பொதுவாக மூலிகை என்றால் ஏதோ பெரிய மலைக்காடுகளில் தான் இருக்கும் என்று பலர் நினைக்கலாம் உண்மையில் மழைக்காடுகளில் மட்டுமல்ல நம்மைச் சுற்றிலும் அதாவது நம் வீட்டருகே சாலை ஓரங்களில் தோட்டங்களிலும் வயல் வரப்புகளிலும் ஏராளமன மூலிகைகள் வளர்கின்றன
சொல்லப்போனால் நாம் தேவை இல்லை என்று பிடிங்கி எறியும் அதாவது களைகள் என்று ஒதுக்கும் புல் பூண்டு செடி கொடிகள் அனைத்தும் மாபெரும் மருத்துவத் தன்மை கொண்டவை அதில் ஒன்றுதான் இந்த குப்பைமேனி கீரை நோய்களால் குப்பை போல் ஆகிவிட்ட மேனியை குணப்படுத்துவதால் இதை குப்பைமேனி என்று நமது பெரியோர்கள் சொல்லி வைத்துள்ளார்கள்
இதில் எண்ணிலடங்காத மருத்துவ நன்மைகள் கிடைக்கின்றது இதன் நன்மைகள் ஒவ்வொன்றாக நீங்கள் பார்க்கும்போது இதில் இவ்வளவு நன்மைகள் இருக்கா என்று நீங்களும் ஆச்சரியப்படுவீங்க
ஆரோக்கியமாக இருப்பதற்கு நம் உடலில் உள்ள ரத்தம் சுத்தமாக இருக்க வேண்டியது அவசியம் உண்மையில் ரத்தம் கெட்டுப் போனால் பல உடல்நல பாதிப்புகள் ஏற்படும் அதாவது முகப்பரு அலர்ஜி தலைவலி மஞ்சள் காமாலை முகத்தில் சுருக்கம் ஏற்பட்டு இளமையில் முதுமையா காணப்படுதல் உடல் எரிச்சல் தலை சுற்றல் கண் பார்வை மங்குதல் மூட்டு வலி முடி உதிர்தல் உடல் சோர்வு ஏற்பட ரத்தம் சுத்தம் இன்மையும் ஒரு காரணம் எனவே இரத்தம் சுத்தமாக இருக்க வேண்டியது மிக மிக முக்கியம் இப்படி ரத்தத்தை சுத்தமாக்கி உடலை பலம் பெற வைக்கும் ஒரு மூலிகை தான் இந்த குப்பைமேனி கீரை
இதற்கு ஒரு குப்பைமேனி செடியை வேருடன் பிடுங்கி எடுத்துக்கொண்டு நன்கு அலசி அதனுடன் 6 மிளகு சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும் இந்த கலவையை காலையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய் அளவு எடுத்து விழுங்கி விட வேண்டும் இப்படி வாரம் ஒரு முறை என்ற அளவில் மூன்று வாரம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள அசுத்த ரத்தம் சுத்தமாகி இரத்த ஓட்டமும் இதனால் உடல் தளர்ச்சி நீங்கி புத்துணர்வு உண்டாகும்
அதே போன்று ஒற்றைத் தலைவலி உள்ளவர்கள் குப்பைமேனிக் கீரையுடன் சிறிது உப்பு சேர்த்து அரைத்து பற்றுப் போட்டு வந்தால் தலைவலி உடனே குறையும் அதே போன்று சிறியவர்களுக்கு மட்டுமில்லாமல் பெரியவர்களுக்கும் உள்ள ஒரு பிரச்சனை குடல் புழுக்கள் இதற்கு சிறந்த தீர்வு இந்த குப்பைமேனி கீரை இதற்கு வேருடன் குப்பை மேனிச் செடியைப் பிடிங்கி நன்கு கழுவி சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கி சுக்கு வெள்ளைப் பூண்டு சீரகம் சேர்த்து கஷாயம் செய்து குடித்து வந்தால் உடலில் உள்ள புழு பூச்சிகள் மொத்தமும் இருந்து மலம் வழியாக வெளியேறி விட முக்கியமாக இது மிகச் சிறந்த மலமிளக்கியாகவும் செயல்படுகிறது
குப்பைமேனி இலைச் சாற்றை காய்ச்சிய பாலில் கலந்து குடித்து வர சுவாசக் கோளாறுகள் நீங்குவதோடு மலச்சிக்கலும் நீங்கும் அதே போன்று தோல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு இந்த குப்பைமேனி கீரை கைகண்ட மருந்து எனவே தோல் நோய் உள்ளவர்கள் குப்பைமேனி இலையை ஒரு கைப்பிடி அளவு எடுத்துக் கொண்டு சிறிது மஞ்சள் உப்பு சேர்த்து அரைத்து நோய் பாதித்த இடங்களில் பூசி வைத்திருந்து ஒரு மணி நேரம் கழித்து குளித்து வந்தால் தோல் நோய் குணமாகும் மேலும் காயங்கள் மற்றும் தீப்புண்கள் ஆறும் அதே போன்று உடலில் ஏதாவது புண்கள் இருந்தால் குளிக்கும் வெந்நீரில் குப்பைமேனி இலைகளைப் போட்டு சிறிது நேரம் கழித்து குளித்து வந்தால் உடலிலுள்ள புண்கள் மறையும்
அடுத்து படுக்கைப் புண் உள்ளவர்களுக்கும் இது ஒரு சிறந்த மருந்து குப்பைமேனி இலைகளை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி இளஞ்சூட்டில் படுக்கைப் புண் மீது கட்டி வந்தால் புண்கள் விரைவில் ஆறிவிடும் அதைப்போன்று குப்பைமேனி இலைச் சாற்றுடன் சுண்ணாம்பு சேர்த்து குழைத்து பூசினால் படர்தாமரை சொறி சிரங்கு பூச்சிக்கடி குணமாகும் இன்னும் சொல்லப்போனால் சுகாதாரமில்லாத மற்றும் கலப்பட உணவுகள் உடலில் உண்டாகும் அசுத்த நீரை வெளியேற்ற 10 கிராம் குப்பைமேனி வேரை நன்றாக அரைத்து நீரில் கரைத்து கஷாயம் செய்து குடித்து வந்தால் உடலில் உள்ள தேவையற்ற விஷநீர் வெளியேறும்
அதைப் போன்று இந்த குப்பைமேனி வீக்கத்தை குறைக்கும் தன்மை உடையது எனவே தேள் பூரான் வண்டுக்கடி வீக்கத்தின் மீது குப்பைமேனியை உடன் கலந்து போட்டு வந்தால் விஷம் முறியும் வீக்கம் மறையும் மேலும் குப்பைமேனியை விளக்கெண்ணெயில் வதக்கி மூட்டு வலி இருக்கும் இடத்தில் வைத்து கட்டினால் வலியும் குறையும் வீக்கத்தையும் குறைக்க அடுத்து உடல் அழகு பெற பார்த்து குப்பைமேனி இலைகளை பசும்பாலுடன் சேர்த்து வேக வைத்து சாப்பிட்டு வந்தால் ஆரோக்கியம் கிடைக்கும் மேலும் இது சளியையும் குணப்படுத்தும் இதற்கு குப்பைமேனி இலைகளை ஒரு கைப்பிடி அளவு எடுத்துக்கொண்டு லேசாக நசுக்கி தண்ணீரில் விட்டுக் கொதிக்க வைத்து கஷாயமாக்கி வடிகட்டி குடித்து வந்தால் சளி இருமல் கட்டுப்படும் முக்கியமாக மூலநோய் உள்ளவர்களுக்கு குப்பைமேனி கீரை நல்ல மருந்து
குப்பைமேனி இலைகளை காயவைத்து தூளாக்கி வைத்துக் கொண்டு அதில் கால் ஸ்பூன் அளவு எடுத்து நெய் சேர்த்து ஒரு மண்டலம் அதாவது 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எல்லா வகை மூலமும் குணமாகிவிடும் அதேபோன்று குப்பைமேனி இலையை அரைத்து வாய்வழியாக சிறிய நெல்லிக்காய் அளவு உட்செலுத்த நாள்பட்ட மலக்கட்டு நீங்கும் மேலும் இந்த இலையை சாறு எடுத்து சிறிது உப்பு சேர்த்து குடித்தாலும் நீங்கும்
அடுத்து இது முகத்தின் அழகையும் மேம்படுத்துகிறது இதற்கு குப்பைமேனி இலைகளை மஞ்சளுடன் சேர்த்து அரைத்து முகத்தில் பூசி வந்தால் பெண்களுக்கு முகத்தில் வளரும் முடிகள் உதிர்ந்து முகம் பொலிவாக மாறும் அதுமட்டுமல்ல குப்பை மேனி இலையுடன் மஞ்சள் வெள்ளைப் பூண்டு சேர்த்து விழுதாக அரைத்து முகப்பரு கரும் புள்ளிகள் மீது தடவி வந்தால் அவை நீங்கி முகம் பொலிவு பெறும் அதே போன்று கருப்பை வாய் புண் உள்ளவர்கள் ஒரு கைப்பிடி குப்பைமேனிக் கீரையை நன்றாக அலசி வைத்துக் கொண்டு 10 சின்ன வெங்காயத்தையும் பொடியாக நறுக்கி நல்லெண்ணெயில் வதக்கி அதனுடன் இந்த கீரையையும் சேர்த்து வதக்கி ஒரு ஏழு நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கருப்பை வாய்ப் புண் ஆறும்
அடுத்து முக்கியமாக குப்பைமேனி இலைச்சாற்றை வாரத்தில் இரண்டு முறை அருந்துவதால் ரத்தத்தில் அதிகரித்து உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும் என்பதால் சர்க்கரை நோயாளிகள் இந்தக் கீரையை பயன்படுத்தி இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ளலாம் எதற்கெடுத்தாலும் மருத்துவரிடம் செல்வதை விட இது போன்ற நம் அருகில் எளிதில் கிடைக்கக்கூடிய இதுபோன்ற மூலிகைகளை உடல்நல பிரச்சனைகளுக்கு பயன்படுத்திக் கொண்டால் உடலும் ஆரோக்கியமாக இருக்கும் பக்க விளைவுகளும் இருக்காது
எனவே இனி நீங்களும் இந்த குப்பைமேனிக் கீரையை பார்த்தால் அலட்சியப்படுத்தாமல் பயன்படுத்தி உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்
கருத்துகள்
கருத்துரையிடுக