oranges for weight loss
உடல் ஆரோக்கியத்திற்கு பழங்கள் அவசியம் அந்த வகையில் இந்த ஆரஞ்சு பழம் சாப்பிட்டால் நன்மைகள் கிடைக்கும் பழத்தைப் போன்று இதுவும் ஒன்று தானே என்று நீங்கள் நினைப்பீர்கள் ஆனால் ஆரஞ்சு பழம் இதற்கென்று உண்மையிலேயே சில சிறப்புகள் உண்டு
ஆரஞ்சில் அதிக அளவு விட்டமின் சி நிறைந்துள் ளது 100 கிராம் ஆரஞ்சுப் பழத்தில் கிட்டத்தட்ட 50 மில்லி கிராம் விட்டமின் சி உள்ளது விட்டமின் சி உடலுக்கு மிகவும் இது நல்லது வெள்ளை அணுக்களை அதிகரிக்கச் செய்வதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் அதனால் தான் டெங்கு காய்ச்சலின் போது மருத்துவர்கள் ஆரஞ்சு சாப்பிட பரிந்துரைக்கிறார்கள் மேலும் உடலில் இரும்புச்சத்தை கிரகிக்க வைட்டமின் டி உதவுகிறது அதேபோன்று அதிக மன அழுத்தம் உள்ளவர்கள் காய்ச்சல் கிருமித்தொற்று பிடித்தவர்கள் கர்ப்பமுற்ற பெண்கள் முதியவர்கள் ஆகியோருக்கு விட்டமின் சி கூடுதலாக தேவைப்படும் அன்றாட வாழ்வில் விட்டமின் சி எடுத்துக் கொண்டால் இளமையான ஆரோக்கியத்தை பெறமுடியும் உடல் சூட்டையும் தணிக்கும்
அடுத்து மூளையில் செரட்டோனின் என்ற பொருள் உருவாக விட்டமின் சி தேவை இந்த செரட்டோனின் நரம்புகள் வழியாக செய்திகளை அனுப்பும் டிரான்ஸ்மீட்டர் ஆக செயல்படுகிறது ரத்தத்தில் செரட்டோனின் போதுமான அளவில் இருப்பது ஒருவரை மகிழ்ச்சியான மனநிலையில் வைத்திருக்க அவசியமானது ஒருவரது நினைவாற்றலையும் கற்றல் திறனையும் தீர்மானிக்கக் கூடியதாக இருப்பதால் மாணவர்களுக்கு விட்டமின் சி அதிகம் அடங்கிய ஆரஞ்சு தினமும் சாப்பிடக் கொடுப்பது முக்கியம் முக்கியமாக விட்டமின் சி குறைபாட்டினால் தோல் வறண்டு போகும் பற்கள் ஈறுகள் பாதிக்கும் கொலாஜன் உற்பத்தி ஆகாது இதனால் தசைகளின் வலிமை குறைந்துவிடும் தீவிரமான விட்டமின் சி குறைபாட்டினால் ஸ்கர்வி என்ற நோய் உருவாகும் ஆரஞ்சு பழத்தில் விட்டமின் சி மட்டுமல்லாமல் கால்சியம் சத்தும் அதிகம் நிறைந்துள்ளது இந்த பழத்தை தினமும் சாப்பிட்டால் வலுவான பற்களைப் பெறலாம் முக்கியமாக இதில் பீட்டா கரோட்டின் என்னும் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளதால் இதனை தினமும் சாப்பிட்டு வந்தால் சூரியக் கதிர்களால் சரும செல்களில் பாதிப்பு ஏற்படாமல் இருக்கும் மேலும் முதுமைத் தோற்றமும் தடைபடும் தோல் சுருக்கங்கள் நீங்கும் ஆரஞ்சு இருக்கும்பொழுது செயற்கை கிரீம்கள் தேவையில்லை மேலும் இரத்தசோகை நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் ஆரஞ்சுஉன்னத உணவாக செயல்பட்டு புது ரத்தத்தை உற்பத்தி செய்கிறது தலைமுடி உதிர்வு என்பது இருக்கவே இருக்காது அதே போன்று ஆரஞ்சு பழத்தை தினமும் டயட்டில் சேர்த்து வந்தால் அதில் உள்ள விட்டமின் சி கல்லீரலில் தங்கியிருக்கும் நச்சுக்களை வெளியேற்றி உடல் எடையை கட்டுப்பாட்டுடன் வைக்க உதவும் மலச்சிக்கலைப் போக்கும் மேலும் சளி ஆஸ்துமா நுரையீரல் கோளாறு சுவாசக் கோளாறு காச நோய் போன்ற வியாதிகளால் அவதிப்படுவோர் பால் உணவுகளை விலக்கி அதற்கு பதிலாக ஆரஞ்சு பழ சாறு சாப்பிட்டு வந்தால் விரைவில் குணம் பெறலாம் சிலர் படுக்கைக்கு சென்ற உடன் தான் நேற்றைய நாளை பிரச்சினைகள் மனதில் ஏற்பட்டு தூக்கம் இல்லாமல் தவிப்பார்கள் ஸ்லீப்பிங் டேப்லெட் சாப்பிட்டாலும் தூக்கமின்றி அவதிப்படுபவர்கள் இரவு படுக்கச் செல்லும் முன் ஆரஞ்சு பழச்சாற்றில் தேன் கலந்து சாப்பிட்டால் நல்ல தூக்கம் வரும் அடுத்து மூட்டுகளில் வலி அல்லது வீக்கங்களும் இருப்பவர்கள் ஆரஞ்சு ஜூஸை தினமும் குடித்து வந்தால் அவை குணமாகும் ஏனென்றால் இதில் நோயெதிர்ப்பு அழற்சி பொருளானது அதிகம் நிறைந்துள்ளது பெண்களுக்கு மாதவிலக்குக் காலங்களில் அதிக உதிரப் போக்கால் சிலர் சோர்ந்து காணப்படுவார்கள் இதனால் அதிக மன உளைச்சல் எரிச்சல் கொள்வார்கள் இவர்கள் ஆரஞ்சு பழச் சாற்றில் தேன் கலந்து அருந்தி வந்தால் சோர்வு நீங்கி புத்துணர்வு கிடைக்கும் அதே போன்று ஆரஞ்சு பழத்தில் பொட்டாசியம் இரும்பு சத்து நிறைந்து உள்ளது இது இதயத்தை சீராக இயக்கக்கூடிய ஒரு பொருள் மேலும் உடலில் எப்போது பொட்டாசியம் சத்துக் குறைகிறதோ அப்போது தான் இதில் பிரச்சினை ஏற்பட ஆரம்பிக்கிறது ஆரஞ்சு பழத்தில் கரையக்கூடிய நார்ச்சத்தானது அதிகம் இருப்பதால் அவை உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவை குறைக்கும் எனவே தினமும் ஒரு ஆரஞ்சு சாப்பிடுவது மிகவும் நல்லது முக்கியமாக ஆரஞ்சு பழம் ஆண்களுக்கு மிகவும் சிறந்தது மேலும் ஆய்வு ஒன்றிலும் ஆரஞ்சுப் பழத்தை ஆண்கள் சாப்பிட்டு வந்தால் அதில் உள்ள ஃபோலேட் என்னும் ஊட்டச்சத்தானது விந்தணுக்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது குறிப்பாக ஆரஞ்சு ஜூஸ் குடிக்கும் போது அதில் அதிகப்படியான சர்க்கரை போட வேண்டாம் ஏனென்றால் அவை பற்களை சொத்தையாகி விடும் சர்க்கரைக்கு பதிலாக தேன் கலந்து சாப்பிடலாம்
கருத்துகள்
கருத்துரையிடுக