musumusukkai benefits-முசுமுசுக்கை கீரை பயன்கள்

 

முசுமுசுக்கை கீரை பயன்கள்

 சித்தர்கள் உழைத்த சிறந்த மூலிகைகளில் முசுமுசுக்கை மூலிகையும் ஒன்று இதன் இலைகள் மற்றும் வேர்கள் மருத்துவ பயன்கள் மிக அதிகம் உடல் வளர்ச்சிக்குத் தேவையான புரோட்டீன் சத்தும் விட்டமின் சி சத்து நிறைந்தவை இரும்புச்சத்து கால்சியம் மற்றும் நார்ச்சத்து மிகவும் திகழ்வதால் முசுமுசுக்கை இலைகளை துவையல் போல அல்லது அடை போன்றவை இன்றும் கிராமங்களில் சாப்பிட்டு வருகிறார்கள் முக்கியமாக இது சாதாரண சளி முதல் ஆஸ்துமா வரை உள்ள தீர்க்க முடியாத பல நோய்களையும் எளிதில் குணமாக்கிவிடும் 

 இந்த முசுமுசுக்கையை எந்தெந்த நோய்களுக்கு எப்படி பயன்படுத்த வேண்டும் உணவில் அடிக்கடி சேர்த்து உண்பதால் கிடைக்கும் எண்ணற்ற மருத்துவ பயன்கள் பற்றி தான் இங்கு பார்க்க போகிறோம்முசுமுசுக்கை இலைகளைசின்ன வெங்காயத்துடன் சேர்த்து அரைத்து அத்துடன் நல்லெண்ணெயில் வதக்கி அதை உணவில் கலந்து சாப்பிட்டு வர சுவாச பாதிப்புகளால் சரியாக சுவாசிக்க முடியாமல் மூச்சுத் திணறல் ஏற்பட்ட பாதிப்புகள் நீங்கி சுவாசம் சீராகும்

 மேலும் இரத்தத்தில் கலந்த நச்சுகளை வெளியேற்றும் அடுத்து ஊறவைத்து புழுங்கல் அரிசியுடன் சிறிது முசுமுசுக்கை இலைகளை சேர்த்து தோசை மாவு பதத்தில் அரைத்து தோசை வார்த்து சாப்பிட சளி காய்ச்சல் இன் தீவிரத்தால் நாவில் ஏற்பட்ட ருசியின்மை மாறி சளித் தொல்லையும் படிப்படியாக விலகும்

 அடுத்ததாக முசுமுசுக்கை கீரை துவையல் மற்றும் பொறியியல் போன்ற உணவுகளை தினமும் சாப்பிட்டுவர மனநல பாதிப்புகள் சரியாகி உணர்வுகள் கட்டுப்படும் இதனால் முகமும் அமைதியாகி பொலிவாக மாறும் ரத்தம் சுத்தமாகி அதிக ரத்த அழுத்த பாதிப்புகள் விலகி உடல் நலம் மேம்படும்

 முக்கியமாக இது கடுமையான சுவாச பாதிப்புகளான ஆஸ்துமா மற்றும் டிபி என்னும் எலும்புருக்கி வியாதிகளை சரிசெய்து நுரையீரலை சீராகி உடல் நலம் காக்கும் அரிய மூலிகையாகும் இதற்கு நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் முசுமுசுக்கை சூரணத்தை வாங்கி பயன்படுத்தலாம் 

அதேபோன்று முசுமுசுக்கை பொடியை தண்ணீரில் கலந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் இருமல் குணமாகும் மூச்சுக் குழாயில் ஏற்படும் நோய் தொற்றுக்கு சிறந்த மருந்தாக இது பயன்படுகிறது அடுத்து முக்கியமாக தினமும் முசுமுசுக்கை இலைகளை துவையல் போல உணவில் சேர்த்து அல்லது ஆடை போல செய்து சாப்பிட்டு வர விரைவில் குறட்டை பாதிப்பு விலகி நிம்மதியாக உறங்கலாம்

 மேலும் இது ஆண்மையை அதிகரிக்கச்செய்யும் இதேபோன்று முசுமுசுக்கை சாறு நல்லெண்ணெய் இரண்டையும் சம அளவு எடுத்து காய்ச்சி அந்த எண்ணெயை வாரம் 2 முறை தேய்த்துக் குளித்துவர உடல் சூடு கண் எரிச்சல் குணமாகும் மேலும் இதனை அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் நாள்பட்ட நோய்களால் தளர்ந்து போன உடல் பலமடையும் மேலும் மனதில் அமைதியின்மை கோபம் ஆகியவற்றையும் சரி செய்யக்கூடியது 

அதேபோன்று நெஞ்சில் உறைந்து கிடக்கும் கபம் வேரோடு வெளிப்படும் வறட்டு இருமல் தலைவலி தீரும் எனவே நீங்களும் வாரம் இரு முறையாவது முசுமுசுக்கையை ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்து வந்தால் சளி நுரையீரல் சம்பந்தமான நோய்கள் வராமல் தடுக்கலாம் 

கருத்துகள்