கோடையில் சூட்டை அதிகரிக்கும் உணவுகள்--body cooling foods ayurveda

 

பொதுவாக கோடை காலம் வந்துவிட்டாலே உணவு விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம் காரணம் சில உணவுகள் உடல் சூட்டை அதிகரித்து விடும் 

அது மட்டுமல்ல நமது உடலில் சாதாரண நேரத்தில் இருக்கும் வெப்பத்தை விட கோடைகாலத்தில் உடலின் வெப்பமானது அதிகமாகவே இருக்கும் இன்னும் சொல்லப்போனால் சிலரது உடலில் இயல்பாகவே உடல் சூடு அதிகமாக இருக்கும் இவர்கள் உடலைத் தொட்டால் காய்ச்சல் உள்ளது போன்று சுடுமணல் காய்ச்சல் இருக்காது காரணம் இவர்களின் உடல் எப்போதுமே அதிகப்படியான வெப்பத்தை எதிர் கொள்வதால் தான்

 அதாவது உடலில் நீர் வறட்சி ஏற்படுதல் காற்றோட்டம் இல்லாத இடங்களில் இருப்பது அதிக வெயிலில் அலை வது உடலில் சூடு அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு இவர்கள் இன்னும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் 

உண்மையில் உடல் சூட்டால் பல்வேறு உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை செய்கிறார்கள் ஏற்கனவே பல உடல்நல தொந்தரவுகள் உள்ளவர்களுக்கு இதன் பாதிப்பு அதிகமாக இருக்கும் 

அதாவது அதிக வெப்பத்தால் இதய ஆரோக்கியத்தை பாதிக்கும் மென்மையான திசுக்களை சேதப்படுத்தும் மூளை மற்றும் உடல் முழுவதும் உள்ள நரம்பு செல்களை பாதிக்கும் நினைவாற்றல் குறைபாடு மற்றும் மயக்கம் போன்றவற்றை கூட ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை செய்கிறார்கள் 

மேலும் வெயில் காலத்தில் வெப்ப நிலை அதிகமாக இருப்பதால் உடலில் இருந்து வியர்வை மூலம் நீர் இழப்பு அதிகமாக இருக்கும் இதனால் உடல் சோர்வு ஏற்படும் மேலும் உடலில் போதுமான நீர் இல்லாமல் போவதால் மயக்கம் அஜீரணம் மற்றும் சரும பிரச்சனைகள் வரக்கூடும்

 இதைத் தடுக்க உணவு விஷயத்தில் அக்கறை காட்டுவது அவசியம் அந்த வகையில் இங்கே பார்க்கப் போவது கோடையில் தவிர்க்க வேண்டிய உணவுகள் பற்றி தான் முதல் விஷயம் கார உணவுகள் கோடையில் கார உணவுகளை அறவே தவிர்க்க வேண்டும் 

கார உணவுகளைச் சாப்பிடும்போது உடல் வெப்பமானது மேலும் அதிகரிக்கும் அதிலும் பச்சை மிளகாய் இஞ்சி மிளகு பட்டை போன்ற உணவிற்கு காலத்தைத் தரும் மசாலா பொருட்களை அதிகமாக சேர்த்துக் கொள்ளாமல் குறைவாக பயன்படுத்துவது நல்லது

 மேலும் வெயில் காலத்தில் உணவில் அதிக புளிப்பு இவற்றை குறைத்துக் கொள்வது நல்லது அடுத்து முக்கியமாக கோடையில் அசைவ உணவுகளான மட்டன் நாட்டுக் கோழி மீன் இவற்றை கோடைகாலத்தில் குறைத்துக்கொள்வது நல்லது இவைகளும் உடல் சூட்டை அதிகரித்து விடும் 

முக்கியமாக இவற்றை எண்ணெயில் வறுக்காமல் குழம்பு போன்ற வைத்து சாப்பிடுவது இன்னும் நல்லது பொதுவாக எண்ணெயில் பொரித்த அல்லது வறுத்த உணவுகளை அதிகம் சாப்பிட்டாலும் உடல் வெப்பம் அதிகரிப்பதோடு வாயுத் தொல்லையும் உண்டாகும் மேலும் அசைவ உணவுகளை எண்ணெயில் பொரித்தால் அதில் இருக்கும் புரத சத்துக்கள் எண்ணெயில் கலந்து உடலுக்கு கிடைக்காமல் போய்விடும் 

அதுமட்டுமல்ல நண்டு இறால் போன்ற சூட்டை அதிகரிக்கும் அசைவ உணவுகளை கோடையில் அறவே தவிர்ப்பது நல்லது மேலும் சுகாதாரம் இல்லாத சாலை கடைகளில் விற்கப்படும் உணவு வகைகளையும் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது இவைகள் சில சமயங்களில் சூட்டை கிளப்பி வயிற்றுப் போக்கை உண்டாக்கும் 

உடலில் இருந்து நீரை வெளியேற்றிவிடும் அதேபோன்று துரித உணவுகளே விஷயம் என்றே கூறுகிறார்கள் பீட்சா பர்கர் போன்ற உணவு வகைகள் செரிமானம் ஆக அதிக நேரம் எடுத்துக்கொள்வதால் இந்த நேரத்தில் உடல் வெப்பமானது அதிகரிக்கும் 

அதுமட்டுமல்ல இது போன்ற துரித உணவுகளைத் தொடர்ந்து சாப்பிடுவதால் இதயம் நுரையீரல் போன்ற முக்கிய உடல் உறுப்புகள் பாதிக்கப்படும் மேலும் துரித உணவுகளை என்றாவது ஒரு நாள் சாப்பிடலாம் தினமும் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் 

அடுத்து வெள்ளை சர்க்கரை அதிகமுள்ள இனிப்புப் பலகாரங்கள் கிரீம் மிகுந்த உணவுகள் இவற்றை தவிர்ப்பதும் நல்லது அதேபோன்று கோடையில் விலையும் பழங்களான மாம்பழம் பலா அன்னாசி போன்ற பழங்கள் மருத்துவர்கள் கொண்டது என்றாலும் அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொண்டால் நிச்சயம் உடல் சூட்டை அதிகரிக்கும்

 அதே போன்று உலர் பழங்கள் மிகவும் ஆரோக்கியமானவை என்றாலும் இவைகளில் உடலை வெப்பப்படுத்தும் தன்மையும் அதிகம் உள்ளது எனவே இதனை கோடைகாலத்தில் விட வேண்டும் அடுத்து காய்களில் சூட்டை அதிகரிக்கும் கத்திரிக்காய் மற்றும் கிழங்கு வகை உணவுகள் அடிக்கடி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும் இதற்கு மாற்றாக பரங்கிக்காயை சேர்த்து வரலாம் பரங்கிக்காயில் பொட்டாசியம் நார்ச்சத்து போன்றவை ஏராளமாக உள்ளது

 இதனை கோடையில் சாப்பிட்டு வந்தால் இரத்த சர்க்கரை அளவு சீராக இருக்கும் உடல் வெப்பம் குறையும் மேலும் பால் சீஸ் போன்றவையும் உடல் வெப்பத்தை அதிகரிக்கும் எனவே இதனை கோடையில் அளவாக சாப்பிடுவது நல்லது அது மட்டுமல்ல காபி மற்றும் டீ உடல் வெப்பத்தை அதிகரிக்கும் என்பதால் அவற்றைத் தவிர்ப்பது நல்லது

 இதற்கு மாற்றாக கிரீன் டீ அருந்தலாம் கிரீன் டீயில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் என்பதால் உடல் நிலை சீராக வைத்துக் கொள்ளும் அடுத்து ஐஸ் வாட்டர் மற்றும் குளிர்பானங்கள் இதில் உள்ள அதிக குளிர்ச்சியானது ரத்தக் குழாய்களைச் சுருக்கி உடலின் வெப்பத்தை இன்னும் அதிகமாக்கி விடுகிறது

 அதுமட்டுமல்ல வெயிலில் அலைந்து திரிந்து வீட்டிற்கு வரும் பொழுது அனைவரும் நாடுவது இந்த ஐஸ் வாட்டர் மற்றும் கெமிக்கல் நிறைந்த குளிர்பானங்களை தான் உண்மையில் இது உடலில் வெப்பத்தை அதிகரிப்பதோடு உடலில் உள்ள சிறுநீர் மூலமாக அதிக அளவில் வெளியேற்றிவிடும்

 உண்மையில் குளிர்ச்சியாக இருக்கும் ஐஸ்கிரீம் மற்றும் குளிர்பானங்கள் இரண்டுமே வாய்க்கு மட்டுமே குறிச்சி தவிர உடல் வெப்பத்தை அதிகரிக்க கூடியது சொல்லப்போனால் குளிர்பானங்கள் சோடா இவற்றை வெயில் காலத்தில் மட்டுமல்ல எந்த காலத்திலுமே அருந்துவதைத் தவிர்ப்பது நல்லது

 இதற்கு பதிலாக ஃப்ரூட் ஜூஸ் அருந்துவது நல்லது அதேபோன்று கோதுமை மற்றும் மைதா மாவினால் செய்யப்படும் சப்பாத்தி செரிமானம் ஆவதற்கு நிறைய நேரம் எடுத்துக் கொள்ளும் இதனால் இந்த நேரத்தில் உடல் வெப்பமானது அதிகரிக்கும் அதில் வெற்றி அறவே தவிர்ப்பது நல்லது

 அது மட்டுமல்ல பயிராகி வேர்க்கடலை இவற்றையும் அதிகம் சாப்பிடாமல் குறைத்து சாப்பிடுவது நல்லது அடுத்து முக்கியமாக கோடையில் மற்ற காலங்களில் குடிக்கும் தண்ணீரின் அளவை விட அதிகமான அளவில் பருக வேண்டும் இதனால் உடல் வறட்சி அடைவதைத் தடுக்கலாம் இறுக்கமான ஆடைகளை அணியாமல் இருப்பது குளிர்ச்சியான பழங்கள் மற்றும் காய்களை சாப்பிடுவது போன்றவை உங்கள் உடல் சூட்டை குறைக்கும்

 மேலும் நீர்சத்துள்ள வெள்ளரிக்காய் தர்பூசணி கிர்ணி பழம் இளநீர் எலுமிச்சை ஜூஸ் பழவகைகளை அதிகம் சாப்பிடுவதும் நல்லதே இது எதுவும் கிடைக்காவிட்டாலும் நீ ஒருபோதும் காரணம் ப்ரோபயாடிக் உள்ளதால் உடல் வெப்பநிலையை சமமாக வைத்துக் கொள்ளும்

 அதுமட்டுமல்ல போதிய இடைவெளியில் தண்ணீர் குடிக்கவில்லை என்றால் உடலில் நீரிழப்பு ஏற்படும் நீரிழப்பு ஏற்பட்டால் சரும வறட்சி ஆகிவிடும் மேலும் இதனால் மலச்சிக்கல் பிரச்சினை ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது அதே போன்று தண்ணீர் குறைவாகக் குடிப்பது சிறுநீர் பாதை தொற்று ஏற்பட வாய்ப்புகள் அதிகம் எனவே தண்ணீர் அதிகம் குடிப்பது நல்லது 

பொதுவாக நோய் வந்த பிறகு அவதிப்படுவதை விட நம்முடைய நாக்கை கட்டுப்பாட்டோடு வைத்துக்கொண்டு உணவு விஷயத்தில் அக்கறை செலுத்தினால் போதும் கோடை காலமும் வசந்த காலமாக மாறும் 

கருத்துகள்