புத்துணர்ச்சி தரும் கரும்பு ஜூஸ்-Karumpu cāṟṟiṉ naṉmaikaḷ

 புத்துணர்ச்சி தரும் கரும்பு ஜூஸ்

புத்துணர்ச்சி தரும் கரும்பு ஜூஸ்

சாதாரணமாகவே கோடையில் அதிக வெயிலால் உடலானது அதிக சூடாக இருக்கும் மேலும் அதிக வியர்வையின் காரணமாக அதிக நீரிழப்பு ஏற்படும் பொதுவாக உடலுக்கு தேவையான அளவு நீர் சத்து அவசியம் இந்த நீர் இழப்பை ஈடுசெய்ய அதிக தண்ணீர் அருந்துவது .

கரும்புசாறு  ஏராளமான மருத்துவ நன்மைகளை நாம் பெற முடியும் அதாவது உடல் சூடு மற்றும் அதிகம் தண்ணீர் குடிக்காத காரணங்களால் நீர்தாரை எரிச்சல் நீர்குத்தல் தொற்றுகளால் பிறப்புறுப்பில் அரிப்பு போன்றவை ஏற்படக்கூடும் இவற்றை சரி செய்யும் தன்மை இந்த கரும்பு சாறுக்கு உண்டு

 அதிலும் இயல்பாகவே உடல் சூடு அதிகம் உள்ளவர்களுக்கு இது போன்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் இவர்கள் தினமும் ஒரு டம்ளர் கரும்பு ஜூஸ் குடித்தால் இந்த பிரச்சினைகள் வராமல் தடுக்கலாம் அடுத்து நமது உடலில் இதயம் மற்றும் மூளைக்கு அடுத்தபடியாக மிகவும் முக்கிய உறுப்பு இந்த கல்லீரல்

 நமது உடலில் அதிக பணிகளை செய்வதும் இதுதான் சர்க்கரை கொழுப்பு இரும்புச்சத்து ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவதில் கல்லீரல் பங்கு மிக அதிகம் மேலும் இதன் உதவி அதிகம் கல்லீரல் பாதிப்படைவதற்கு மது அருந்துவதாலும் அதிகமான எண்ணெய் உள்ள உணவுகளை தொடர்ந்து சாப்பிடுவதாலும் கல்லீரலில் கொழுப்புக்கள் அதிகம் சேர்ந்து பாதிப்பை ஏற்படுத்தும் 

கல்லீரலில் ஏற்படும் பாதிப்புகளில் மஞ்சள் காமாலையும் ஒன்று இந்த மஞ்சள் காமாலை நோயிலிருந்து குணமாக தினமும் இரண்டு டம்ளர் கரும்பு சாற்றுடன் எலுமிச்சை மற்றும் உப்பு சேர்த்து குடித்து வந்தால் விரைவில் குணம் தெரியும்

அதே போன்று பலருக்கும் சாப்பிட்ட உணவு முழுமையாக செரிமானம் அடையாமல் போவதற்கு காரணம் அவரின் வயிற்றில் உள்ள செரிமான அமிலங்கள் சுரப்பில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகள் மற்றும் குறைபாடுகளே காரணம் இதற்கு கரும்பு ஜூஸ் அடிக்கடி பருகி வந்தால் வயிறு மற்றும் குடல் சுத்தமாகி மேலும் வயிற்றில் உணவு செரிமானத்துக்கு உதவும் அமிலங்களை சுரப்பை அதிகப்படுத்தும் 

எனவே அடிக்கடி செரிமான பிரச்சனை ஏற்படுகிறது என்பவர்கள் தினமும் கரும்பு ஜூஸ் சாப்பிட்டு வருவது நல்லது அடுத்து இரத்த சோகை உள்ளவர்கள் தினமும் ஒரு டம்ளர் கரும்பு ஜூஸுடன் தேன் கலந்து குடித்து வந்தால் ஹீமோகுளோபின் எண்ணிக்கை அதிகரித்து ரத்த அதுமட்டுமல்ல கரும்பில் இயற்கையாக உள்ள அல்கலைன் என்னும் பொருள் புற்றுநோயை ஏற்படாமல் தடுக்க கூடியது

 அதே போன்று நம்மை சுற்றிலும் மாசு படிந்து உள்ளதால் நாம் சாப்பிடுகின்ற உணவு அருந்தும் நீர் சுவாசிக்கும் காற்றின் மூலம் நமது உடலில் அதிகமாக சேர்ந்துவிடுகிறது இந்த கரும்பு ஜூஸ் மாசுகளையும் நச்சுத்தன்மையை நீக்கி உடலுக்கு புத்துணர்ச்சி தரும் ஆற்றல் கொண்டது

 எனவே தினமும் காலையில் கரும்பு ஜூஸ் அருந்தி வரும் போது உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வியர்வை மற்றும் சிறுநீர் வழியாக வெளியேறி உடலை தூய்மைப்படுத்துகிறது அடுத்து கரும்பின் மிக முக்கியமான நன்மை என்னவென்றால் சிறுநீரக கற்களை குணமாக்குவது தான் 

எனவே தண்ணீர் மட்டுமின்றி கரும்பு சாற்றையும் அருந்தி வந்தால் அந்த கற்கள் எளிதில் உடைந்து கரைந்துவிடும் அதைப்போன்று வாய் துர்நாற்றம் உணவில் ஊட்டச்சத்து குறைபாடு இருந்தாலும் வாய் துர்நாற்றம் ஏற்படும் இதற்கு சிறந்த இயற்கை தீர்வு  கரும்பு ஜூஸ் 

மேலும் இதில் நிறைந்திருக்கும் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் பற்களின் எனாமலை வழிபடுவதோடு பற்களையும் ஈறுகளையும் பாதுகாக்கிறது முக்கியமாக கரும்பு சாறு அருந்தி வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி மண்டலம் பலம் பெறுகிறது இதில் நிறைந்திருக்கும் ஆன்டிஆக்சிடன்ட் ரத்தத்தில் கலந்து நீர் சுரப்பிகளில் வெளிப்படுத்தி உடலை எளிதில் தாக்க கூடிய தொற்று வியாதிகள் காய்ச்சல் இவற்றில் சிறப்பாக செயல்படுகிறது 

அடுத்து குழந்தை இல்லாத பெண்கள் கரும்பு ஜூஸ் பருகி வந்தால் அவர்களின் கருப்பையில் கருமுட்டை உற்பத்தி அதிகரித்து விரைவில் பெண்கள் கருவுற உதவுவதாக மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன அதேபோன்று கருவுற்றிருக்கும் பெண்கள் அடிக்கடி இந்த கரும்பு ஜூஸ் சாப்பிடுவது நல்லது காரணம் இதில் போலிக் அமிலம் மற்றும் வைட்டமின் சத்துகள் அதிகம் இருப்பதால் இவை குழந்தை குறையில்லாமல் ஆரோக்கியமாக பிறக்கும்

 அதேபோன்று வயது ஏற ஏற உடலில் இருக்கும் செல்களின் வளர்ச்சி குறைந்து முதுமை தோற்றம் ஏற்பட கூடும் ஆனால் எப்பொழுதும் இளமையாக இருக்க அடிக்கடி கரும்பு ஜூஸ் அருந்தி வருவது நல்லது காரணம் இதில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் ஃப்ளேவோனாய்டு சருமத்தின் ஈரப்பதத்தை கொடுகின்றது இதனால் தோலில் ஒருவித பளபளப்பு தன்மையை கொடுத்து இளமைத் தோற்றத்தைத் தருகிறது

 அடுத்து மூளை இதுதான் நமது உடலில் அனைத்து இயக்கங்களையும் நிர்வாகம் செய்கிறது மூளையின் செயல்பாட்டை அதிகரித்து சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள இந்த கரும்பு ஜூஸ் உதவுகிறது மேலும் கரும்பு சாறு அருந்துவதால் அந்த நாள் முழுவதும் உற்சாகமாக வேலை செய்வதற்கான ஆற்றல் கிடைக்கிறது முக்கியமாக கரும்பில் வைட்டமின் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகம் உள்ளது 

அதிலும் பாஸ்பரஸ் இரும்புச்சத்து பொட்டாசியம் கால்சியம் மற்றும் மக்னீசியம் போன்றவை அதிக அளவில் உள்ளதால் இதை அடிக்கடி அருந்தும்போது உடலில் எந்த ஒரு ஊட்டச்சத்து குறைபாடும் இன்றி உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம் 

அடுத்து முக்கியமானது சர்க்கரை நோயாளிகள் இதை சாப்பிடலாமா கூடாதா என்பது கருவிலிருக்கும் சுக்ரோஸ் உடனடியாக ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்காது என்று கொஞ்சம் அதிகமாக இருந்தாலோ அல்லது நீண்ட நேரத்துக்கு பிறகு தான் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கூடும்

 எனவே சர்க்கரை நோயாளிகள் அரை டம்ளர் வீதம் வாரத்திற்கு இரண்டு முறை குடிக்கலாம் என்று அறிவுறுத்தப்படுகிறது கிடைக்குமிடம் சுகாதாரமாக உள்ளதா என்று பார்த்து வாங்கி அருந்துவது நல்லது அதேபோன்று வாங்கி அரைமணி நேரத்தில் அதாவது அதன் நிறம் மாறுவதற்கு குடித்துவிட வேண்டும் எனவே எளிதில் எங்கும் கிடைக்கக்கூடிய மருத்துவ குணங்கள் அதிகம் கொண்ட இந்த கரும்பு சாற்றை அடிக்கடி சாப்பிட்டு உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள் 

கருத்துகள்