ஏலக்காய் சாப்பிட்டால் என்ன பயன்
நாம் போடும் டியில் ஒரு ஏலக்காய் தட்டிப் போட்டு குடித்தால் மணமாக இருக்கும் இதிலுள்ள வேலையில் என்ற எண்ணெய்தான் நறுமணத்தையும் தந்து நோய்களைக் குணப்படுத்தும் ஆற்றலையும் தனக்குள் கொண்டுள்ளதுஇந்த ஏலக்காய் ஒரு மசாலாப் பொருளாக மட்டுமில்லாமல் மூலிகைப் பொருள் ஆகும் பயன் படுகிறது இந்த ஏலக்காயை தினமும் ஒன்று சாப்பிட்டால் பல ஆரோக்கிய நன்மைகளை நமக்கு கொடுக்கிறது
இன்னும் சொல்லப் போனால் நமக்கு உள்ள பல நோய்கள் நம்மை அறியாமலே குணமாகி விடும் அதுமட்டும் அல்ல இதை எந்தெந்த நோய்களுக்கு எப்படி பயன்படுத்துவது என்பதை இப்பொழுது பார்ப்போம்
முதலில் மன ஆரோக்கியம் ஒரு மனிதனுக்கு மனம் நன்றாக இருந்தால் தான் உடலும் நன்றாக இருக்கும் உண்மையில் நம் மனதிற்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு சொல்லப்போனால் மனதில் ஏற்படுகிற கவலை கோபம் துக்கம் பயம் மற்றும் மன அழுத்தம் போன்றவை மனதை பாதிப்பதோடு மட்டுமில்லாமல் உடல் நலத்தையும் பாதிக்கிறது
இப்படி மன அழுத்தம் கொண்டிருக்கும் நேரங்களில் இரண்டு ஏலக்காயை மென்று சாப்பிட்டால் அதில் இருக்கும் நன்மை பயக்கும் இரசாயனங்கள் மூளை செல்களை அமைதிப்படுத்தி மனம் மற்றும் உடலில் ஏற்பட்டிருக்கும் இருக்க நிலையை தளர்த்தி மனநிலையை மேம்படுத்துகிறது அதே போன்று சிலர் எனக்கு பசியில்லை என்று சொல்லிக்கொண்டு சாப்பிடுவதை தவிர்த்து வருவார்கள் இப்படி சாப்பிடுவதை தவிர்ப்பது உடல் பலவீனம் ஏற்படும்
மேலும் இப்படி சாப்பிட முடியாமல் அவதிப்படுபவர்கள் இரண்டு ஏலக்காயை வாயில் போட்டு மென்று வந்தால் குடலியக்கம் சிறப்பாக செயல்பட்டு பசி எடுக்க ஆரம்பித்துவிடும் ஜீரண உறுப்புகளும் சீராக இயங்கும்
அதேபோன்று வாய்வுத் தொல்லையால் அவதிப்படுவோர் ஏலக்காயை நன்கு காய வைத்து பொடியாக்கி அந்தப் பொடியில் அரை டீஸ்பூன் அளவு எடுத்து ஒரு தம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து இதை சாப்பிடும் முன்பு இந்த ஏலக்காய் தண்ணீரைக் குடித்தால் வாய்வுத் தொல்லை உடனே நீங்கிவிடும்
பொதுவாக இந்த ஏலக்காய் நமது உடலில் மெட்டபாலிசத்தை அதிகரித்து பித்தநீரை அதிகரிக்கச்செய்து இதனால் எதுக்களித்தல் வாயுத்தொல்லை போன்றவை நீங்கும்
அதேபோன்று சாப்பிட்ட உணவு செரிமானம் ஆகவில்லை என்றால் உடனே மருந்து மாத்திரை தேட வேண்டாம் 7 அரிசியுடன் ஓமம் ஜீரகம் இந்த மூன்றையும் சம அளவில் எடுத்துக்கொண்டு லேசாக வறுத்து பொடி செய்து அதில் ஒரு டீஸ்பூன் அளவு சாப்பிட வேண்டும் இதனால் அஜீரணக் கோளாறு முற்றிலும் விலகிவிடும்
அதேபோன்று சிலருக்கு வாயை திறந்தாலே துர்நாற்றம் வீசும் வயிற்றில் பிரச்சனைகள் இருந்தாலும் இப்படி ஏற்படக்கூடும் இந்த துர்நாற்றத்தைப் போக்க இரண்டு ஏலக்காயை வாயில் போட்டு மென்று சாப்பிட்டு வரும்பொழுது துர்நாற்றம் நீங்கும்
மேலும் ஆரோக்கியத்திற்கும் ஏற்றது பல் வலி ஈறுகளில் ஏற்படும் வீக்கத்தையும் கட்டுப்படுத்தக்கூடியது இது பல் இடுக்குகளில் படிந்த கறைகள் இவற்றைப் போக்கி வாய் துர்நாற்றத்தைப் போக்குகிறது
அதே போன்று சிலர் பஸ்ஸில் பயணம் செய்தாலே தலைச்சுற்றல் வாந்தி மயக்கம் போன்ற பிரச்சினைகள் ஏற்படும் என்பார்கள் இவர்கள் பயணம் மேற்கொள்ளும் போது இரண்டு ஏலக்காயை வாயில் போட்டு மென்று வந்தால் வாந்தி மயக்கம் போன்ற பிரச்சனைகள் வராமல் நிம்மதியாக உங்கள் பயணத்தை மேற்கொள்ளலாம்
அடுத்து உடலில் அனைத்து பாகங்களும் சீராக இயங்க பாகங்களுக்கு சீரான ரத்த ஓட்டம் மிகவும் அவசியம் பொதுவாக உடலில் கொழுப்பு அதிகம் சேர்ந்திருந்தால் ரத்தக்குழாய்களில் கொழுப்பு சீரான இரத்த ஓட்டத்தை தடுப்பதால் இதய பாதிப்புகள் மற்றும் உடல்நல பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்
எனவே தினமும் இரண்டு ஏலக்காய்களை மென்று சாப்பிட்டு வந்தால் இரத்தக் குழாய்களில் கொழுப்பு சேர விடாமல் தடுப்பதால் உடல் முழுவதும் சீரான இரத்த ஓட்டத்தை பெற முடியும் பொதுவாக உயர் ரத்த அழுத்தப் பிரச்னை உள்ளவர்கள் ஏலக்காய் போட்டு காய்ச்சி தண்ணீர் குடித்து வருவதன் மூலம் ரத்த ஓட்டம் மேம்பட்டு உயர் ரத்த அழுத்தம் குறைய பெரிதும் உதவுகிறது
அதேபோன்று ஏலக்காயில் உள்ள மாங்கனீஸ் இரத்த சர்க்கரை அளவை பராமரிக்க உதவுகிறது எனவே சர்க்கரை நோயாளிகள் தினமும் இரண்டு ஏலக்காயை மென்று சாப்பிட்டு வரும் பொழுது இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க முடியும்
அடுத்து தலைவலிக்கு ஏலக்காய் ஒரு சிறந்த மருந்தாகும் தலைவலி உள்ளவர்கள் ஏலக்காய் டீ குடிக்கலாம் அல்லது ஒரு ஏலக்காயை வாயில் போட்டு மென்று சாப்பிட்டு வந்தால் தலைவலி விரைவில் குணமாகும் மேலும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
அதே போன்று தொடர்ந்து புகை பிடிக்கும் பழக்கம் கொண்டவர்களுக்கு சிறிது காலத்தில் நுரையீரல் வாய் போன்ற உறுப்புகளில் தொற்று ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உண்மையில் புகை பிடிக்கும் எண்ணம் வரும்போதெல்லாம் ஒரு ஏலக்காய் வாயில் போட்டு மென்று வந்தால் மெல்ல மெல்ல புகை பழக்கத்திலிருந்து விடுபட லாம்
அதுமட்டுமல்ல ஏலக்காயில் விட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பைட்டோ நியூட்ரியன்ட்ஸ் போன்றவை சருமத்தில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து சரும சுருக்கம் ஏற்படுவதைத் தடுக்கிறது
அடுத்து இந்த ஏழைக்காய் ஆஸ்துமா நோயாளிகளுக்கும் ஏற்றது சுவாசக் கோளாறுகளைப் போக்கும் சக்தி ஏலக்காய்க்கு உண்டு எனவே ஜலதோஷம் இருமல் தொடர்ச்சியான தும்மலால் அவதிப்படுபவர்கள் ஏலக்காய் கஷாயம் வைத்து குடித்தால் நல்ல பலன் கிடைக்கும்
மேலும் அழகாய் பொடியை நெய்யில் கலந்து காலை மாலை வெறும் வயிற்றில் சாப்பிட மார்புச்சளி குணமாகும் அதேபோன்று ஏலக்காய் சுக்கு ஆகியவற்றை சேர்த்து அரைத்து தண்ணீரில் கொதிக்க வைத்து பருகினால் வறட்டு இருமல் குணமாகும்
அடுத்து தொடர்ச்சியான விக்கலை போக்க ஒரு கப் ஏலக்காய் டீ குடித்தால் விக்கல் பறந்து போய்விடும் காரணம் இது உண்டாவதற்கான வாழ்வை ரிலாக்ஸ் செய்து ஏற்படுவதை தடுக்கிறது
மேலும் அதிகரிக்க செய்யும் அதிகப் பதட்டம் மற்றும் வலிப்பு நோய்க்கும் சிறந்தது மேலும் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற கூடியது
நிறைய பேருக்கு உள்ள ஒரு சந்தேகம் ஏலக்காய் சாப்பிட்டால் ஆண்மைக் குறைபாடு ஏற்படுமா என்பது உண்மையில் ஏலக்காயில் உள்ள சைனஸ் என்ற வேதிப்பொருள் ஆற்றல்மிக்க நரம்புகளை தூண்டி ஆண்மையை அதிகரிக்கிறது
எனவே பாலை காய்ச்சி அதில் ஒரு சிட்டிகை மட்டும் ஏலக்காய்த்தூள் கலந்து அத்துடன் ஒரு டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து குடித்து வந்தால் இருபாலருக்கும் குறைபாடுகள் நீங்கும்
அதேசமயம் ஏலக்காய்த்தூளை அதிகம் சேர்க்காமல் ஒரு சிட்டிகை மட்டும் போதுமானது காரணம் ஏலக்காய் தூளை அதிகம் சேர்த்தால் தான் மலட்டுத்தன்மை ஆண்மைக்குறைவு ஏற்படும் என்றும் கூறப்படுகிறது
கருத்துகள்
கருத்துரையிடுக