உடல் எடை குறைய கொய்யா இலை
நம்முடைய அனைத்து நோய்களுக்கும் இயற்கையை தீர்வையும் வழங்கியுள்ளது ஆனால் நமக்குத்தான் அதன் மருத்துவர்கள் தெரிவதில்லை சொல்லப்போனால் பயனற்றது என்று நினைக்கும் சில தாவரங்களில் ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன அந்த வகையில் இங்கே பார்க்கப் போவது கொய்யா இலையின் அளவில்லாத நன்மைகளைப் பற்றி தான் பார்க்கப் போகிறோம்.
சொல்லப்போனால் பலருக்கும் கொய்யா பழத்தின் நன்மைகள் பற்றி தான் தெரியும் ஆனால் கொய்யாப்பழத்தை விடவும் கொய்யா இலையில் தான் மிக அதிக சத்துகள் இருக்கின்றன இது பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வை கொடுக்க கூடியது உண்மையில் ஒரு மாதம் தொடர்ந்து குடித்து வந்தாலே பல நோய்கள் காணாமல் போய்விடும்
அது என்னென்ன நோய்கள் எப்படி பயன்படுத்துவது யாரெல்லாம் அவசியம் சாப்பிட வேண்டும் .
இந்த கொய்யா இலையில் புரதம் விட்டமின் பி விட்டமின் சி கால்சியம் இரும்புச்சத்து மக்னீசியம் மாங்கனீஸ் பாஸ்பரஸ் பொட்டாஷியம் சோடியம் துத்தநாகம் போன்ற சத்துக்களும் மேலும் ஆன்டி ஆக்சிடென்ட்கள் ஆன்டி பாக்டீரியல் தன்மையும் நார்ச்சத்து குறைந்த கிளைசீமிக் இவ்வளவு சத்துக்கள் கொண்ட கொய்யா இலை நமக்கு எந்த வகையில் பயன்படுகிறது.
பொதுவாக நம்முடைய முறையற்ற உணவுப் பழக்க வழக்கங்களில் அதாவது கொழுப்பு சத்து மிகுதியாக உள்ள உணவு வகைகள் தொடர்ந்து சாப்பிடுவதாலும் துரித உணவுகளை அடிக்கடி சாப்பிடுவது புகை பிடிப்பதாலும் நம் உடலில் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிக்கிறது.
அதுமட்டுமல்ல உடற்பயிற்சி இல்லாமல் இருப்பதும் உடல் உழைப்பு இல்லாமல் இருப்பதும் உடல் பருமனாக இருப்பதும் கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிக்கக் காரணமாகும் இந்த எல்டிஎல் கொழுப்பு இதயத்திற்கு செல்லும் இரத்தக் குழாயில் படிந்து ஹார்ட் அட்டாக் மற்றும் மூளைக்கு செல்லும் ரத்தக் குழாயில் தேங்கினால் ரத்த ஓட்டம் தடைபட்டு பக்கவாதம் ஏற்படுகிறது
அதே நேரத்தில் நல்ல கொழுப்பின் தேவையும் முக்கியம் அந்த வகையில் தொடர்ந்து மூன்று மாதங்கள் கொய்யா இலை டீயை குடித்து வந்தால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் கரைந்து நல்ல கொழுப்பின் அளவு பராமரிக்கப்படும்.
மேலும் இந்த இலைகளை தேயிலைத்தூள் போன்று தயார் செய்து வைத்துக் கொண்டு மூன்று மாதங்கள் தொடர்ந்து குடித்து வந்தால் அது உடலில் உள்ள கெட்ட புகை நீக்கி நல்ல கொழுப்பை மட்டும் உடலில் தக்க வைப்பதால் அதிக உடல் எடை குறைய ஆரம்பிக்கும்
அதே போன்று சில பெண்கள் மாதவிடாய் காலங்களில் அதிக உதிரப் போக்கால் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளவர்கள் இவர்கள் கொய்யா இலையை கஷாயம் செய்து சாப்பிட்டு வந்தால் அதிகப்படியான உதிரப் போக்கு நின்றுவிடும்
அடுத்து கொய்யா இலைகள் அதிக அளவு ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளதால் இவை நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க பெரிதும் உதவுகிறது இன்றைக்கு அதிவேகமாக பரவி வரும் வைரஸ் நோய் எதிர்கொள்ள நோய் எதிர்ப்பு சக்தி மிக முக்கியம் அந்த வகையில் இந்த கொய்யா இலை அதிக நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கக்கூடியது
முக்கியமாக கொய்யா இலைகளில் உள்ள அதிக அளவிலான வைட்டமின் சி மற்றும் இரும்பு சத்து சளி மற்றும் இருமலில் இருந்து விடுபட நல்ல தீர்வை கொடுக்கிறது .
மேலும் சுவாச கோளாறுகளுக்கும் மூச்சு அளிக்கும் கொய்யா இலை டீ மிகுந்த நன்மைகளை தருகிறது இதனால் நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் இருந்து எளிதாக விடுபட முடியும் எனவே மூச்சுக்குழாய் அழற்சியால் அவதிப்படுபவர்கள் கொய்யா இலையின் டீயை குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும் .
அடுத்து சர்க்கரை நோய் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துவதில் மா இலைகளை போன்றே கொய்யா இலைகளும் சிறந்த பயன் தருகிறது எனவே சர்க்கரை நோயாளிகள் கொய்யா இலைகளை கொண்டு டீ தயாரித்து குடித்து வந்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்கலாம்
அதிலும் இந்த டீயை தொடர்ந்து 12 வாரங்கள் குடித்து வந்தால் இரத்த சர்க்கரையின் அளவை குறைக்க முடியும்.
முக்கியமாக புற்றுநோயை உண்டாக்கும் புற்றுநோய் செல்களைத் தாக்கி அழிக்கக் கூடிய ஆற்றல் கொய்யா இலைகளில் அதிக அளவில் உள்ளது குறிப்பாக மார்பக புற்றுநோய் இரைப்பை புற்றுநோய் வாய் புற்றுநோய் போன்ற இந்த வராமல் தடுக்க கூடியது
இந்த கொய்யா இலை. காரணம் இதில் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் லைகோபின் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மிக அதிக அளவில் உள்ளன .
ஆண்மை கோளாறு பிரச்சனை உள்ளவர்கள் கொய்யா இலை தேநீரை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும் இது மலட்டுத் தன்மை கட்டுப்படுத்தி விந்து அணுக்களின் உற்பத்தியை அதிகப்படுத்துகிறது மேலும் மூளை வளர்ச்சிக்கும் பெரிதும் உதவுகிறது இதயம் சம்பந்தமான நோய்களுக்கு நல்ல தீர்வைத் தருகிறது.
மேலும் தைராய்டு சுரப்பு சமநிலைக்கு வரும் கல்லீரலையும் சுத்தம் செய்கிறது அடுத்து செரிமானப் பிரச்சினை இருப்பவர்கள் கொய்யா இலையின் டீயை குடித்து வந்தால் செரிமான நொதிகள் தூண்டப்பட்டு செரிமானம் சிறப்பாக நடைபெறும் மேலும் கொய்யா இலை வயிற்றில் உள்ள பாக்டீரியாக்களை அழித்து ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.
அதே போன்று ஏற்படும் வாய்ப்புண் பல்வலி ஈறு பிரச்சனைகள் நீங்கும் இதன் இலைச்சாற்றில் அமிலேசு என்னும் நொதியம் உற்பத்தி செய்யக்கூடிய தன்மை இருப்பதால் பல் வலி ஈறுகளில் உண்டாகும் பிரச்சனைகளை குணப்படுத்துகிறது .
அதேபோன்று இதைத் தயாரித்துச் சாப்பிட்டால் தான் பலன் உண்டு என்பது இல்லை பொடியாகவும் பயன்படுத்தலாம் கொய்யா இலைகளை பொடி செய்து வைத்துக் கொண்டு உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் அடிக்கடி ஏற்படும் செரிமானப் பிரச்சினைகள் முற்றிலும் நீங்கி வயிறு தொடர்பான பிரச்சினைகள் வராமல் தடுக்கலாம்.
அடுத்து கொய்யா இலையின் சாறு பாக்டீரியாக்களை அழிக்கும் திறன் கொண்டது எனவே டயரியா ஏற்பட்டால் இந்த கொய்யா இலை டீ குடித்து வந்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும் மேலும் அந்த சமயத்தில் ஏற்படும் அடிவயிற்று வலியும் குணமாகும் .
இப்பொழுது கொய்யா இலை டீ எப்படி தயாரிப்பது என்று பார்ப்போம் அதில் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி தண்ணீர் கொதி வந்தவுடன் அதில் 5 கொய்யா இலைகளை போட்டு நன்றாகக் கொதிக்க வைக்க வேண்டும் அது கொதிக்கும் போதே அதனுடன் சிறிதளவு இஞ்சி ஏலக்காய் சீரகம் இவற்றை சேர்த்து கொதிக்க வைத்து தேவையான அளவு நாட்டுச்சர்க்கரை சேர்த்து இறக்கி வடிகட்டி பின்பு குளிக்க வேண்டும் இப்படி காலை மாலை இரண்டு வேளையும் சாப்பிட வேண்டும் .
அடுத்து பொடுகுத் தொல்லையால் அவதிப்படுபவர்கள் கொய்யா இலையை அரைத்து செய்து தண்ணீரில் கலந்து தலையில் படும்படி தடவி ஒரு 15 நிமிடம் ஊற வைத்து பின் வெதுவெதுப்பான நீரில் அலச வேண்டும்
மேலும் இப்படிவாரம் ஒருமுறை தலையில் தேய்த்து ஊற வைத்து அலசி பேன் தொல்லை இருந்தாலும் முற்றிலும் நீங்கிவிடும் அதேபோன்று கொய்யா இலை சாற்றை தலையில் தடவி மசாஜ் செய்து வந்தால் ரத்த ஓட்டம் அதிகரித்து முடிகள் மீண்டும் முளைக்க ஆரம்பிக்கும் ஆரோக்கியமாக வளரும்.
மொத்தத்தில் கொய்யா இலையை தொடர்ந்து பருகி வந்தால் புற்றுநோய் ஏற்படும் பாக்டீரியா தொந்தரவுகள் வயிற்றுப்போக்கு டயரியா காய்ச்சல் தொண்டை பிரச்சனைகள் சுவாசக் கோளறுகள் போன்றவை ஏற்படாமலும் அல்லது இது போன்ற நோய்களை குணப்படுத்த முடியும் ,
கருத்துகள்
கருத்துரையிடுக