம் உண்ணக்கூடிய உணவு சரியான முறையில் ஜீரணம் ஆகணும்னா தண்ணீர் மிகவும் முக்கியமான ஒன்று தண்ணீர் தேவைக்கு குறைவாக நீங்கள் குடித்து வரும்போது அது மலச்சிக்கலை உண்டாக்கும் உங்களுக்கு அடிக்கடி மலச்சிக்கல் பிரச்சினை வருவதாக இருந்தால் உங்கள் உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் குடிக்கிறீர்கள அப்படிங்கறது செக் பண்ணிக்கோங்க நம்முடைய சர்வ தசைகள் எல்லாமே தண்ணீரை நம்பி தான் இருக்குது தண்ணீர் நீங்கள் குறைவாக குடிச்சிட்டு வரும் போது உங்களுடைய சருமத்தில் சுருக்கங்கள் அதிகமாக உண்டாக வாய்ப்பு இருக்கு சருமத்தில் சுருக்கங்கள் அதிகமாக வருது அப்படின்னு போது நம்ம குடிக்கக்கூடிய தண்ணீரின் அளவை சரிபார்த்து கொள்ள வேண்டியது அவசியமான ஒன்று.
இது எல்லாத்தையும் விட பொதுவா எல்லாருக்கும் தெரிந்த ஒரு சிம்பிளான அறிகுறி என்னன்னா சிறுநீர் அடர் மஞ்சள் நிறத்தில் இருக்கும் போது உங்கள் உடலுக்கு தண்ணீர் தேவை இருக்குது அப்படிங்கற தான் நீங்க புரிஞ்சிக்கணும் போதுமான அளவிற்கு தண்ணீர் குடிக்காமல் இருந்தீங்கன்னா சிறுநீரகக் கோளாறுகள் போன்ற பாதிப்புகள் நமக்கு வந்ததும் தேவையான அளவுக்கு தண்ணீர் குடிக்காமல் இருக்கிறது உடல் நலத்தை மட்டுமில்லாமல் மன நலத்தையும் கெடுக்கிறது அதுமட்டுமில்லாம ஒரு குழப்பமான சூழ்நிலையை நமக்கு உண்டாக்கிவிடும் உங்க உடலுக்கு தேவையான அளவுக்குத் தண்ணீர் பருகுவது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் .
Super... nice
பதிலளிநீக்கு