இனிக்கும் அதிமதுரம் இருமலைத் தணிக்கும்
மதுரம்' என்றால் இனிமை என்று பொருள். அதிமதுரம்' என்றால் மிகுந்த இனிமை என்று பொருள். மிகுந்த இனிமை கொண்ட வேர் 'அதிமதுர வேர், நாட்டுமருந்துக்கடைகளில் மிகச் சர்வ சாதாரணமாகக் கிடைக்கக்கூடிய, அதிமதுரம் சேராத லேகியங்களோ. மருந்துகளோ பெரும்பாலும் இருக்கஇயலாது. சுக்கு, மிளகு, திப்பிலிக்கு அடுத்து சித்த மருத்துவத்தில் அதிகம் பயனாகும் 'அதிமதுரம்' தலை முதல் கால் வரை வரக்கூடிய பல்வேறு நோய்களுக்கு அருமருந்தாகின்றது.
கோடைக்காலத்தில் உணவுக்குப்பின் சிலருக்கு தலைச்சுற்றுவதுபோல் சில நிமிடங்கள் இருக்கும். 'பித்த நிறுநிறுப்பு' வரவொட்டாமல் தடுக தினசரி அதிமதுர வேர் 1 துண்டு எடுத்துக் தூள் செய்து 1 டம்னர் தண்ணீாய் காய்ச்சி வடிகட்டிப் பால் சிறிது கந்து பருகலாம். பித்தம் தணித்து காலை நேர மயக்கம் கட்டுப்படும்.
கோடைக்காலத்தில் மலைம் பிரதேசங்களுக்குச் சென்று திரும்பியதும் சனி, ஜலதோஷம் பிடித்து இருமலும்.. சனியும் சேர்ந்து தொண்ணடயைச் கரகரப்பாக்கும். காலை, மாலை 1 நுண்டு அதிமதுர வேரினை வாயில் அடக்கி லைத்துக் கொண்டு கயைந்து, உமிழ்நீரை விழுங்கிவர தொண்டைக் கரகரப்பு நீங்குவதுடன், சளி, ஜலதோவும் விரைவில் விலகும்.
உணவுக் குழல், இரைப்பை பெருங்குடல், ஆசனவாய் ஆகிய பகுதிகளில் உஷ்ணம் காரணமாக பூந்தசைத் திசுக்கள் ரணமாகி வலியும். எரிச்சலும், கடுப்பும், சில நேரங்களில் ரத்தக் கசிவும் ஏற்படும்
இதற்கு அதிமதுரம் 100 கிராம், கடுக்காய் தோல் 100கிராம், ஏலக்காய் 10 கிராம் ஆகியன எடுத்து லேசாக அளவில் வாட்டிப் பொடி செய்து காலை, மாலை கால் ஸ்பூன் எடுத்துத் தேனுடன் கலந்து தண்ணீருடன் பருகிவர மேற்கண்ட ரணங்கள். வலி, கடுப்பு, ரத்தக்கசிவு நீங்கும்
. குழந்தைகளின் காசநோய் அறிகுறியின் போது உடல் அனல் போல் தகிக்கும். இதனைப் போக்கிளால்தான் உடல் வளர்ச்சி பெறும். அதிமதுரலேகியம் இதற்கு சிறந்த தீர்வாகும். செய்முறை,
அதிமதுரம் மிளகு 200கிராம்
சித்தரத்தை 50 கிராம்.
சீரகம் 100கிராம்
சோம்பு 100கிராம்
சுக்கு 100கிராம்
ஏலக்காய் 10 கிராம்
இவற்றை லேசாக வறுத்துப்பொடி
செய்து தனியே வைத்துக் கொள்ளவும்.லிட்டர் பசும்பாலில் சர்க்கரை அல்லது கல்கண்டு 1 கிலோ சேர்த்து பாகு தயாரிக்கவும். கம்பிபோல் பாகு பதம் வரும்போது மேற்கண்ட சூரணத்தைச் சிறிது சிறிதாகச் சேர்த்து லேகியம் போல் கிளறி பதத்தில் இறக்கிய பின் பசு நெய் 200 கிராம் கலந்து வைத்துக் கொள்ளவும். இதனை 5 நாட்கள் வெய்யிலில் வைத்து எடுத்தபின் தினசரி காலை, இர நெல்லிக்காய் அளவு எடுத்துச் சாக்லெட் போல் சுவைத்துச் சாப்பிட்டுப் பின் பசும்பால் அருந்தி வரவும். இப்படி 2 அல்லது 3 மாதங்கள் சாப்பிட்டு வர, குழந்தைகளின் எலும்பை உருக்கிடும் காசநோய் அறிகுறிகள் நீங்கி, தேக அனல் விலகி உடல் எடை கூடும்.
உடல் வறட்சி, கண் பார்வை மங்கல், கண் வலி, சிறுநீர்ப்புறவழியில் கடுப்பு. ஆசனவாய்க் கடுப்பு, ஒற்றைத் தலைவலி ஆகியவைகட்கு அதிமதுரத்துடன் சீரகம் கால் ஸ்பூன் கலந்து பொடி செய்து தேனுடன் கலந்து தினம் ஒரு வேளை சாப்பிட்டு வர, ஒரு மாதத்தில் மேற்கண்ட கோளாறுகள் விலகும். மஞ் சள் காமாலை, கோடைக்கால வெம்மை, கருத்தரித்த மகளிர், வறட்டு இருமலால் அவதிப்படுவோர். தொண்டை கரகரப்புள்ளவர்கள் அதிமதுர வேரினை அவ்வப்போது 1 துண்டு எடுத்து வாயிலிட்டுச் சுவைத்து வருவது நல்லது. நோய் தீவிரமடையாது விலகும்.
நீரிழிவு நோயாளிகட்கு
நீரிழிவு நோயாளிகள்சேர்க்கக்கூடாது. அதற்குப் பதிலாக சாக்ரீன் கலந்த மாத்திரைகளைச் சேர்ப்பார்கள். அதில் சில பின் விளைவுகள் ஏற்படுவதால் அதனை அடிக்கடி சேர்த்தல் கூடாது. ஆனால் அதிமதுர வேர்ச் சூரணத்தை இனிப்பாக நீரிழிவு நோயாளிகள் சேர்க்கலாம். இனிப்பாகவும் இருக்கும்.
நீரிழிவைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும். இதன் வேர்க்காயத்தை சாக்ரீனுக்குப்பதிலாக பயன்படுத்தினால் மிகுந்த இனிப்பால் திகட்டிவிடும். அளவோடு போதுமானதாகும். அதிமதுர வேரினைப் பயன்படுத்தி சாக்ரின் மாத்திரை போல் இனிப்பு மாத்திரை தற்போது ஜப்பானில தயாரித்து வருகிறார்கள்
காலம் காலமாக நமது நாட்டு மருத்துவர்கள் பயன்படுத்திய அதிமதுர வேர் இனி மாத்திரை வடிவிலே வெளிநாட்டிலிருந்து தயாரிக்கப்பட்டு நமக்கு விற்பனைக்கு வரப்போகிறது. நாமும் விழுந்தடித்துப் போய் வாங்கி, 'பேஷ்! பேஷ் ! ரொம்ப இனிப்பா இருக்கு! ஹி! ஹி!' என்று பாராட்டிப் பயன்படுத்தப் போகிறோம்!
அதில் நம் நாட்டு மருந்துக் கடைகளில் விற்கப்படும் அதிமதுர வேர்ப்பொடி கலந்திருப்பது எத்தனை பேருக்குத் தெரிந்திருக்கும்? இப்படித்தான் நூற்றுக்கணக்கான நம் நாட்டு இயற்கை மருந்து மூலிகைகள் வெளிநாடுகட்குச் சென்று வேறு வடிவில் நமக்கே விற்கப்படுகிறது! அவற்றுள் இனிக்கும் அதிமதுர வேரும் ஒன்று ஆகும்! இல்லந்தோறும் இனிக்கும் அதிமதுர வேர் இருந்தால் இருமலும் இருக்காது. வேறு மருந்துகளும் தேவைப்படாது.!
கருத்துகள்
கருத்துரையிடுக