உயிர் சத்துக்கள் நிறைந்த தேற்றான் கொட்டை
இன்று குடிநீரை சுத்தம் செய்ய நிறைய ஆய்வுகள் செய்து பாட்டல்களில் விற்கிறார்கள். ஆனால் அவை இரசாயன முறையில் சுத்திகரிப்பு செய்யப்படுபவை. அதனால் 100 சதவீதம் தூய்மையான குடிநீர் என்று சொல்ல முடியாது.
பழங்காலத்தில் கிணற்று நீரில் உப்பு இருக்கும். அத்துடன் கிருமிகள் பல்வேறு அடுக்குகள் இருக்கும். இதனை சுத்தப்படுத்திதான் நம் முன்னோர்கள் பயன்படுத்தினர்.
நெல்லிப்பட்டை அல்லது நெல்லி மர இலைகளை பட்டையுடன் உரித்து கிணற்று நீரில் போடுவர். உப்பு நீர், இனிப்பு நீராகி சுத்தமாகி குடிநீராகி விடும். இதனை எடுத்து 'மண்பானை'யில் சேமித்து அதில் வெட்டிவேர், நன்னாரி வேர், திருநீற்றுப்பச்சை விதைகளை ஊறவைத்து அதனை வடிகட்டி பருகுவது வழக்கம்.
இது 100 சதவீதம் சுத்தமான குடிநீராகும். உலக சுகாதார நிறுவனம் சில ஆண்டுகட்கு முன் ‘குடிநீர்' பற்றிய பல்வேறு ஆராய்ச்சிகளை செய்தபின் அறிவித்த தகவல் வியப்பானதாகும்.
இதற்கு அந்தக்காலத்தில் 'தேற்றான்' என்றொரு மரம் இருந்தது. இப்போதும் அது இருக்கிறது. அந்த மரத்தை கிராமங்களில் மக்கள் வளர்த்தனர். எதற்குத் தெரியுங்களா? இதன் விதையை எடுத்து பானை நீரில் போட்டு விடுவார்கள். 1 நாள் ஆக ஊறிய பின் பார்த்தால் பானை நீர் தெளிந்து அழுக்குகள் கீழே உறையும். தெளிந்த நீர் மேலே இருக்கும்.
தெளிந்த நீரை குடிப்பதற்குப் பயன்படுத்துவர் சில காலம் வரை இந்தப் பழக்கம் கிராமங்களில் இருந்தது. என்றைக்குபாட்டல்களில் குடிநீர் புகுந்ததோ அன்றே கிராமங்களிலிருந்த தேற்றான் விதை தெளிந்த குடிநீரும் மறைந்தே போய் விட்டது. அத்துடன் இந்த தலைமுறைக்கு 'தேற்றான்' மரம் என்பது ஒரு அதிசய செய்தியாகி விட்டது.
நல்லகாலம்! தேற்றான் முற்றாக மறையவில்லை. பரம்பரை சித்த மருத்துவர்கள் இன்றும் தேற்றான்' விதையைப் பயன்படுத்தி தூய்மையான குடிநீர், மற்றும் தேற்றான் கொட்டை லேகியம் என்று மருந்து தயாரித்து மக்கள் ஆரோக்கியத்தை பாதுகாத்து வருகின்றனர்.
'தேற்றான்' மரம் தமிழகத்திலிருந்து முற்றாக மறையவில்லை. இருக்கும் மரங்களை பாதுகாக்கவும், அதன் விதைவிதைத்து அந்த மரங்களை வளர்த்து குடிநீர் சுத்திகரிப்புக்காகவும், ஆரோக்கிய பராமரிப்புக்காகவும் பயன்படுத்தினால் மக்கள் மருத்துவமனை நாடி செல்ல மாட்டார்கள்.
'தேற்றான்' மரம் அதன் விதை இலை, பட்டை ஆகியன ஒவ்வொரு வீட்டிலும், தோட்டத்திலும் இருந்தால் பலநோய்களை விரட்டலாம்.
தூய்மையான குடிநீரை நல்க வல்ல 'தேற்றான்' நோயாளியின் உடலையும் தேற்ற வல்லது என்பதைப் பின்வருமாறு அறியலாம்.
தேற்றான் பழம், விதை, ஆகியவற்றை பக்குவப்படுத்தி உண்டால், மேகஉஷ்ணம். பெருவயிறு, மூலம், பெரும்பாடு வாயு ஆகியன குணமாகும். எவ்வளவு சாப்பிட்டாலும் உடம்பு தேறவில்லை என்பவர்க்கு தேற்றான் கொட்டைலேகியம் முழுமையாக உடம்பை தேற்றும்..
இதன் கொட்டையைப் பசுவின் பாலில் 1 மணிநேரம் போட்டு ஊற வைத்துப் பின் கழுவி அதனை 1/4 பங்கு சிறுகீரை சாற்றை விட்டு பாதியாக காய்ச்சி உலர வைத்து, பொடி செய்து தினம் காலை மாலை 1/4 ஸ்பூன் எடுத்து பாலில் அருந்த சீதக்கழிச்சல் கைகால், குத்தல், குடைச்சல் விலகும். ஆன்மை சக்தி பெருகும்.
இந்த விதைகளை தண்ணீரில் உறைத்து கரைத்தால் தண்ணீர் தெளிந்த நீராகும்.
நீரிழிவு வெட்டை நீர்ச்சுருக்கு வந்தால்
இதனை பொடி செய்து பாலில் கலந்து குடிக்கலாம். இதன் பொடியை மஞ்சளுடன் சேர்த்தரைத்து கட்டிகள் மீது பூசி வரகட்டிகள் பழுத்து உடையும்.
தேற்றான் விதை, கடுக்காய், ஆவாரைத் விளாம்பிசின் இவற்றை சம அளவு எடுத்து பொடி செய்து பசுவின் மோரில் கலந்து காலை, மாலை, பருகிவர நீரிழிவுகட்டுப்படும்.
தேற்றான் கொட்டை லேகியம்:
150கிராம்சுக்கு 20 கிராம் மிளகு 20 கிராம் திப்பிலி - 20 கிராம் கடுக்காய் - 20கிராம் நெல்லிக்காய் -20கிராம் தான்றிக்காய் - 20கிராம் சித்தரத்தை 20கிராம் சீரகம்-20கிராம்
இந்த அளவில் சேகரித்து தேத்தான் கொட்டையை வறுத்து அத்துடன் மேற்கண்டவற்றை பொடி செய்து சலித்து ஒன்றாக்கவும். சர்க்கரை 200 கிராம் எடுத்து 2 லிட்டர் பசுவின் பாலில் கரைத்து காய்ச்சவும். காய்ச்சும் போதே மேற்கண்ட சூரணத்தை சிறிது சிறிதாக சேர்த்து கிளறவும். லேகியபதம் வரும் போது பசுநெய் 500 கிராம் தேன் 200 கிராம் சேர்த்து ஆறவிடவும். அதன்பின் அதனை தான்யபுடம் 3 நாள் வைத்து எடுத்து தினம், காலை, மாலை, இருவேளை நெல்லிக்காய் அளவு எடுத்து சாக்லெட் போல் சுவைத்து சாப்பிடவும்.
இதனால் மூலம், பௌத்திரம், உடல் இளைப்பு, வெள்ளை, வெட்டை, வாய்வு, எலும்பைப் பற்றிய காய்ச்சல், பசியின்மை நீங்கும். நாகபற்பம் சேர்த்து சாப்பிட மூல நோய் குணமாகும்.
எவ்வளவு சாப்பிட்டஎவ்வளவு சாப்பிட்டாலும் சதைப்பிடிப்பு இன்றி மெலிதாக இருப்பவர்கள் இதனை 3 மாதம் சாப்பிட உடம்பு நன்கு தேறும். இதன் காரணமாகத்தான். இதனை சித்தர்கள் தேற்றான் கொட்டை என்று குறிப்பிட்டனர்.
இன்று உடம்பு தேற பல டானிக் மாத்திரைகள் வந்துவிட்டன. ஆனாலும் நம் சித்தர்கள் அளித்த 'தேற்றான்'க்கு இணையாக அவற்றை கூற முடியாது.
சித்த மருத்துவத்துக்கும் பெருமை சேர்க்கும் மருந்தில் தேற்றான் முதலிடம் பெறுவதாகும்.
எல்லோர் வீட்டிலும் நெல்லிக்காய் அமுதமும், தேற்றான் கொட்டை அமுதமும் இருந்தால் ஆயுள், ஆரோக்கியம் தீர்க்கமாக இருக்கும்!
கருத்துகள்
கருத்துரையிடுக