சுரைக்காயின் பயன்கள்-suraikai benefits

 



suraikai benefits

பொதுவாக எல்லோருக்குமே நீண்ட நாட்கள் ஆரோக்கியமாகவும் இளமையாகவும் இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும் ஆனால் நம்மில் நிறைய பேர் இதற்கான முயற்சிகள் எடுக்கிறோம் என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும் 

ஆனால் நம் முன்னோர்கள் நீண்ட நாட்கள் உடல் வலிமையுடனும் நோய்கள் இல்லாமல் இருப்பதற்கு காரணம் அவர்களது உணவு முறையும் பழக்கவழக்கங்களும் தான் 

சொல்லப்போனால் அந்த காலத்தில் துரித உணவுகள் இல்லை ஆனால் இன்று அப்படி இல்லை எங்கு பார்த்தாலும் பாஸ்ட் புட் கடைகள் தான் இதில் சிறியவர்கள் பெரியவர்கள் என்ற வித்தியாசம் இல்லாமல் இந்த உணவுகளின் சுவைக்கு அடிமை அது இன்னும் கொடுமை

 உண்மையில் இதில் சேர்க்கப்படும் செயற்கை சுவையூட்டிகள் மற்றும் நிறமூட்டிகள் பலரையும் இந்த உணவுகளுக்கு அடிமையாகி பல நோய்கள் ஏற்பட காரணமாக உள்ளது ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால் நமது உணவு விஷயத்தில் மிகுந்த அக்கறை செலுத்த வேண்டும் 

அந்த வகையில் கோடையை பொறுத்த வரையில் அதிக வெப்பத்தின் காரணமாக பல உடல்நல பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் பொதுவாக இந்த காலகட்டத்தில் நீர்க் காய்கள் சாப்பிடுவதில் ஆர்வம் காட்டவேண்டும் நீர்சத்துள்ள காய்கறிகள் கோடையில் ஏற்படும் பிரச்சினைகளை தடுக்க உதவும் அதாவது கோடையில் உடலை வறட்சியடையச் செய்யாமல் உடல் வெப்பத்தை தணிக்கும் நீர்ச் சத்து நிறைந்த காய்கறி மற்றும் பழங்களை அதிகம் சாப்பிட வேண்டும் அப்படி நீர்சத்து நிறைந்த ஒரு காய் தான் சுரைக்காய்

 சொல்லப்போனால் மலிவு விலையில் கிடைக்கும் காய்களில் அதிக சத்து நிறைந்தது இந்த சுரக்காய் தான் உண்மையில் நம் நாட்டுக்கு வந்த சுரைக்காயில் எவ்வளவு நன்மைகள் கொட்டிக்கிடக்கிறது தெரியுமா சுரைக்காய் உடலில் உள்ள அதிகப்படியான வெப்பத்தை தடுப்பதோடு மட்டுமில்லாமல் கோடையில் ஏற்படும் சரும பிரச்சனைகளில் இருந்து உடலை பாதுகாக்கிறது 

வாரம் இரண்டு முறை சுரைக்காயை உணவில் சேர்த்துக்கொண்டால் வெப்பத்தால் ஏற்படும் சரும பிரச்சனைகளை தடுத்து உடலுக்கு பல பறப்பு தன்மையை கொடுக்கிறது

 அதுமட்டுமல்ல சுரைக்காயை கூட்டு பொரியல் ஜூஸ் என ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்து வந்தால் உடல் சூடு தணிந்து உடல் குளிர்ச்சியாக வைத்துக் கொள்வதோடு கண் எரிச்சல் கண் வலி போன்ற பிரச்சனைகளுக்கும் சிறந்த தீர்வாக உள்ளது

 அதே போன்று இன்றைய ஆரோக்கியமற்ற உணவு பழக்கவழக்கங்கள் உட்கார்ந்தவாறே வேலை செய்வது அல்லது மன அழுத்தம் இவற்றால் இன்று நிறைய பேர் அஜீரண பிரச்சினை அவதிப்படுகிறார்கள் உண்மையில் அஜீரணக் கோளாறு தீவிரமானால் நெஞ்செரிச்சல் இரைப்பை அழற்சி மற்றும் சில நேரங்களில் குடல் புற்றுநோய் கூட ஏற்படலாம் எனவே அஜீரணக்கோளாறு உள்ளவர்கள் சுரைக்காயை சாப்பிட்டு வந்தால் நல்ல பலன்கிடைக்கும் 

காரணம் இது அதிக அளவு நார்ச்சத்தும் கொண்டுள்ளது இந்த நார்ச்சத்தானது செரிமானம் நன்றாக நடைபெற உதவுகிறது எனவே செரிமான பிரச்சனை உள்ளவர்கள் மற்றும் மலச்சிக்கல் உள்ளவர்கள் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளலாம் குறிப்பாக மூலநோய் உள்ளவர்களுக்கு சுரைக்காய் சிறந்த மருந்து உணவாக உள்ளது

 மேலும் அல்சர் உள்ளவர்கள் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் அல்சர் குணமாகும் அது மட்டும் அல்ல வலி ஏற்படும் எந்த வித பாதிப்பாக இருந்தாலும் நீங்கிவிடும் அதேபோன்று சுரைக்காயில் ரசம் வைத்து அதில் ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு சேர்த்துக் குடித்தால் சிறுநீரகம் தொடர்பான பிரச்சினைகள் தீரும் மேலும் சிறுநீர் நன்றாக வெளியேறும் சிறுநீர் கட்டு நீர் எரிச்சல் நீர் கட்டு இவைகளை குணப்படுத்தும் சிறுநீர் வெளியேறாமல் அவதிப்படுவோருக்கு இது ஒரு சிறந்த நிவாரணியாகும் 

அடுத்து கொழுப்புச்சத்துள்ள உணவு வகைகளையும் வறுத்த உணவு வகைகளையும் அதிகம் எடுத்துக் கொள்பவர்களுக்கு எப்போதும் அதிகமாக தண்ணீர் தாகம் எடுக்கும் அதேபோன்று வயிற்றுப் பிரச்சினை ஏற்பட்டு அவர்களுக்கும் நீரிழிவு நோயாளிகளுக்கும் இதே பிரச்சினை உண்டு இவர்களுக்கு நாக்கு வறட்சி ஏற்படும் சமயம் ஒரு கப் பச்சையான சுரைக்காய் ஜூஸ் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து அருந்தினால் நாக்கு வறட்சி நீங்கும்

 அதுமட்டுமல்ல கோடை காலத்தில் ஏற்படும் வறட்சியை போக்க சுரக்காய் சாப்பிட்டு வருவது நல்லது அடுத்து கை கால்களில் எரிச்சல் உள்ளவர்கள் சுரைக்காயின் சதைப்பகுதியை எடுத்து எரிச்சல் உள்ள இடத்தில் வைத்து கட்டினால் எரிச்சல் உடனே குறையும் அதே போன்று சுரைக்காய் நரம்புகளுக்கு புத்துணர்வைக் கொடுத்து உடலை வலுப்படுத்தும்

 மேலும் சுரைக்காயை மதிய உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் பித்தம் விரைவில் குணமடையும் அதேபோன்று சர்க்கரை நோய் உள்ளவர்கள் இந்த சுரைக்காயை அடிக்கடி சாப்பிட்டு வரும் பொழுது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கணிசமாக குறையும்

 அடுத்து இன்று சர்க்கரை நோய் போன்ற ரத்த அழுத்தமும் வீட்டில் ஒருவருக்காவது இருக்கும் நிலை உள்ளது அதிலும் இது உயர் ரத்த அழுத்தமாக மாறும் போது இதய நோய்கள் வர வாய்ப்புகள் அதிகம் எனவே ரத்த அழுத்தம் உள்ளவர்கள் ஒரு துண்டு சுரைக்காய் விதை நீக்கிய ஒரு நெல்லிக்காய் இவற்றை நீர்விட்டு அரைத்து சாறு பிழிந்து வாரம் இருமுறை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் உயர் ரத்த அழுத்தம் விரைவில் கட்டுப்பாட்டிற்குள் வரும் 

அதே போன்று கண் சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும் சிறந்த மருந்தாக பயன்படுகிறது சுரைக்காயில் உள்ள நீர்சத்து கண்களுக்கு குளிர்ச்சியைக் கொடுத்து கண்களை பாதுகாக்கிறது 

அது மட்டுமல்ல தற்போது நிறைய பேர் கம்ப்யூட்டர் முன் நீண்ட நேரம் அமர்ந்தே இருப்பதால் கண் எரிச்சல் கண் வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன இத்தகைய குறைபாடுகளை போக்க காயை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் கண்களுக்கு குளிர்ச்சி தந்து கண் எரிச்சலையும் போக்கும்

 அடுத்து முக்கியமானது கல்லீரல் நாம் சாப்பிடும் உணவுகளில் இருக்கும் விஷத்தன்மையை முறித்து உடலுக்கு நன்மை செய்வதோடு மட்டுமில்லாமல் பல முக்கியமான பணிகளை செய்து வருகிறது இந்த கல்லீரல் என கல்லீரல் ஆரோக்கியமாக இருக்க வாரம் மூன்று முறை யாவது சுரைக்காயை உணவில் சேர்த்து வந்தால் கல்லீரலில் இருக்கும் நச்சுதன்மை முற்றிலும் நீங்கி கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும் 

அடுத்து பெண்களைப் பொறுத்தவரையில் மாதவிடாய் காரணமாக அதிக ரத்தப்போக்கு ஏற்படுவதால் ரத்தசோகை ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் இதில் இரும்பு சத்து அதிகம் உள்ளதால் ரத்த சோகையைப் போக்கி என்றும் சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளும் மேலும் ரத்தத்தையும் சுத்தப்படுத்தும் அதேபோன்று உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் இதை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் எடையை குறைப்பதோடு ஆரோக்கியத்தையும் பெறலாம் 

அதேபோன்று சுரைக்காய் மற்றும் அதன் விதைகளுக்கு ஆண்மையை பெருக்கும் சக்தி உண்டு சுரைக்காயின் சதைப் பகுதியுடன் விதைகளையும் சேர்த்து சர்க்கரையுடன் கலந்து ஒரு மாதம் சாப்பிட்டு வந்தால் ஆண் மலட்டுத்தன்மை நீங்கும் எனவே கோடையில் மட்டுமல்ல என்றுமே நம்மை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள சுரைக்காய் உதவுகிறது எனவே சுரைக்காய் பிடிக்காது என்று அலட்சியப்படுத்தாமல் தவிர்க்காமல் சாப்பிடுங்கள்

கருத்துகள்