மருத்துவ மூலிகையாகும் புதினா
புதினா எண்ணெய் தலைவலி பாதம் மற்றும் பிற இவற்றிற்காக தருகின்ற களிம்பு மற்றும் இருமல் மருந்துகள் வாய் கொப்பளிக்கும் தைலம் இப்படி பல மருந்துகள் புதினாவில் இருந்து தயாரிக்கப்படுகிறது மேலும் இந்த புதினாக் கீரையில் ஏராளமான வைட்டமின்கள் தாது உப்புகள் மற்றும் நீர்ச்சத்து புரதம் கொழுப்பு கார்போஹைட்ரேட் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன
முக்கியமாக இது துவையல் ஜூஸ் டீ இப்படி எந்தவிதத்தில் பயன்படுத்தினாலும் இதன் மருத்துவ குணங்கள் மாறுவதில்லை என்பது இதன் முக்கிய அம்சம் புதினாவை அடிக்கடி துவையல் ஜூஸ் டீ இப்படி எப்படி சாப்பிட்டாலும் ஹீமோகுளோபின் எண்ணிக்கை அதிகரிக்கும் இதனால் ரத்த சோகை நீங்கி நமக்கு சுறுசுறுப்பைத் தரும் காரணம் இதில் இரும்பு சத்து அதிகம் உள்ளது
அது மட்டுமல்ல ரத்தக்குழாய்கள் பலமடையும் முக்கியமாக ரத்தத்தை சுத்தமாக்கும் பொதுவாக தோல் அலர்ஜி பிரச்சினை உள்ளவர்கள் புதினாவை தொடர்ந்து உணவில் சேர்த்து வந்தால் இரத்தத்திலுள்ள நோய்க் கிருமிகளை நீக்கி ரத்தத்தை சுத்தமாக்கி தோல் நோய்கள் குணமடையும் பருக்கள் நீங்கி சருமம் பொலிவாகும்
அதேபோன்று மது சிகரெட் புகையிலை போன்ற போதை பொருட்களை அதிகம் பயன்படுத்துவதில் உடலில் ரத்தம் மற்றும் பிற உறுப்புகளில் நச்சுக்கள் அதிகம் சேர்ந்து விடும் இந்த நச்சுகளை வியர்வை சிறுநீர் வழியாக வெளியேறி உடலை தூய்மை அடையச் செய்யும் ஒரு சிறந்த மூலிகை இந்த புதினா
அடுத்து சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் உள்ளவர்கள் புதினாக் குடிநீர் எரிச்சல் இருந்தாலும் நீங்கிவிடும் அதேபோன்று வெயில் காலங்களில் வெளியே சென்று வீட்டிற்கு வந்ததும் புதினா ஜூஸ் குடித்தால் வெயிலால் ஏற்படும் களைப்பு நீங்கும்
முக்கியமாக நிறைய பேருக்கு உடல் அதிக உஷ்ணம் அடைந்து உஷ்ண கட்டிகள் நீர்க் கடுப்பு மற்றும் உடல் உபாதைகள் ஏற்படக்கூடும் இவர்கள் புதினா ஜூஸ் குடித்து வந்தால் உடல் உஷ்ணம் குறையும் முக்கியமாக உடல் அதிக சூடு காரணமாக முடி கொட்டும் பிரச்சினை இருந்தாலும் போக்கிவிடும் அடுத்து புதினா துவையல் அல்லது புதினா ஜூஸ் அடிக்கடி சாப்பிட்டு வரும் பொழுது வயிற்றில் புழுக்கள் இருந்தால் அழிந்துவிடும் வாயுத் தொல்லை இருக்காது குடல் சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்படாது
மேலும் அசைவ உணவு மற்றும் கொழுப்பு பொருட்களை எளிதில் ஜீரணமாகிறது மலச்சிக்கல் நீங்கும் புதினாவில் மென்தால் இருப்பதால் குடல் தொடர்பான பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வை கொடுக்கிறது இந்த புதினா இவர்கள் புதினா ஜூஸ் தொடர்ந்து குடித்து வந்தால் மாதவிடாய் பிரச்சினைகள் தீரும்
மேலும் வெள்ளைப்படுதல் பெரும்பாடு இருந்தாலும் நீங்கிவிடும் முக்கியமாக உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் புதினாவுடன் கொத்தமல்லியையும் சேர்த்து ஜூஸ் செய்து குடித்து வந்தால் உடலில் தேங்கியிருக்கும் வேண்டாத கொழுப்பை கரைத்து உடல் எடை குறைவதை கண்கூடாக காணமுடியும்
அதுமட்டுமல்ல இரத்த அழுத்தம் சர்க்கரை நோயையும் கட்டுப்படுத்துகிறது அடுத்ததாக புதினா டீ குடித்து வந்தால் வறட்டு இருமல் குணமாகும் அதேபோன்று ஆஸ்துமாவையும் புதினாக் கீரை கட்டுப்படுத்துகின்றது மூச்சுத்திணறல் உள்ளவர்கள் புதினாவை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் நல்ல தீர்வு கிடைக்கும்
புதினாவின் மற்றொரு சிறந்த குணம் என்னவென்றால் இது பித்தத்தை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது பித்தத்தால் ஏற்படும் பாத எரிச்சலுக்கு ஒரு கைப்பிடி புதினா உப்பு சேர்த்து வெறும் வாணலியில் வறுத்து சூட்டுடன் ஒரு துணை மூட்டையாக கட்டி எரிச்சல் உண்டான பாதத்தில் ஒத்தடம் கொடுத்து வந்தால் எரிச்சல் குணமாகும்
அடுத்து பல் மற்றும் வாய் சம்பந்தமான பிரச்சனைகளை குணப்படுத்த புதினாவை வாயில் போட்டு மென்றால் நல்ல தீர்வு கிடைக்கும் அதே போன்று புதினா இலைகளை வெயிலில் நன்றாகக் காய வைத்து அதனுடன் அதன் அளவில் எட்டில் ஒரு பங்கு உப்பு சேர்த்து தூள் செய்து சலித்து பாட்டிலில் வைத்துக் கொள்ள வேண்டும் இந்த பொடியை தினமும் பல் தேய்த்து வந்தால் வாழ்நாள் முழுவதும் பல் சம்பந்தமான எந்த ஒரு நோயும் நெருங்காது
மேலும் பற்கள் வெண்மையாக ஜொலிக்கும் ஈறுகளில் இரத்தம் வருவது வாய் துர்நாற்றம் போன்றவை நீங்கும் அதேபோன்று புதினாவை நிழலில் காயவைத்து பாலில் சேர்த்து கொதிக்கவைத்து டீக்குப் பதிலாக அருந்தி வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் வைட்டமின் ஏ இருப்பதால் கண் பார்வைக் கோளாறுகளை சரிசெய்யும்
அதேபோன்று புதினா சாறு பூண்டு சாறு எலுமிச்சை சாறு இவைகளை கலந்து கூந்தலில் தடவி ஊற வைத்து சிறிது நேரம் கழித்து அலசினால் பொடுகு மறைந்துவிடும் கூந்தலும் நன்றாக எனவே தினமும் ஒரு பத்து புதினா இலைகளை கழுவி பச்சையாக அப்படியே மென்று சாப்பிடலாம்
அல்லது துவையல் போன்றோ அல்லது தண்ணீரில் கொதிக்க வைத்து டீ போன்ற அருந்தலாம் அதேபோன்று புதினாவை அரைத்து ஜூஸ் போன்றும் செய்து சாப்பிடலாம் பொதுவாக நோய் வந்தபிறகு ஐயோ நோய் வந்துவிட்டது என்று கவலைப்படுவதை விட ஒரு ஐந்து ரூபாய் செலவு செய்தால் போதும் ஆபத்தை ஏற்படுத்தும் பல நோய்கள் வராமல் தடுக்க முடியும்
கருத்துகள்
கருத்துரையிடுக