நுரையீரலை சுத்தம் செய்ய சித்த மருத்துவம்
உலகை அச்சுறுத்தி வரும் வைரஸ் நோயால் உயிரிழப்பு குறைந்து வருகிறது என்று நினைக்கின்ற நேரத்தில் மீண்டும் உருமாறிய வைரஸ் என புதிய அவதாரம் எடுத்துள்ள இந்த வைரஸ் மீண்டும் மக்களை வீதியில் நடமாட வைத்துவிட்டது
இது போன்ற வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்றினால் மிகவும் பாதிக்கப்படும் உறுப்பு நுரையீரல் காரணம் மற்ற உறுப்புகளை விட நுரையீரல் நேரடியாக சுவாசிக்கும் காற்றுக்கு தொடர்புடையது அதாவது நாம் சுவாசிக்கும் காற்று முதலில் மூக்கு வாயிலாக நுரையீரலுக்கு சென்று பின்னர் மற்ற உறுப்புகளுக்கு ரத்தத்தின் மூலம் செல்கிறது
எனவே தொற்றுக்கிருமிகள் நேரடியாக நுரையீரலுக்கு சென்று சுலபமாக நுரையீரல் தொற்று ஏற்படுகிறது எனவே நுரையீரலை பலப்படுத்தி வேண்டியது மிக மிக அவசியம் பொதுவாக மனித உடலின் செயல்பாடுகளுக்கு ஒவ்வொரு உறுப்பும் முக்கியமானதாகும்
இதில் உடலுக்கு மெயின் சுவிட்சு போல் செயல்பட்டு காற்றை உள்வாங்கி வெளிவிட்டு உடலுக்கு உயிர் சக்தியைத் தரும் ஓட்டம் நுரையீரல் நுறையிரல் பாக்டீரியா கிருமித் தொற்றால் பாதிக்கப்படும் போது மூச்சு குழாயில் அடைப்பை ஏற்படுத்தி சமயத்தில் உயிர் இழப்பை ஏற்படுத்துகிறது
இன்று உலகையே அச்சுறுத்தும் வைரசை கண்டு அனைவரும் அச்சத்தில் இருக்கும் இந்த நிலையில் உடல் பலவீனமாக இருப்பவர்கள் அதாவது நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள் சற்று கூடுதல் கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும்
குறிப்பாக குழந்தைகள் முதியவர்கள் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள் உடல் நலத்தில் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும் சாதாரணமாக நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி இரண்டு வகைகளில் பெறுகிறோம்
ஒன்று மரபுவழியாக அமைந்த சக்தி மற்றொன்று உணவுப் பழக்கம் உண்மையில் ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கவழக்கங்களைப் பின்பற்றினாலே போதும் அந்த வகையில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க கூடிய சில எளிய முறைகளை பற்றி இப்பொழுது பார்ப்போம்
முதலில் மஞ்சள் மிளகு பால் தினமும் ஒரு கப் பாலில் 2 சிட்டிகை மிளகுத்தூள் ஒரு சிட்டிகை மஞ்சள்தூள் சேர்த்து பால் குடித்து வருவது நிச்சயம் பாதுகாப்பாக இருக்கும் மசாலா பால் என்பதால் குழந்தைகளும் குடித்து விடுவார்கள் இதில் வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக பனங்கற்கண்டு அல்லது நாட்டு சர்க்கரை சேர்த்துக் கொள்ளலாம்
இதில் மஞ்சளில் ஆண்டில் தன்மை நிறைந்து உள்ளது இதில் இருக்கும் குர்குமின் என்னும் பொருள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடியவை அதேபோன்று ஆக்ஸிஜனேற்ற மற்றும் ஆண்டிமைக்ரோபியல் கொண்டுள்ள கருப்பு மிளகு நுண்ணுயிர்களுக்கு எதிராகப் போராடும் ஒரு முக்கியமான ஆரோக்கியமான உணவாகும்
இது சளியை போக்குவது அதுமட்டுமல்ல நுரையீரலையும் பலப்படுத்தும் நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும் முக்கியமாக கடையில் வாங்கும் மஞ்சள் பொடி விரலி மஞ்சளை வாங்கி காய வைத்து மிஷினில் கொடுத்து அரைத்து பயன்படுத்துவது நல்ல பலனைத் தரும்
அடுத்து ஒரு கைப்பிடி தூதுவளை ஒரு கைப்பிடி துளசி ஒரு வெற்றிலை இதனுடன் ஒரு சிறிய துண்டு சுக்கு அரை டீஸ்பூன் மிளகு ஒரு டீஸ்பூன் கொத்தமல்லி விதை மேலும் இப்படி இருந்தால் அரை டீஸ்பூன் சேர்த்துக் கொள்ளலாம் இவை அனைத்தையும் இரண்டு டம்ளர் தண்ணீரில் 5 நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்க வேண்டும்
இதில் பெரியவர்கள் என்றால் ஒரு டம்ளர் 15 வயது வரை உள்ள குழந்தைகள் அரை டம்ளர் எட்டு வயதுக்குக் கீழான குழந்தைகள் 10ml என வாரத்திற்கு ஒரு முறை அருந்தி வரவேண்டும் நாள்பட்ட சளியையும் இது வெளியேற்றிவிடும்
மேலும் நுரையீரலையும் வலிதாங்காமல் வைத்துக் கொள்ளும் அதே போன்று தினமும் காலையில் வெறும் வயிற்றில் துளசி நன்றாக மென்று சாற்றை விழுங்கினால் அதன் சாறு இறங்க இறங்க சுவாச குழாய்களும் வியக்கத்தக்க மாற்றங்கள் நிகழும் முக்கியமாக சுவாசப் பிரச்சினை இருப்பவர்கள் தொடர்ந்து 48 நாட்கள் துளசி மென்று சாப்பிட்டு வந்தால் சுவாச பிரச்சனைகள் சீராகும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து தொற்றுகள் ஏற்படாமல் தடுக்கும் நாள்பட்ட ஆஸ்துமா நோயை கட்டுபடுத்தும்
அதேபோன்று துளசி சாறில் தேன் இஞ்சி சாறு கலந்து குடித்து வந்தால் தொண்டை கரகரப்பு இருமல் சளி நீங்குவதோடு நுரையீரல் பலப்படும் மற்றொரு வீட்டு வைத்தியம் ஒரு டம்ளர் பாலுக்கு சிறிய துண்டு சுக்கு கால் டீஸ்பூன் சோம்பு சீரகம் சேர்த்து ஒரு சிட்டிகை மிளகுப் பொடி சேர்த்து கொதிக்க வைத்து இறக்கி மிதமான சூட்டில் தேன் கலந்து குடித்து வர வேண்டும்
இதை குழந்தைகளுக்குக் கொடுக்கும்போது அளவு குறைத்துக் கொடுக்க வேண்டும் அதிக காரம் நிறைந்த இந்த கஷாயம் நுரையீரலை சுத்தப்படுத்தும் இந்த கஷாயத்தை வாரம் ஒருமுறை குடித்தால் சளி நீங்குவதோடு நுரையீரல் பலப்படும் அதேபோன்று டீ குடிப்பவர்கள் டீ தயாரிக்கும் போது இஞ்சியை தட்டி சேர்த்து இஞ்சி டீ அல்லது காபி குடித்து வருவது மிகவும் நல்லது
இஞ்சி நுரையீரலில் இருக்கும் கழிவுகளை அகற்றும் சிறப்பு குணங்களை கொண்டிருக்கும் பொருள் இதில் உள்ள ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் தொற்றுக்கு சிகிச்சை அளிக்கக் கூடியது
மேலும் எங்களுக்கு எதிராகப் போராடும் சக்தியும் இதற்கு உண்டு மேலும் நுரையீரல் பலவீனத்தையும் அதன் வீக்கத்தையும் குறைக்க வல்லது ஆஸ்துமா பிரச்னை இருப்பவர்கள் அடிக்கடி உணவில் இஞ்சியை சேர்த்து வருவது நல்லது நுரையீரலையும் சுவாசப் பாதையையும் சீராக்கும் குறிப்பாக இந்த வைரஸ் தொற்று பரவும் இந்த நேரத்தில் உங்களை பாதுகாக்கும் கவசம்
அடுத்து பூண்டு பூண்டு இயற்கையாகவே உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் ஒரு பொருள் பூண்டை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் பூண்டில் இருக்கும் ஆன்டிபயோடிக் தன்மைக் நுரையீரல் தொற்று உண்டாக்கும் வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களை அழிக்கும் வல்லமை கொண்டது
இது மூச்சுத்திணறலை போக்க உதவும் இது நுரையீரல் வீக்கம் மற்றும் நுரையீரல் புற்றுநோய் அபாயத்தை குறைக்க உதவுகிறது ஆஸ்துமா நோயாளிகளுக்கு பூண்டு ஒரு சிறந்த மருந்தாகும்
பொதுவாக ஒருவர் அடிக்கடி சளி காய்ச்சல் இருமல் இவற்றால் பாதிக்கப்படுவதற்கு காரணம் உடலில் நோய் எதிர்ப்பு தன்மை குறைவாக இருப்பதே எனவே உடலை பாதிக்கக்கூடிய கிருமிகளிடம் இருந்து காத்துக் கொள்ள நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி வலிமையாக இருக்க வேண்டும்
அந்த வகையில் இங்கே சொன்ன இந்த வீட்டு வைத்தியங்கள் செய்து வந்தாலே போதும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து வைரஸ் நோய்களிடம் இருந்து பாதுகாப்பும் முக்கியமாக நுரையீரல் பலமடங்கு பலப்படும்
கருத்துகள்
கருத்துரையிடுக