naval palam benefits -நாவல் பழம் மருத்துவ குணங்கள்

-நாவல் பழம் மருத்துவ குணங்கள்

நாவல் பழம் மருத்துவ குணங்கள்

பார்த்தவுடன் வாங்கி சுவைக்க தூண்டும் பழம் தான் இந்த நாவல் பழம் இதன் நிறமும் சுவையும் அப்படி. இது ஏராளமான நன்மைகளை கொண்டது என்பது உங்களுக்கு ஓரளவு தெரிந்திருக்கும்  நாவல் பழம் உண்மையில் இயற்கையால் நமக்காக வழங்கப்பட்ட அற்புதமான உணவு என்றே இதைச் சொல்லவேண்டும்

 பொதுவாக அந்தந்த சீசனில் இயற்கையால் படைக்கப்பட்ட இது போன்ற உணவுகளை நாம் கண்டிப்பாக தவிர்க்கக்கூடாது சொல்லப்போனால் இந்த நாவல் பழம் பல நோய்களைப் போக்கும் அற்புதமான மருந்தாக பயன்படுகிறது அப்படி என்ன நன்மைகள் இதில் இருக்கு என்ற கேள்வி உங்களுக்கு வரும்

 நாவல் பழத்தில் அதிக அளவு நார்சத்து உள்ளது பொதுவாக உடல் ஆரோக்கியமாக இருக்க நார் சத்தும் மிகமிக அவசியம் அதாவது சாப்பிடும் உணவில் நார்சத்து அதிகம் இருந்தால் உடலில் உள்ள கலோரிகளை குறைத்து உடல் பாதுகாக்கும் உடலில் உள்ள கொழுப்பை குறைத்து இதயம் தொடர்பான பிரச்சனைகள் வராமல் தடுக்கும் ரத்த ஓட்டமும் சீராக இருக்கும்

 மேலும் உடலுக்கு வலிமை சேர்க்கும் முக்கியமாக மலஇளக்கி உடலில் தங்காமல் அவ்வப்போது வெளியேறிவிடுவதால் மலச்சிக்கல் வராமல் தடுக்கும் சொல்லப்போனால் நார்சத்து உடலுக்கு போதுமான அளவு கிடைக்காத போதுதான்  மலச்சிக்கல் ஏற்பட வாய்ப்புகள் உண்டாகும் அந்த வகையில் நாவல் பழத்தில் அதிக அளவு நார்ச்சத்துக்கள் உள்ளதால் நம் உடலுக்கு பல நன்மைகளை அளிக்கக் கூடிய நாவல் பழத்தை தினமும் சாப்பிடுவது நல்லது 

அடுத்து சர்க்கரை நோய்க்கு இன்றைக்கு எல்லோர் வீட்டிலும் ஒரு சர்க்கரை நோயாளிகள்  இல்லாமல் இல்லை அந்த வகையில் ஆன்டிபயாடிக் பண்புகளை இந்தநாவல் பழம்உதவுகிறது  இதனை தினமும் சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கணிசமாக குறையும்

 மேலும் சர்க்கரை நோய் வராமலும் தடுக்கும் இன்னும் சொல்லப்போனால் நாவல் பழங்களை காட்டிலும் அதன் விதையை பவுடராக்கி சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகுந்த பலன் கொடுக்கும் விதைப்பொடி கணையத்தில் இன்சுலின் சுரப்பை அதிகரிக்க உதவுகிறது ஆய்வு ஒன்றிலும் இந்தப் பவுடரை தொடர்ந்து எடுத்துக் கொண்டவர்களை பரிசோதனை செய்து பார்த்ததில் அவர்களது சர்க்கரை அளவும் சிறுநீரில் வெளியேறிய சர்க்கரை அளவும் குறைந்தது என கண்டறியப்பட்டது 

உண்மையில் இதன் விதைகள் ஆனது ஸ்டார் சர்க்கரையாக மாறுவதைக் கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது மேலும் யுனானி மருத்துவத்தில் சர்க்கரை நோய்க்கு நாவல் முதன்மையாக பயன்படுத்துகிறார்கள் எனவே சர்க்கரை நோய் உள்ளவர்கள் நாவல் பழங்களை சாப்பிட்டுவிட்டு அதன் விதைகளை எறிந்து விடாமல் அதை சேகரித்து சுத்தம் செய்து காய வைத்து தூள் செய்து வைத்துக் கொள்ளுங்கள் இதை தினமும் காலை மாலை இரண்டு வேளையும் ஒரு டீஸ்பூன் அளவு வெண்ணீரில் கலந்து குடித்து வந்தால் ஒரு மாதத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருப்பதை கண்கூடாக காணமுடியும்

 அதேபோன்று நீரிழிவு கட்டுக்கடங்காமல் இருக்கும் போது சிறுநீர் அதிகமாக வரும் இப்படி கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு சிறுநீர் போகிறது என்பவர்கள் நாவல் விதை பொடியை இரண்டு வேளையும் பாலில் பாலில் அல்லது தண்ணீரில் கலந்து குடித்து வந்தால் சிறுநீர் போக்கு குறையும் முக்கியமாக நீரிழிவால் உடல் உறுப்புகளுக்கு உண்டாகும் பாதிப்பைத் தடுப்பதோடு வேறு பக்க விளைவுகளை உண்டாக்காது 

அடுத்து நாவல்பழம் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகிறது இதில் அதிகளவு விட்டமின் சி மற்றும் இரும்புச் சத்து நிறைந்துள்ளது இது உடலின் சிவப்பு ரத்த அணுக்களை உற்பத்தி அதிகரிக்கும் இதனால் ரத்த சோகை வராமல் தடுக்கும் விட்டமின் சி குறைபாடு இருந்தால் ஹீமோகுளோபின் அளவு குறையும் அதாவது நாம் சாப்பிடும் உணவில் உள்ள இரும்புச்சத்தை உறிஞ்சுவதற்கு வைட்டமின் சி மிக மிக முக்கியம் எனவே விட்டமின் சி அதிகம் உள்ள இந்த நாவல் பழத்தை தினமும் வாங்கி சாப்பிடுங்கள் அது மட்டுமல்ல விட்டமின் சி சரும ஆரோக்கியத்திற்கும் மற்றும் மூடி ஆரோக்கியத்திற்கு மிக மிக முக்கியமான ஒன்று 

அதேபோன்று சிலருக்கு சருமத்தில் வெண்புள்ளிகள் ஏற்பட்டு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தும் இவர்கள் தினமும் நாவல் பழங்களை சாப்பிட்டு வந்தால் அவர்களின் தோலின் நிறத்தை மேம்படுத்தும் மெலனின் என்கிற புரதச்சத்து அதிகம் ஊக்குவித்து தோளில் ஏற்பட்டிருக்கும்  வெண்புள்ளிகளை மறையச் செய்யும் மேலும் மூட்டுகளில் உள்ள ஜவ்வு மற்றும் தசைநார்களின் ஆரோக்கியத்திற்கு விட்டமின் சி மிக மிக முக்கியம் முக்கியமாக இதில் உள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுதும் 

 மேலும் நாவல் பழத்தில் அதிக அளவு ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் வைட்டமின் சி உள்ளதால் புற்றுநோய் வராமல் தடுக்கிறது அடுத்து நாம் மற்றவர்களுடன் பேசும்பொழுது நம் வாயிலிருந்து துர்நாற்றம் வீசினால் அவர்கள் நம்முடன் பேசுவதை தவிர்த்து விடுவார்கள் இதனால் மிகுந்த சங்கடத்தை ஏற்படுத்தும் ஆனால் தினமும் நாவல் பழம் சாப்பிட்டு வந்தால் வாய் துர்நாற்றம் நீங்கும் 

 அது மட்டுமல்ல பலருக்கும் ஈறுகளில் வீக்கம் ரத்தம் வடிதல் பல் கூச்சம் பல் சொத்தையை ஏற்படுதல் போன்ற பிரச்சினைகள் ஏற்படக்கூடும் இவர்கள் நாவல் பழங்களில் உப்பு சேர்த்து தினமும் சாப்பிட்டு வந்தால் வாய் பற்கள் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும் நீங்கும்

 அதேபோன்று நாவல் இலையைப் பொடி செய்து வைத்துக் கொண்டு பற்களை துலக்கி வந்தால் ஈறுகள் மற்றும் பற்கள் ஆரோக்கியமாகவும் பளிச்சென்றும் இருக்கும் அடுத்து சிறுநீரக கற்களால் சிரமப்படுபவர்கள் அப்பறம் சாப்பிடுவதுடன் அதன் விதையை உலர வைத்து பொடி செய்து தயிருடன் சேர்த்து சாப்பிட்டால் கற்களானது கரைந்துவிடும்

நாவல் பழம் மருத்துவ குணங்கள்

 அதேபோன்று இரவில் படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பழக்கம் உள்ள குழந்தைகளுக்கு நாவல் விதை பொடியை நீரில் கலந்து ஒரு நாளைக்கு இரண்டு முறை கொடுத்து வந்தால் இந்த பழக்கம் நின்றுவிடும் 

அடுத்து நாவல் பழத்தில் அதிக அளவு கால்சியம் மற்றும் மக்னீசியம் சத்துக்கள் நிறைந்துள்ளது பொதுவாக நாம் சாப்பிடும் உணவுகளில் உள்ள கால்சியம் சத்தை உறிஞ்சுவதற்கு  மிகவும் உதவியாக இருக்கும் எனவே எலும்புகளின் வலிமை அதிகரிக்க தினமும் நாவல் பழம் சாப்பிட்டு வருவது நல்லது 

அதேபோன்று அவதிப்பட்டால் உடனே நாவல் இலைக் கொழுந்தை நசுக்கி சாறு எடுத்து ஒரு டீஸ்பூன் அளவு சாப்பிட வேண்டும் இப்படி இரண்டு வேளை என்று மூன்று நாட்களுக்கு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பேதியை கட்டுப்படுத்தலாம் 

அடுத்து சிலருக்கு கல்லீரலில் அதிக அளர்ச்சிகள் சேர்வதாலும்  கல்லீரல் மற்றும் பித்தப்பை வீக்கம் ஏற்படுகிறது இந்த பிரச்சினைகளை தடுப்பதில் நாவல் பழம் மிகச் சிறப்பாக செயல்படுகிறது இதற்கு தினமும் சிறிது உப்பு சேர்த்து நாவல் சாப்பிட்டு வந்தால் கல்லீரல் மற்றும் பித்தப்பை கல் ஏற்பட்டிருக்கும் அளர்ச்சிகள் மற்றும் வீக்கத்தை குறைத்து அந்த உறுப்புகளின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது 

அடுத்து நாவல் பழத்தின் இலைகள் மரப்பட்டைகள் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுடன் வைக்கும் தன்மை உடையது எனவே ரத்த அழுத்தம் உள்ளவர்கள் இவற்றை தண்ணீரில் போட்டு கொதிக்க விட்டு அந்த நீரை அருந்தி வந்தால் இரத்த அழுத்தம் குறையும் அதே போன்று தினமும் நாவல் பழம் சாப்பிட்டு வந்தால்கொழுப்பு படிவதைத் தடுத்து இதய நோய்கள் மற்றும் மாரடைப்பு வருவதைக் குறைக்கும்

 பொதுவாக நாவல் பழம் ஒட்டுமொத்த உடல் நலத்திற்கு தேவையான பல சத்துக்களை தன்னுள் கொண்டுள்ளது இதில் பொட்டாசியம் கால்சியம் விட்டமின் சி இரும்பு சத்து பாஸ்பரஸ் ரைபோபிளேவின் தயாமின் போன்ற பல சத்துக்கள் உள்ளன இவை அனைத்தும் உடலின் எலும்பு வளர்ச்சி மற்றும் ஒருதி இதயம் இரத்தம் நரம்புகளில் சீரான இயக்கம் என ஒட்டுமொத்த உடல் நலனுக்கு உதவுகிறது எனவே நாவல் பழ சீசன் முடியும் வரை தினமும் வாங்கி சாப்பிடுங்கள் நாவல் பழத்தின் மீது சிறிதளவு உப்பு மிளகுத்தூள் ஏலக்காய்த்தூள் தூவி சாப்பிடுவது நல்லது பிரச்சனை உள்ளவர்கள் நாவல் பழத்தில் பிளாக் மற்றும் சீரகப் பொடி சேர்த்து சாப்பிடுவது நல்லது  

கருத்துகள்