மருத்துவத்தில் பயன்படும் சுக்கு
பித்த குன்மத்திற்கு
சுக்கு 9 கிராம். மிளகு 70 கிராம், ஓமம் 70 கிராம் சேங்கொட்டை 4 கிராம், அக்ரகாரம் 4 கிராம் இவை அனைத் தையும் சுத்தம் பார்த்து அம்மியில் வைத்து இடித்து தூள் செய்து இத்துளை ஒரு மெல்லிய நுணியால் வடிகட்டி, அந்தச் சூரணத்தோடு சத்திச் சாரனை லேர் கொண்டுவந்து இடித்துச் சூரணம் 550 கிராம் சேர்த்து வெகுகடியளவு - அதாவது 5 விரல் கொண்டு எடுத்து வாயில் போட்டு வெந்நீர் 'அருந்தவும். நாளடைவில் பித்த குன்மம் நீங்கும்.
அக்ளி மாந்தம் வாயு பொருமலுக்கு
சுக்கு, ஓமம், கொடிவேலி வேர் ஆகிய வற்றை உத்தேச அளவில் ஓர் நிறையாய் எடுத்து சுத்தம் பார்த்து அம்மியில் வைத்து இடித்து. இடித்த துளை எடுத்து வைத்துக்கொண்டு, அத்தூளுக்குச் சம மாக கடுக்காயை எடுத்து இடித்துத் தூள் செய்து, இரண்டு தூள்களையும் கலந்து திரிகடிப் பிரமாணம் எடுத்து மோரில் போட்டுக் கலக்கி அருந்தவும். நாளடை வில் மேற்கண்ட பிணிகள் யாவும் நீங்கும்.
அஜீரணம் நீங்கி பசி எடுக்க
தேவையான சுக்கு எடுத்து தோல் நீக்கி அம்மியில் வைத்து இடித்து எடுத்து சலித்து அதன் எடைக்குச் சர்க்கரை கலந்து காலை-மாலை கொஞ்சம் எடுத்து வாயில் போட்டுச் சிறிது வெந்நீர் அகும் தவும், நாளடைலில் வாய்வுக் கோளாறு நீங்கும் அசீரணமும் நீங்கும். அதிகப் பசி எடுக்கும் வாய்வு உடல் உள்ளவர்கள் வாரம் ஒருமுறை இதனை சாப்பிடுவது நல்லது.
மாந்தத்தால் வந்த பேதி நிற்க எளியமுறை:
உத்தேச அளவில், சுக்கு, மிளகு, திப் பிலி இம்மூன்றையும் சம எடை எடுத்து அம்மியில் வைத்து இடித்து தூள் செய்து வைத்துக்கொள்ளவும். இதைச் சிறிதளவு வாயில் போட்டு வெந்நீர் அருந்த மாந் தத்தால் வந்த பேதி நிற்கும்.
மேற்கண்ட தூளை அரை தேக்க ரண்டித் தேனில் குழைத்துச் சாப்பிட சீத ளம் போகும். அதே அளவு இத்தூளுடன் பனைவெல்லம் சிறிது கலந்து சாப்பிட வயிற்றுவலி நீங்கும்.
விஷஜுரம் நீங்க
சுக்கு 9 கிராம். கடுக்காய் 9 கிராம். கிலவேம்பு 9 கிராம். வேப்பம் பட்டை 9 கிராம். சீந்தில் பேய்ப்புடல் 9 கிராம் இவை அனைத்தையும் சுத்தம் பார்த்து அம்மியில் வைத்து இடித்து, இடித்ததை ஒரு மண்பாண்டத்தில் போட்டு. இரண்டு படி தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து சுண்டக் காய்ச்சி. கஷாயம் செய்து அருந் தக் கொடுக்கவும். நாளடைவில் படிப் படியாக விஷ ஜுரம் நீங்கும்.
தலை வலி, காய்ச்சல், மார்பு வலி, சளி, இருமல், உடல் வலி யாவும் நீங்க செய்முறைகள்:
சுக்கு 20 கிராம். மிளகு 20 கிராம். அரிசித் திப்பிலி 20 கிராம்; இவை மூன் றையும் சுத்தம் பார்த்து நன்கு உலர்த்தி எடுத்து, தனித்தனியாக மிக மெல்லிய தாகப் பொடியாக்கவேண்டும். எவ்வளவு மிக மெல்லியதாகப் பொடியாக்குகி றோமோ அவ்வளவு குணம் சிறக்கும். நன்கு பொடியாக்கி அனைத்தையும்
ஒன்று கலந்து தினம் காலை- மாலை ஒரு சிட்டிகை அளவு பொடி எடுத்து வாயில் போட்டு வெந்நீர் அருந்த மேற்கண்ட பிணி நீங்கும்.
* மேற்படி பொடியை 3 விரல் கொண்டு எடுத்து வெந்நீருடன் அருந்தி னால். சில நிமிடங்களில் தலைவலி நீங்கும்.
* மேற்படி பொடியை 3 விரல் கொண்டு எடுத்து வாயில் போட்டு வெந் நீருடன் அருந்த. சாதாரண காய்ச்சல் உள்ளவர்கள் வியர்வை கண்டு நோய் குறைவதைக் காணலாம்.
* மேற்படி பொடியை 3 விரல் கொண்டு எடுத்து இதனுடன் சிறிது உப்பு கலந்து சாப்பிட்டுவர, வயிற்று வலி. வாந்தி, அஜீரணம். புளியேப்பம், வயிற் இறுப்போக்கு முதலியவை நீங்குவதுடன் நல்ல பசியும் உண்டாகும் உடல் ஆரோக்கியமும் தர வல்லது.
மேற்படி பொடியைச் சிறிது எடுத்து வெந்நீரில் குழைத்துப் பூச, தலைவலி கட்டி, வீக்கம் குடைச்சல் வலி முதலியன நீங்கும். மற்றும் இந்தச் பொடியை சிறிது எடுத்து நசியமிட குளிர் காய்ச்சல் மயக் கம். தலை சுற்றல், தலைவலி இவை நீங்கும்.
* மேற்படி பொடியுடன் சிறிது உப்பு கலந்து தேங்காய் எண்ணெயில் குழைத் துத் தடவி வர சொறி, சிரங்கு, ஊறல், படை, தேமல், கட்டி முதலிய தோலைப் பற்றிய நோய்கள் யாவும் தீரும்.
* மேற்படி பொடியுடன் உப்பு கலந்து பற்பொடியாக எடுத்து துலக்கி வந்தால். பல் குடைச்சல், பல்வலி, பல் சொத்தை முதலிய நோய்களும் நீங்கும்; பற்பொடி யாக பயன்படுத்தலாம்.
* காக்கை வலிப்பு கண்டு கை கால்களை நொடித்துத் துடிதுடிக்கும் சமயம் மேற்படி பொடியைச் சிறிது எடுத்து மூக்கிலிட்டு ஊத, உடனடியாக வலிப்பு நீங்கிவிடுவதைக் காணலாம்.
* சுவாசம் அடங்கி, கை - கால் அசை வற்று உயிர் அற்றது போன்ற நிலையில் உள்ளவர்களுக்கு மேற்படி பொடியை ஒரு சிட்டிகை மூக்கில் இட்டு ஊத. இப்பொடி உள் சென்றதும் உணர்வு உண்டாகி உறங்கி விழித்தவர்களைப் போல எழுவார்கள்.
குறிப்பு: தேவைப்பட்டால் இப்பொடி அளவை உயர்த்திக் கொள்ளலாம்.
நீர்க் கடுப்புக்கு
சுக்கு - 1, கடுக்காய் 1 வெங்காயம் 1 கொஞ்சம் கீழ்க்காய் (கீழா) நெல்லிவேர் இவை அனைத்தையும் அம்மியில் வைத்து இடித்து, ஓர் மண்பாண்டத்தில் போட்டு அதற்குண்டான நீர் ஊற்றி அடுப்பில் வைத்துக் காய்ச்சி கஷாயஞ் செய்து அருந்த நாளடைவில் நீர்க்கடுப்பு எரிச்சல் இவை படிப்படியாக நீங்கும்.
மூல வாய்வு நீங்க
சுக்கு 70 கிராம் எடுத்து அம்மியில் வைத்து நன்கு இடித்து இடித்த தூளை ஒரு மெல்லிய துணியில் போட்டு சல்லடை போல் சலித்து அதாவது வடிகட்டி, அந்த - சுக்குத் தூளை ஐந்து விரல் கொண்டு எடுத்து, கறந்த பசுவின் பால் 200 மி.லி. போட்டு கலந்து கலக்கி அருந் த வு ம் இவ்விதமாக 5 நாட்க ள்
அருந்தும் பட்சத்தில் படிப்படியாக மூல வாய்வு நீங்கி நன்கு பசியும் எடுக்கும்.
குறிப்பு: தேவைப்பட்டால், சுக்குத் தூள் அளவை உயர்த்திக்கொள்ளலாம்.
பசி தீபனத்திற்கு
சுக்கு 20 கிராம், மிளகு 20 கிராம், அரிசித் திப்பிலி 20 கிராம் சுத்தம் பார்த்து ஒரு வாணலியில் போட்டு அடுப்பில் வைத்து இளம் வறுவலாக வறுத்து எடுத்து உரலில் போட்டு இடித்து மெல்லிய துணியில் கொட்டி வஸ்திரகாயஞ் செய்து. அதற்கு சரி எடை அஸ்கா சர்க்கரை சேர்த்து ஒரு புட்டியில் சேமித்து வைத் துக்கொண்டு, தேவையான போது, ஐந்து விரல் அளவு அத்தூளை இரு வேளையும் சாப்பிட்டு வெந்நீர் அருந்தவும். இவ்வித மாகச் சாப்பிடும் பட்சத்தில் பசி தீபனம் உண்டாகும்.
குறிப்பு: காலை மாலை இருவேளை யும் சாப்பிட்டு வரவும்.யும் சாப்பிட்டு வரவும்,
பலம், இந்திரிய விருத்தி, தீபன சக்திபெற
சுக்கு 5 கிராம் ஏலம் 5 கிராம், வால் மிளகு 5 கிராம் சாதிபத்திரி. இலங்கம் 5 கிராம் இவை அனைத்தையும் சுத்தம் பார்த்து அம்மியில் வைத்து இடித்து தூள் செய்து மெல்லிய துணியில் போட்டு. ஜல்லடைபோல் வடிகட்டி, அத்தூளை ஓர் புட்டியில் சேமித்து வைத்துக்கொண்டு. நமக்குத் தேவையானபோது. சிறிது தூள் எடுத்து தாம்பூலத்துடன் கலந்து சாப்பிட மேற்கண்ட பிணிகள் நீங்கி, முகவசீ கரத்துடன் விளங்கும்.
வாய்வுக்குத்து, மூச்சுப்பிடிப்பு நீங்க
தேவையான அளவு சுக்கு, நாமக் கட்டி, பெருங்காயம் இவற்றை வெந்நீர் விட்டு உரைத்து, வரும் விழுதை சுண் டைக்காய் அளவு உள்ளுக்கு நாவில் தடவி, மீதியை மார்பில் தடவி நெருப் பளலில் காட்ட வாய்வுக் குத்து மூச்சுப் பிடிப்பு தீரும்.
கரப்பான், சொறி நீங்க
சுக்கு 50 கிராம், சீரகம் 50 கிராம். ஏலம் 50 கிராம் இவற்றை எடுத்து உலர்த்தி, அம்மியில் வைத்து இடித்துப் பொடி செய்து. இப்பொடியை எடுத்து ஒரு துணியில் போட்டுக் கட்டி, கால் லிட்டர்
நல்லெண்ணெயை மண்பாண்டத்தில் விட்டு அதில் கட்டிய துணியைப் மண் பாண்டத்தில் போட்டு ஐந்து நாட்கள் வெயிலில் வைத்து எடுத்து பத்திரப் படுத்தி வைத்துக்கொண்டு, கரப்பான் சொறி வந்த இடங்களில் தொடர்ந்து பூசிவர, நாளடைவில் எந்தவிதக் கரப்பா னும் உடலை விட்டு நீங்கும்.
மூளை மூலத்திற்கு
சுக்கு 35 கிராம், திப்பிலி 35 கிராம். மிளகு 35 கிராம், ஓமம் 35 கிராம். சீரகம் 35 கிராம். முத்தெருக்கன் செவி ஆகிய அனைத்தையும் ஒன்று சேர்த்து, அம்மி அல்லது உரலில் போட்டு இடித்துத் தூள் செய்து வைத்துக்கொண்டு, வேளைக்கு 4 கிராம் தூள் எடுத்து வாயில் போட்டு வெந்நீர் அருந்தவும். இவ்வித மாக காலை-மாலை இருவேளையும் ஒரு வாரம் சாப்பிடவும்.
இப்பொடியைக் கொஞ்சம் எடுத்து எருக்கம் பாலில் மைபோல் அரைத்து. மூல முளையில் தடவிவர நிவர்த்தி யாகும்.
சகல வாய்வு நீங்க எளிய முறை:
சுக்கு 35 கிராம். மிளகு 18 கிராம். திப்பிலி 9 கிராம் ஆகிய அனைத்தையும் சேர்த்து அம்மியில் வைத்து சூடாக்கிய பதநீர் விட்டு அரைத்து, அரைத்ததை எடுத்து மாத்திரை அளவில் செய்து ஒரு நாளைக்கு 3 வேளையாக இரண்டு நாட்கள் சாப்பிடும் பட்சத்தில் சகல வாய்வும் நீங்கிவிடும் என்பதில் ஐய மில்லை.
மற்றொரு முறை: (உடனே வாயுவு நீங்க )
சுக்கு 10 கிராம். நெல்லிப் பருப்பு 10 கிராம். கடுக்காய் 10 கிராம். மிளகு 10 கிராம். ஏலம் 10 கிராம் இவற்றை இடித்து ஒரு மண்பாண்டத்தில் போட்டு தகுந்த தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்துக் காய்ச்சி கஷாயமிட்டு மூன்று வேளை அருந்தும் பட்சம்,உடனே வாயுவு நீங்கும்.
சுக்கினால் சுக்கு காபி தயார் செய்து அருந்துவது உள்ளத்துக்கும் உடலுக்கும், பித்தத்திற்கும் எல்லாவற்றுக்கும் நன்மை தருகிறது.
கருத்துகள்
கருத்துரையிடுக