Pirandai benefits-பிரண்டை மருத்துவ பலன்கள்

  

Pirandai benefits
Pirandai benefits

பிரண்டை மருத்துவ பலன்கள்

பல மூலிகைகளின் நன்மைகள் நமக்கு தெரியாமலேயே போய் விடுகின்றது அந்த வகையில்கொடிபோல படர்ந்து வளரக்கூடிய பிரண்டை எனும் ஒரு அற்புதமான மூலிகை இந்த பிரண்டையை நமது முன்னோர்கள் துவையலாக செய்து சாப்பிடுவது வழக்கம் எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்ட பிரண்டை உடைந்த எலும்புகளை ஒட்ட வைக்கும் தன்மை கொண்டதால் வஜ்ரவல்லி என்று சித்தர்களால் அழைக்கப்பட்டது

 உண்மையில் வாரம் இரண்டு முறை பிரண்டைத் துவையல் செய்து சாப்பிட்டால் நமக்குள் இருக்கும் பல நோய்கள் காணாமலேயே போய்விடும் எந்த ஒரு செயலையும் வெற்றிகரமாக செய்ய வேண்டும் என்றால் உடல் சுறுசுறுப்பாக இருக்க வேண்டியது மிக முக்கியம் ஆனால் சிலர் எப்போது பார்த்தாலும் சுறுசுறுப்பு இல்லாமல் டல்லாக இருப்பார்கள் எந்த ஒரு செயலை செய்வதாக இருந்தாலும் தள்ளிப்போடும் மன நிலையிலேயே இருப்பார்கள்

 இவர்கள் வாரம் இரண்டு முறை உணவில் சேர்த்துக் கொண்டு வந்தால் உடல் சுறுசுறுப்பு அதிகரிக்கும் முக்கியமாக ஞாபக சக்தி அதிகரிக்கும் மூளை நரம்புகள் பலப்படும் அது மட்டுமல்ல மன அழுத்தம் மற்றும் வாய்வு சம்பந்தமான பிரச்சினைகள் இருந்தால் வயிறு செரிமான சக்தியை இழந்து விடும் இந்த நேரங்களில் இந்த துவையல் செய்து சாப்பிட்டால் செரிமான சக்தி தூண்டப்படும் ஜீரணக்கோளாறு குணமாகும்.

 தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் மூல நோய் குணமாகும் முக்கியமாக ரத்த மூலத்திற்கு பிரண்டை கை கண்ட மருந்தாகும் மேல் தோலை சீவி விட்டு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொண்டு அதனை நெய்யில் வதக்கி தேவையான அளவு உப்பு புளி காரம் சேர்த்து அரைத்து பிறகு கடுகு உளுந்து சேர்த்து துவையல் செய்து சாதத்துடன் சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும்

 மற்றும் சிறிய துண்டுகளாக நறுக்கி நெய்விட்டு வதக்கி நன்கு அரைக்க வேண்டும் இந்த விழுதை நெல்லிக்காய் அளவு உருண்டைகளாக பிடித்து நிழலில் உலர்த்தி வைத்துக்கொள்ள வேண்டும் இதனை காலை மாலை இரண்டு வேளையும் சாப்பிட்டு வந்தால் ரத்த மூலம் குணமாகும் இந்த உருண்டைகளை அதிக நாட்கள் வைத்திருக்க வேண்டாம் 

பிரச்சனைகள் பொதுவாக ரத்த குழாய்களில் கொழுப்பு படிவதால் இரத்த ஓட்டத்தின் வேகம் குறையும் இதனால் இதயத்திற்கு தேவையான இரத்தம் செல்வது தடைபட்டு இதய வால்வுகள் பாதிப்படைந்து இதய நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் 

இது போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கும்  அனைவருமே அடிக்கடி இந்த துவையலை சாப்பிட்டு வந்தால் இரத்த ஓட்டம் சீராகும் இதயம் பலப்படும் அடுத்து குடல் புழுக்கள் வளரும் குழந்தைகளுக்கு எவ்வளவு தான் பார்த்துப் பார்த்து நல்ல சத்தான உணவை கொடுத்தாலும் அவர்கள் உடல் மெலிந்து காணப்படுவார்கள் இதற்கு முக்கிய காரணம் வயிற்றில் இருக்கும் குழந்தைகள் சாப்பிடும் உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களை நாளடைவில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் இது குடல் புழுக்களை போக்கும் அருமையான மருந்து அதுமட்டுமல்ல குழந்தைகளுக்கு தொடர்ந்து கொடுத்து வந்தால் எலும்புகள் உறுதியாக வளரும் 

அடுத்து நன்றாக முற்றிய பிரண்டைத் துண்டுகளை சிறு துண்டுகளாக நறுக்கி மோரில் போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து ஊறவைத்து உலர்த்தி வற்றல்களாக செய்து வைத்து கொள்ள வேண்டும் இந்த வற்றலை எண்ணெயில் பொரித்து சாப்பிட்டால் பசியின்மை நாக்கு சுவையின்மை குணமாகும் 

முக்கியமாக பிரண்டையை வாரம் இரண்டு முறை உணவில் சேர்த்துக் கொள்ளும் போது அதில் உள்ள சத்து ரத்தத்தில் கலந்து உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது வைரஸ் போன்ற கிருமிகளால் ஏற்படும் நோய்களையும் காய்ச்சல் போன்றவை ஏற்படாமல் தடுக்கிறது  மாதவிடாய் பிரச்சனை உள்ளவர்கள் பிழிந்து சாறு எடுத்து ஒரு ஸ்பூன் அளவு சாற்றுடன் ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெய் கலந்து காலையில் மட்டும் சாப்பிட்டு வந்தால் மாதவிடாய் ஒழுங்காக வரும் அதுமட்டுமல்ல பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் முதுகு வலி இடுப்புவலி இவற்றிற்கும் இது நல்ல தீர்வைக் கொடுக்கும் 

அதே போன்று எலும்பு சம்பந்தமான பிரச்சனைகள் எலும்புகள் சந்திக்கக்கூடிய இணைப்பு பகுதிகளிலும் நரம்பு முடிச்சுகளிலும் வாயுவின் சீற்றத்தால் தேவையற்ற நீர் தேங்கிவிடும் இதன் காரணமாக பலர் முதுகுவலி கழுத்து வலியால் அவதிப்படுவார்கள் மேலும் முதுகுத் தண்டு வழியாக இறங்கி சளியாக மாறி முதுகு மற்றும் கழுத்துப் பகுதியில் இறங்கி இறுகிக் கொள்ளும் இதனால் பாதிக்கப்பட்டவர்கள் தலையை அசைக்க கூட முடியாமல் அவதிப்படுவார்கள் இந்த பாதிப்புகளில் இருந்து விடுபடுவதற்கு பிரண்டைத் துவையல் சிறந்த மருந்து 

அதேபோன்று எலும்பு முறிவு ஏற்பட்டால் உடைந்த எலும்புகள் விரைவாகவும் இது உதவுகின்றது அதாவது நன்கு காயவைத்து தூளாக்கி வைத்துக் கொண்டு நீரில் குழைத்து உள்ள பகுதியில் பூசி வந்தால் எலும்பு விரைவில் கூடும் உலர்த்தி பொடி செய்து ஒரு கிராம் அளவு கொடுத்து வந்தால் முறிந்த எலும்புகளை ஒன்று கூடும் 

இந்த பிரண்டை பொடி நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கின்றது அடுத்து சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு சிறந்த இயற்கை உணவுகளில் இரண்டையும் ஒன்று இதில் நிறைந்திருக்கும் காரத்தன்மை உடலில் ஓடும் ரத்தத்தில் சர்க்கரை அதிகரிக்காமல் தடுத்து சர்க்கரை நோயாளிகள் இறக்கும் உடல் பலத்தை மீண்டும் தருகின்றது 

மேலும் நன்கு அரைத்து அந்த சாற்றை ஆஸ்துமா மற்றும் நுரையீரல் சம்பந்தமான நோய்கள் உள்ளவர்கள் அருந்தி வந்தால் சிறந்த பலன் கிடைக்கும் நுரையீரல் மற்றும் சுவாசக் குழாயில் தேங்கியிருக்கும் நச்சுக்களை வெளியேற்ற மொத்தத்தில் வாரம் இரண்டு முறை பிரண்டைத் துவையலை உணவில் சேர்த்து வந்தால் வாயுத் தொல்லை அஜீரணக் கோளாறுகள் நீங்குவதோடு குடலில் தங்கியிருக்கும் அழுக்குகள் மற்றும் நச்சுக்கள் நீங்கி சுத்தமாகிறது 

மேலும் எலும்புகளை பலப்படுத்தும் இதயத்தை வலிமையாக்கும் மலச்சிக்கல் வராமல் தடுக்கும் சர்க்கரையை கட்டுக்குள் வைக்கும் நுரையீரல் பிரச்சனைகளை போக்கும் மாதவிடாய் சம்பந்தமான கோளாறுகளை போக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் குடல் புழுக்களை விரட்டும் முக்கியமாக உடலுக்கு சுறுசுறுப்பை கொடுக்கும் எனவே நீங்களும் பிரண்டையை தேடிப்பிடித்து வாங்கி வந்து வாரத்தில் 2 முறை சாப்பிட்டு பாருங்கள் விரைவிலேயே இதன் பலன்களை கண்கூடாக காணமுடியும்

கருத்துகள்