வெந்தயம் சாப்பிட்டால் என்ன நன்மை-venthayam benefits

  வெந்தயம் சாப்பிட்டால் என்ன நன்மை

வெந்தயம் சாப்பிட்டால் என்ன நன்மை

வெந்தயம் ஆயுர்வேதத்தில் பாரம்பரிய மருத்துவப் பொருளாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது சிலர் வெந்தயத்தை அப்படியே வாயில் போட்டு தண்ணீர் குடிப்பார்கள் சிலர் வெந்தயத்தை நீரில் போட்டு கொதிக்க வைத்து சாப்பிடுவார்கள்

 மேலும் சிலர் வெந்தயத்தை ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவார்கள் வெந்தயத்தை எப்படி சாப்பிட்டாலும் ஏராளமான நன்மைகள் கிடைக்கும் தான் நோய்களுக்கு தகுந்தமாதிரி சாப்பிட்டால் கூடுதல் நன்மைகள் கிடைக்கும்

 வெந்தயத்தில் வைட்டமின் சி புரோட்டீன்கள் நார்ச்சத்து நியாசின் பொட்டாசியம் இரும்புச்சத்து மற்றும் ஆல்கலாய்டுகள் போன்றவை ஏராளமாக உள்ளன மேலும் இதில் ஜெனின் என்னும் சேர்மம் உள்ளது எனவே சர்க்கரை நோய் உள்ளவர்கள் வெந்தயத்தை அப்படியே சாப்பிட அதற்கு பதிலாக முளைகட்ட வைத்து சாப்பிட்டால் உடலில் இரத்த சர்க்கரை அளவை சீராக பராமரிக்கலாம் 

மேலும்  நீரிழிவு நோயாளிக்கு 24 வாரங்கள் தினமும் முளைக்கட்டிய வெந்தயம் கொடுக்கப்பட்டு வந்தது அந்த நோயாளியின் இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருந்தது தெரியவந்தது உடலில் கூடுதல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தினமும் முளைக்கட்டிய வெந்தயம் உட்கொண்டு வந்தால் உடல் எடையை குறைக்கலாம் இதற்கு வெந்தயத்தில் உள்ள காலம் என்னும் உட்பொருள் தான் காரணம் 

இது தான் நீண்ட நேரம் பசியெடுக்காமல் இருக்கச் செய்கின்றது மேலும் வெந்தயத்தில் 75 சதவிகிதம் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் உள்ளன இது வயிற்றை நிரப்பி எடையை குறைக்க நினைப்போருக்கு நல்ல தீர்வை கொடுக்கிறது முளைகட்டிய வெந்தயத்தை கொலஸ்ட்ரால் பிரச்சினை உள்ளவர்கள் உட்கொண்டு வந்தால் உடலில் உள்ள அதிகப்படியான கொலஸ்ட்ரால் குறைவதோடு இதய பிரச்சனைகள் வரும் அபாயமும் குறையும்

 முளைகட்டிய வெந்தயத்தை ஆன்டி-வைரல் பண்புகள் அதிகம் உள்ளன இதனால் இதனை தினம் சிறிது உட்கொண்டு வருபவர்களுக்கு சளி இருமல் தொண்டை பிரச்சனைகள் போன்றவை வராமல் இருக்கும் நமது முன்னோர்கள் தங்களுக்கு ஏதேனும் செரிமானப் பிரச்சனைகளான வாய்வுத் தொல்லை வயிற்று உப்புசம் வயிற்றுப் போக்கு போன்றவை இருந்தால் வெந்தயத்தை முளை கட்ட வைத்து சாப்பிடுவார்கள் எல்லா பெண்களுக்கும் டெலிவரி குறித்த பயம் நிறையவே இருக்கும் வெந்தயத்தில் இருக்கும் இவற்றை எளிதாகிறது அதே நேரத்தில் வலியை குறைக்கும் என்று அளவுக்கு மீறியும் சாப்பிடக்கூடாது

 வெந்தயத்தை முளை கட்டாமல் நேரடியாக யார் சாப்பிடலாம் கல்லீரலில் பிரச்சனை இருந்தால் நேரடியாகவே சாப்பிடலாம் வெந்தயத்தை எலுமிச்சை சாறுடன் சேர்த்து சிறிது நேரம் ஊறவைத்து மைய அரைத்து காலை மாலை என இருவேளை சாப்பிட்டு வர கல்லீரல் கோளாறுகள் தீரும் குழந்தை பெற்ற தாய்மார்கள் வெந்தயத்துடன் கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டு வர தாய்ப்பால் அதிகம் ஊறும் குழந்தை கொழு கொழு என்று வளரும்

 கொஞ்சம் வெந்தயத்துடன் இரண்டு வெற்றிலையை நன்கு மென்று வயிற்று வலி வயிற்றுக் கடுப்பு குணமாகும் உடல் சூடு அல்லது நீர்கடுப்பு இருந்தால் நீராகாரத்துடன் வெந்தயத்தை கலந்து பருகி வர வேண்டும் உடலை நன்கு குளிர்ச்சி அடையச் செய்யும் குணம் வெந்தயத்திற்கு உண்டு செவ்வாழை பழத்தை சிறிது வெந்தயம் சேர்த்து உண்டால் சீதபேதி குணமாகும் ஒரு டம்ளர் மோரில் சிறிது வெந்தயம் சீரகம் பொடித்துப் போட்டு குடித்தால் வாயுத்தொல்லை நீங்கும் இந்த பதிவு உங்களுக்கு அதிகம் பயனுடையதாக இருக்கும் 

கருத்துகள்