சப்ஜா விதையை நீரில் போட்டு ஊறவைத்தால்
கோடை காலம் தொடங்கிவிட்டது இனி வெயில் கொளுத்த தொடங்கி விடும் பொதுவாக மழை மற்றும் குளிர் காலங்களில் சளி இருமல் காய்ச்சல் என்று ஒரு மாதிரியான பிரச்சினைகள் என்றால் கோடை காலத்தில் தாங்க முடியாத வெயிலால் வேறு மாதிரியான பிரச்சினைகள் வந்து விடும்
அதிலும் அதிக வெயிலால் உடல் சூடு அதிகரித்து சூட்டுக் கட்டிகள் கண் எரிச்சல் போன்றவை அதிகரித்து விடும் இதற்கு சிறந்த தீர்வு இந்த சப்ஜா விதை இதற்கு சப்ஜா விதையை ஒரு டீஸ்பூன் எடுத்துக் கொண்டு ஒரு 200 எம்எல் தண்ணீரில் போட்டால் அது தண்ணீரை உறிஞ்சிக் கொண்டு ஜல்லி போட்டு ஒட்டி விடும் இதை அப்படியே குடிக்கலாம் அல்லது காய்ச்சிய பாலில் அல்லது தண்ணீரில் கலந்தும் குடிக்கலாம் இதனால் உடல் சூட்டை குறைத்து நமது உடலில் சீரான வெப்ப நிலைக்கு கொண்டுவரும்
மேலும் இதை காலத்தில் மட்டுமில்லாமல் உடல் சூட்டை குறைக்க எல்லா காலங்களிலும் பயன்படுத்தலாம் அதுமட்டுமல்ல வயிற்றுப் புண் பிரச்சினைக்கு சப்ஜா விதை ஒரு நல்ல மருந்து பொதுவா அல்சர் என்று சொல்லப்படுகிற வயிற்றுப் புண் வந்தால் நெஞ்சுப் பகுதியில் எரிச்சல் ஏற்படும் இதைத் தொடர்ந்து அடிக்கடி புளித்த ஏப்பம் உண்டாகும் பசியே இருக்காது கொஞ்சம் சாப்பிட்ட உடனேயே வயிறு நிரம்பிய உணர்வு உண்டாகும்
மேலும் வயிற்றில் வலியும் குமட்டலும் வாந்தியும் உண்டாகும் இதனால் மிகுந்த மன உளைச்சல் உண்டாகும் இப்படி அல்சர் உள்ளவர்கள் தினமும் ஒரு டீஸ்பூன் சப்ஜா விதையை இரவில் படுக்கும் போது நீரில் ஊற வைத்து மறுநாள் காலையில் குளித்து வரலாம் இப்படி தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் விரைவில் அல்சர் பிரச்சனை முற்றிலும் நீங்கும்
அதேபோன்று கோடையில் ஏற்படும் மற்றொரு பிரச்சனை சிறு நீர் எரிச்சல் நீர்த்தாரை புண் போன்றவை பொதுவாக தேவையான அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பதாலும் கிருமித் தொற்றுகளும் இவை ஏற்படுகிறது இதற்கு முதல் நாள் இரவு ஒரு கப் தண்ணீரில் 2 டீஸ்பூன் சப்த விதைகளை ஊற வைத்து மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும் இதைத் தொடர்ந்து குடித்து வர வேண்டும் அதன் பிறகு சுத்தமாக இந்த பிரச்சினை வரவே வராது நீர்க்கடுப்பும் நீங்கும்
அதேபோன்று மலச்சிக்கல் பிரச்சினை பொதுவாக கோடையில் அதிக வியர்வையின் காரணமாக நீர் இழப்பு ஏற்படக் கூடும் இதனால் மலம் இறுகி மலச்சிக்கல் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் இந்த மலச்சிக்கலைப் போக்கும் அருமையான வைத்தியம் இந்த சப்ஜா விதை காரணம் இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் மலச்சிக்கலைப் போக்கி விடும்
அதேபோன்று மலச்சிக்கலால் அவதிப்படும் முதியோர்கள் ஒரு தேக்கரண்டி சப்ஜா விதையை சூடான பாலில் கலந்து குடித்து வரலாம் அதுமட்டுமல்ல மூலநோயால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த சப்ஜா விதையை தினமும் சாப்பிட்டு வந்தால் விரைவில் குணம் பெறலாம் மூல நோய்க்கு நல்ல மருந்து இது
அதே போன்று உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் சப்ஜா விதையை நீரில் ஊற வைத்து தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் எடை விரைவில் குறையும் இதில் கலோரிகள் மிகக் குறைவு இதில் ஒமேகா-3 கொழுப்பமிலம் உள்ளதால் உடலில் உள்ள கொழுப்புகளை குறைக்க உதவுகிறது முக்கியமான ஒரு நாளைக்கு தேவையான அனைத்து ஆற்றலும் இந்த சப்ஜா விதை சாப்பிடுவதால் கிடைக்கிறது
அது மட்டுமல்ல இதை சாப்பிட்டால் நீண்ட நேரம் பசி எடுக்காது இதனால் நொறுக்குத்தீனிகள் மீது நாட்டம் செல்லாதே இதை இரவில் தண்ணீரில் ஊற வைத்து அடுத்த நாள் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வரலாம் இல்லையென்றால் ஒரு மணி நேரம் ஊற வைத்தும் சாப்பிடலாம் இதனுடன் எலுமிச்சை சாறு கலந்தும் குடிக்கலாம்
அடுத்து சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் ஒரு டீஸ்பூன் சப்ஜா விதை நீரில் ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரையின் அளவு குறையும் அதே போன்று மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சப்ஜா விதையை நீரில் போட்டு ஒரு மணி நேரம் வரை ஊற வைத்து சாப்பிட்டால் நோயின் பாதிப்பு குறையும்
மேலும் இது பித்தத்தைப் போக்கி உடல் உஷ்ணத்தை குறைக்கிறது அதேபோன்று நெஞ்செரிச்சல் ஏற்பட்டால் ஊறவைத்து சப்ஜா விதையுடன் இரண்டு ஸ்பூன் தயிர் மற்றும் உப்பு சேர்த்து குடித்து வந்தால் நெஞ்சு எரிச்சல் அடங்கும் மேலும் ஜீரண பாதையில் ஏற்படும் புண்களையும் ஆற்றும் அதேபோன்று வாயு தொல்லையை போக்கும்
அடுத்து பெண்களைப் பொறுத்தவரையில் சப்ஜா விதையை ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு குளிர்ச்சி தருவதோடு மாதவிலக்கு நேரத்தில் ஏற்படும் அடிவயிற்று வலியை குறைக்க உதவுகிறது முக்கியமாக பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் குணப்படுத்த உதவுகிறதுஅதே போன்று இதில் அதிக அளவு இரும்புச்சத்து ரத்த சோகை வராமல் காக்கும் இதில் உள்ள விட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும
அடுத்து முக்கியமாக இதை யாரெல்லாம் சாப்பிடக்கூடாது என்று பார்த்தால் ஆரம்பகால கர்ப்பிணி பெண்கள் சப்ஜா விதையை சாப்பிடுவதன் மூலம் கருகலைய வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது
மேலும் பாலூட்டும் தாய்மார்கள் இதனை சாப்பிடக்கூடாது என்றும் கூறப்படுகிறது மேலும் இது அதிக குளிர்ச்சி தன்மை உடையதால் இதை அதிகமாக குழந்தைகளுக்கு கொடுப்பதை தவிர்க்க வேண்டும்
அதே போன்று இதன் குளிர்ச்சி தன்மை காரணமாக சைனஸ் ஜலதோஷம் பிரச்சினை உள்ளவர்கள் இதை முழுமையாக தவிர்க்க வேண்டும் இந்த சப்ஜா விதை நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் கோடைகாலத்தில் நன்னாரி சர்பத்தில் இதை கலந்தும் சாப்பிடலாம்
மேலும் உங்களுக்கு பிடித்த மில்க்ஷேக் ரோஸ் மில்க் பால் எலுமிச்சை ஜூஸ் எப்படி எதில் வேண்டுமானாலும் கலந்து கொடுக்கலாம் ஆனால் இதை ஊற வைக்காமல் அப்படியே சாப்பிடுவது செரிமான சிக்கலை ஏற்படுத்திவிடும்
அடுத்து நிறைய பேருக்கு உள்ள ஒரு சந்தேகம் சியா விதைகள் சப்ஜா விதைகள் ஒன்றா அல்லது வேறுவேறா என்பது உண்மையில் சப்ஜா விதை கருப்பு நிறத்தில் வில் போன்ற வட்ட வடிவத்தில் இருக்கும் ஆனால் சியாவிதையோ கறுப்பு சாம்பல் மற்றும் வெள்ளை நிறத்தில் இருக்கும்
மேலும் இது உற்று கவனித்தால் ஓவர்ள் காணப்படும் ஆனால் இரண்டு விதைகள் அதிக மருத்துவ குணங்கள் கொண்டது உண்மையில் நம்முடைய அனைத்து பிரச்சினைகளுக்கும் இயற்கையே தீர்வையும் வழங்கியுள்ளது அவற்றை முழுமையாக தெரிந்து கொண்டு முறையாக பயன்படுத்தி வந்தாலே நாம் மருத்துவரிடம் செல்லத் தேவை இருக்காது
சொல்லப்போனால் இந்தியாவில் மட்டுமல்ல அமெரிக்காவிலும் இந்த சப்ஜா விதையை அதிகமாக பயன்படுத்தி வருகிறார்கள் எனவே நீங்களும் கெமிக்கல் நிறைந்த குளிர்பானங்களை தவிர்த்து இது போன்ற மருத்துவ குணம் வாய்ந்த குளிர்பானங்களை நீங்களே வீட்டில் தயாரித்து சாப்பிடுங்கள் ஆரோக்கியமாக வாழலாம்
கருத்துகள்
கருத்துரையிடுக