தர்பூசணி பழம் சாப்பிட்டால் என்ன நன்மை
தர்பூசணி பழம் சாப்பிட்டால் தண்ணீர் தாகம் அடங்கும் என்று மட்டும் தான் நிறைய பேர் நினைக்கிறோம் ஆனால் இதில் மருத்துவ நன்மைகளும் கிடைக்கிறது
அதாவது இதில் இரும்பு சத்து அதிகம் உள்ளது பசலைக்கீரைக்கு இணையான இரும்பு சத்து இதில் உள்ளது அது மட்டுமல்ல இதில் விட்டமின் சி விட்டமின் ஏ விட்டமின் b6 ம் விதமின் b1 மற்றும் பொட்டாசியம் மக்னீசியம் பாஸ்பரஸ் கால்சியம் போன்ற தாது உப்புகளும் காணப்படுகிறது சொல்லப்போனால் குறைவான விலையில் அதிக பலன்களைத் தரும் அற்புத சக்தி கொண்டது என்று சொல்ல வேண்டும்
இன்னும் சொல்லப்போனால் கோடையை சமாளிக்க இயற்கையின் வரம் என்று சொல்லவேண்டும் இதன் நன்மைகள் தெரிந்தால் நீங்கள் அதிர்ச்சி அடைவீர்கள் பொதுவாக நமது உடல் நிலை சிறப்பாக இருக்கும் அனைத்து உறுப்புகளும் சீராக இயங்கும் தாது உப்புகள் மற்றும் வைட்டமின்கள் மிக அவசியம் இவை அனைத்தும் நாம் அடிக்கடி தர்பூசணி சாப்பிட்டால் நமக்கு கிடைக்கும்
முக்கியமாக தர்பூசணி சாப்பிட்டால் ரத்த அழுத்தத்தை சீராக்கும் காரணம் இதில் பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் போன்ற ரத்த அழுத்தத்தை குறைக்கும் சத்துக்கள் உள்ளன இதில் உள்ள பொட்டாசியம் இரத்த நாளங்களை விரிவடைய செய்து ரத்த ஓட்டத்தில் உள்ள தடையை போக்கி இரத்த ஓட்டத்தை சீராக செல்ல வழிவகை செய்யும் இதனால் இதயத்தில் உள்ள அழுத்தத்தைக் குறைக்கும்
மேலும் இதில் உள்ள கரோட்டினாய்டுகள் தடிமன் ஆவதை தடுத்து இரத்த அழுத்த பிரச்சினை குறைக்கும் இதனால் இதயத் துடிப்பை சீராக்கும் அதேபோன்று இதில் லைகோபீன் என்ற ஆண்டில் அதிக அளவில் உள்ளது இது பிரீ ரடிகல்ஸ் உண்டாகும் தீமைகள் குறைக்கும்
மேலும் இதயத்தை இளமையாக வைத்துக்கொள்ளும் அதுமட்டுமல்ல தர்பூசணியில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் ரத்த அழுத்தம் வெகுவாக குறைந்து இதயம் சம்பந்தமான நோய்கள் பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கிறது இப்படி எப்படிப் பார்த்தாலும் இதயத்தை கவசமாக காக்கும் சத்துகள் பூசணியில் அதிகமுள்ளன
அடுத்து கோடையில் உடலில் உள்ள நீர்சத்து வியர்வையாக வெளியேறி விடுவதால் ரத்தத்தில் நீர்சத்து குறைந்து இரத்த ஓட்ட வேகம் குறைகிறது அந்த வகையில் தர்பூசணியில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது அதாவது 92% தண்ணீர் இதில் உள்ளதால் இதை சாப்பிடும் போது இரத்தத்தில் நீர் சத்து சேர்ந்து ரத்த ஓட்டம் சீராகி உடலுக்கு புத்துணர்ச்சியை தருகிறது
அதேபோன்று கோடையில் அதிக நீரிழப்பு மற்றும் அதிக வெப்பத்தால் உடல் சோர்வு ஏற்படும் அந்த வகையில் தர்பூசணி சாப்பிடும் பொழுது உடல் குளிர்ச்சி அடைந்து உடல் சோர்வை நீக்குகிறது அடுத்து தர்பூசணியை அடிக்கடி சாப்பிட்டு வரும் பொழுது சிறுநீரகத்தை பாதுகாக்கும் மேலும் சிறுநீரகத்துக்கு சிரமம் கொடுக்காமல் கழிவுகளை வெளியேற்றும்
மேலும் சிறுநீர் நன்றாகப் பிரிய வைக்கும் அதே போன்று இந்த தர்பூசணியில் உள்ள விட்டமின் பி சி நமது மூளையில் பல வேதிப்பொருட்களை உற்பத்தி செய்ய உதவக்கூடியது இந்த வேதிப்பொருட்கள் தான் நமது நடவடிக்கை மற்றும் மன நிலைக்கு காரணமாக அமைகிறது அதாவது விட்டமின் பி செக்ஸில் ஏற்படும் குறைபாடு மன அழுத்தம் மனச்சோர்வு மற்றும் ஏற்பட காரணமாகிறது எனவே தர்பூசணியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மனநிலை அமைதியாக இருக்கும்
அடுத்து தர்பூசணியில் மிகக் குறைந்த கலோரி இருப்பதால் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் இதை சாப்பிடலாம் காரணம் இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் இது சாப்பிட்ட உடனேயே வயிறு நிரம்பிவிட்ட இதனால் நொறுக்கு தீனிகளில் மீது நாட்டம் ஏற்படாது மற்றும் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை குறைத்துக் கொள்ளலாம் அதே போன்று தர்பூசணியில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் காயங்கள் விரைவாக குணப்படுத்தும் ஆற்றலும் இதற்கு உண்டு முக்கியமாக தர்பூசணியில் உள்ள லைகோபீன் நோய் அபாயத்தை தடுக்கும்
ஆய்வுகளில் லைகோபின் புரோஸ்டேட் மார்பகம் நுரையீரல் புற்று நோய்களின் அபாயத்தை குறைப்பதாக கண்டறியப்பட்டுள்ளது எனவே இந்த தர்ப்பூசணியை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் புற்று நோய் பயம் தேவையே இல்லை அதே போன்று தர்ப்பூசணியில் உள்ள ஃபைட்டோ நியூட்ரியன்ட்ஸ் என்ற சத்துக்கள் உடம்பை ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் வைத்திருக்கிறது இதில் உள்ள மூலப்பொருட்கள் ரத்தம் வழியாக சென்று நரம்புகளுக்கு கூடுதல் சக்தியை தருகிறது
மேலும் இதில் ஃப்ளேவோனாய்டுகள் உள்ளன இவை கட்டி வீக்கம் போன்றவை ஏற்படுவதை தடுக்கிறது தர்பூசணியில் உள்ள லைகோபீன் பாதுகாக்கும் எறும்பு நோயான ஆஸ்டியோபோரோசிஸ் நோய் தடுக்கும் அடுத்து மலச்சிக்கல் நார்ச்சத்து குறைந்த உணவு களையும் வயிற்றில் நீர் சத்து குறைவதாலும் பலருக்கும் மலச்சிக்கல் பிரச்சினை உண்டாகிறது அந்த வகையில் இதில் நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து அதிகம் உள்ளதால் இதை மலச்சிக்கல் உள்ளவர்கள் தினமும் சாப்பிட்டு வரும் பொழுது மலச்சிக்கல் பிரச்சனையை இல்லாமல் செய்கிறது
மேலும் இதில் பீட்டா கரோட்டின் ஸி-சான்தின் போன்ற அதிக அளவில் உள்ளது மாலைக் கண் நோய் கண் விழி மிகு அழுத்த நோய்கள் ஏற்படாமல் கண்களை பாதுகாக்கும் இதில் உள்ள பீட்டா கரோட்டின் வைட்டமின் ஏ வாக மாற்றம் இது முடி மற்றும் சருமத்திற்கு மிகவும் நல்லது தர்பூசணியை அடிக்கடி சாப்பிட்டு வரும் பொழுது தோலின் செல்களின் வளர்ச்சியை மேம்படுத்தி பலத்தை அதிகரித்து பிரச்சனையை இல்லாமல் செய்கிறது
அடுத்து முக்கியமானது ஆண் மலட்டுத்தன்மை இன்று வேலைப்பளு மற்றும் முறையற்ற உணவு முறையால் ஆண் மலட்டுத்தன்மை அதிகரித்து வருகிறது அந்த வகையில் இந்த தர்பூசணியில் உள்ள சிட்ருலின் என்ற சத்து ஆண் மலட்டுத்தன்மையை போக்க கூடியது தர்பூசணி பழத்தின் வெள்ளையாக இருக்கும் பகுதியில்தான் அதிகம் உள்ளது எனவே பலத்தை சாப்பிடுவதோடு இந்த வெள்ளைப் பகுதியில் சேர்த்து சாப்பிடுவதால் ஆண்மை குறைபாடுகள் நீங்கும்
அடுத்து யாரெல்லாம் தர்பூசணி சாப்பிடக்கூடாது என்று இப்பொழுது பார்ப்போம் முக்கியமாக இதில் இரும்பு சத்து அதிகம் உள்ளதால் இரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைவாக உள்ளவர்கள் இதை நிறைய சாப்பிடலாம் இதனால் ரத்த சோகை நீங்கி உடல் சோர்வின்றி உற்சாகமாக இருக்கலாம் முதலில் சர்க்கரை நோயாளிகள் இவர்கள் அதிகப்படியாக தர்பூசணி சாப்பிடும் பொழுது சர்க்கரை நோய் வர வாய்ப்புகள் அதிகம் என்பதால் அளவாகச் சாப்பிடலாம்
அதே போன்று சளி பிடித்திருக்கும்போது இதை சாப்பிடும் போது அதில் உள்ள அதிக நீர் சத்து மற்றும் அதிக குளிர்ச்சி தன்மையால் காய்ச்சல் வரை கொண்டு போய் விட்டு விடும் என்பதால் சளி உள்ள பொழுது இது தவிர்ப்பது நல்லது அதேபோன்று இது சிறுநீரகத்தை பாதுகாக்கும் என்றாலும் ஏற்கனவே சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் அதிக அளவில் தர்பூசணியை சாப்பிட வேண்டாம் இதில் உள்ள அதிகப்படியான நீரின் அளவு சிறுநீரகப் பிரச்சினை தீவிரமாக கூடும் என்றும் கூறப்படுகிறது அடுத்து தர்பூசணி பழங்கள் வாங்கும்போது சுவையான மற்றும் கெமிக்கல் இல்லாத பழங்களை எப்படி பார்த்து வாங்குவது
இதன் காம்பு பகுதியை பார்த்தே நன்றாக பழுத்த பழமாய் இல்லையா என்று கண்டுபிடித்து விடலாம் அதாவது புதிதாக பச்சையாக உள்ள காம்புகளை வாங்குவதை விட பலம் பச்சையாகவும் காம்பு மட்டும் நன்றாக காய்ந்து இருந்தால் மட்டும் வாங்க வேண்டும் அதுதான் நன்றாக பழுத்த பழம்
அதேபோன்று பழத்தை இரண்டாக வெட்டி பொழுதே நடுப்பகுதி வெள்ளையாகவும் பழத்தின் தோல் பகுதிக்கு இடையில் மஞ்சள் நிறமாக காணப்பட்டால் அது நைட்ரேட் தாக்கம் அதிகமாக உள்ள தர்பூசணி பழம் என்பதை தெரிந்து கொள்ளலாம்
மேலும் பாலத்தின் ஒரு இடத்தில் மட்டும் சிவப்பு நிறமாக இருந்தால் அந்த படங்களில் நைட்ரேட்ருக்கலாம் இதை தவிர்ப்பது நல்லது அடுத்து பெரிய சைஸ் பழங்களை விட சிறிய சைஸ் பழங்கள் தான் சுவை அதிகமாக இருக்கும் அதாவது நீளவாக்கில் உள்ள பழங்களை விட வட்டமான உருண்டை வடிவில் உள்ள பழங்களை வாங்குவதே நல்லது இதில் தான் சுவை அதிகமாக இருக்கும்
அதுமட்டுமல்ல நீளவாக்கில் உள்ளதைவிட உருண்டை படங்களில் விதைகளும் சதைப்பற்றும் அதிகமாக இருக்கும் நல்ல சிவப்பு நிறமாகவும் இருக்கும் பொதுவாக இயற்கையால் படைக்கப்பட்ட அந்தந்த சீசனில் கிடைக்கும் இதுபோன்ற பழங்களை சாப்பிட்டால் நோயில்லாமல் ஆரோக்கியமாக வாழ முடியும்
கருத்துகள்
கருத்துரையிடுக