வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
பூண்டு உணவிற்கு சுவையை கொடுப்பதோடு மட்டுமல்லாமல் கணக்கிலடங்காத மருத்துவ நன்மைகளை கொண்டது இதற்கு முக்கிய காரணம் பூண்டில் அதிகளவு தாதுக்களும் வைட்டமின்களும் ஐயோடின் சல்பர் குளோரின் போன்ற சத்துக்களும் உள்ளன சொல்லப்போனால் இதை ஒரு மூலிகை பொக்கிஷம் என்றே சொல்ல வேண்டும்
பூண்டை முறையாக எடுத்துக் கொள்ளும் போது உடலில் இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும் உண்மையில் தினமும் பூண்டு சாப்பிடும்போது நமது உடலில் உள்ள முக்கியமான உறுப்புகள் மிகுந்த பலம் பெறுகிறது அந்தவகையில் பூண்டை எப்படி சாப்பிட வேண்டும் எதை சாப்பிட வேண்டும் யாரெல்லாம் கட்டாயம் சாப்பிட வேண்டும் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் அதன் காரத்தன்மை தெரியாமல் இருக்க எப்படி சாப்பிட வேண்டும்
முதலில் சளி பிரச்சனை பொதுவாக நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு தான் அடிக்கடி சளிப்பிடிக்கும் எதிர்ப்பு சக்தியைப் பொறுத்த விஷயத்தில் பூண்டின் பங்கு மிக முக்கியமானது இதில் உள்ள அல்லிசின் என்னும் பொருள் பாக்டீரியாக்களையும் தொற்றுக்களையும் நெருங்கவிடாமல் செய்யக்கூடியது அதாவது பூண்டில் உள்ள அலிசின் ஒரு நேச்சுரல் ஆன்ட்டிபயாட்டிக் இது பாக்டீரியா மற்றும் பூஞ்சை தொற்றிலிருந்து நுரையீரலை காக்க உதவுகிறது
மேலும் சுவாசப் பாதை தொற்றுகளின் தீவிரத்தையும் எனவே ஆஸ்துமா சுவாசிப்பதில் சிரமம் போன்ற நுரையீரல் பிரச்சினை உள்ளவர்கள் சளி இருமலால் அவதிப்படுபவர்கள் இரவில் படுக்கும் முன்பு ஒரு பூண்டுப் பல் சாப்பிட்டு வந்தால் இந்தப் பிரச்சினைகள் இருந்து மீண்டு வரலாம் அது மட்டுமல்ல மலேரியா காசநோய் யானைக்கால் நோய் மற்றும் பிளேக் போன்ற நோய்களை உண்டாக்கும் கிருமிகள் எதிராக செயல்படக்கூடியது
அடுத்து வயிற்றுப்புழுக்கள் பொதுவாக வயிற்றில் உள்ள புழுக்கள் நாம் சாப்பிடும் உணவை இந்த புழுக்கள் சாப்பிட்டுவிட்டு தன்னை வளர்த்துக் கொண்டு நம்மை நோயாளியாக மாற்றி விடும் எனவே தினமும் ஒரு பச்சை பூண்டு பல்லை வெறும் வயிற்றில் காலையில் சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறி புழுக்களும் வெளியேறிவிடும்
அதேபோன்று நீரிழிவு நோய் உடலின் வளர்சிதைமாற்ற குறைபாட்டால் ஏற்படும் ஒரு நோய் தான் இந்த நீரிழிவு நோய் இது ஏற்பட முக்கிய காரணம் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை தான் இந்த சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க இயற்கை கொடுத்த வரம் பூண்டு என்பது முற்றிலும் உண்மை எனவே சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் 2 பூண்டுப் பல்லை பச்சையாக சாப்பிட்டு வரும்போதே இன்சுலின் சுரத்தலை அதிகரிக்கும்
இதனால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சீராக வைத்திருக்க முடியும் அதே போன்று ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு பூண்டு ஒரு நல்ல மருந்து அதிலும் பூண்டில் உள்ள அல்லிசின் உடலில் நைட்ரிக் ஆக்சைடு அதிகரிக்க உதவுகிறது பொதுவாக இதயத்திற்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் தமனிகளில் உட்சுவர்கள் அடைவதற்கு முக்கிய காரணம் உடலில் உள்ள அதிக அளவு கொழுப்பு படிந்து விடுவதே ஆகும்
இதனால் ரத்த ஓட்டத்தின் வேகம் தடைபடுகிறது இதனை தடுக்க இரத்த அழுத்தத்தின் அளவு அதிகரிக்கிறது மேலும் இதயத்திற்கு செல்லும் ரத்த நாளங்களில் கொழுப்பு படிந்து மாரடைப்பு ஏற்படக்கூடும் எனவே எல்டிஎல் கொலஸ்ட்ரால் இதய குழாய்களில் படிந்து அடைப்பு ஏற்படாமல் இருக்க வேண்டுமானால் உடலில் கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள வேண்டும் இதற்கு கொலஸ்ட்ரால் பிரச்சினை உள்ளவர்கள் இரவில் படுக்கும் முன் ஒரு பல் பூண்டு சாப்பிட்டு வந்தால் இதயம் சம்பந்தமான பிரச்சினைகளை தவிர்க்கலாம் அதுமட்டுமல்ல உடலில் இரத்த உறைவு ஏற்பட்டு ரத்த ஓட்டத்தில் இடையூறு ஏற்படுவதை தடுக்கும்
அடுத்து செரிமான பிரச்சினை நாம் உண்ணும் உணவு சரியாக செரிமானம் ஆகாமல் போகும்பொழுது அஜீரணம் உண்டாகிறது நாம் உண்ணும் உணவை செரிக்க செரிமான நீர் சுரப்பதில் பிரச்னை ஏற்பட்டாலும் இந்த கோளாறு ஏற்படும் எனவே செரிமானம் சீராக நடைபெற வேண்டுமானால் பூண்டு பால் குடித்து வருவது நல்லது காரணம் பூண்டு உணவை செரிக்கும் செரிமானத்தை தூண்டி உணவுகள் எளிதில் செரிமானம் ஆக உதவும்
அடுத்து கர்ப்பிணி பெண்கள் வெள்ளைப்பூண்டை பாலில் வைத்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை கட்டுப்பாட்டில் இருக்கும் மேலும் உயர் ரத்த அழுத்தம் ரத்த சர்க்கரை போன்றவை யும் கற்றுக் கொண்டிருக்கும் மேலும் தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் பூண்டுகளை சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்
அதே போன்று எலும்பு சம்பந்தமான நோய்கள் பொதுவாக வயது அதிகரித்தல் மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை இவற்றால் உடல் எலும்புகள் பலவீனம் அடையலாம் எலும்பு முறிவு ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் ஆர்த்தரைட்டிஸ் போன்ற நோய்களுக்கு எதிராகப் போராடும் தன்மை பூண்டி நிறைந்துள்ளது சோதனை ஒன்றில் எறும்பை அளிக்கக்கூடிய என்சைம்களின் செயல்பாட்டை குறைத்து சேதத்தில் இருந்து காக்க பூண்டில் உள்ள அல்லிசின் உதவுகிறது என்றும் தெரியவந்துள்ளது
அதேபோன்று கல்லீரலில் அதிகப்படியான கொழுப்பு படிந்து கல்லீரலை பலவீனமாகிவிடும் மிக முக்கிய உறுப்பான கல்லீரல் நமது உடலில் பல பணிகளை செய்து வருகிறது எனவே கல்லீரல் ஆரோக்கியமாக இருப்பது மிக முக்கியம் அந்த வகையில் கல்லீரலில் கொழுப்பு படிவதைத் தடுக்கிறது
மேலும் இது கல்லீரல் வெளியேற்ற பெரிதும் உதவுகிறது அதேபோன்று இதிலிருக்கும் அல்லிசின் மற்றும் செலினியம் கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது மேலும் பூண்டில் உள்ள அல்லிசின் என்ற பொருள் புற்றுநோயை எதிர்க்கும் செயல்படுகிறது முக்கியமாக சமைக்கப்படாத அல்லது காயவைத்த பூண்டை சாப்பிட்டால் தான் அதில் சத்தினை பெற முடியும் என்றும் கூறப்படுகிறது
ஆனால் அளவு அதிகமானால் நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சினைகளும் ஏற்படலாம் எனவே 2 பூண்டு பல் வரை எடுத்துக் கொண்டால் போதுமானது அதேபோன்று பூண்டை சாப்பிடும்போது ஏற்படும் காரத்தன்மை போக்க பூண்டை சிறியதாக கட் செய்து ஒரு ஐந்து நிமிடம் அப்படியே வைத்துவிட்டு அதன் காரத்தன்மை குறைந்து விடும்
அதன் பிறகு சாப்பிடலாம் முக்கியமாக நாட்டுப்புற பயன்படுத்துவதே நல்லது உண்மையில் இது போன்ற எளிதில் கிடைக்கும் உணவு விஷயங்களில் கவனம் செலுத்தினாலே பின்னாளில் மிகப் பெரிய நோய்கள் நம்மை தாக்காமல் பாதுகாத்துக் கொள்ள முடியும் நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்
கருத்துகள்
கருத்துரையிடுக