கண் பார்வை அதிகரிக்க என்ன சாப்பிட வேண்டும்-vegetarian food to improve eyesight


கண் பார்வை அதிகரிக்க என்ன சாப்பிட வேண்டும்

1 கீரைகள்

கண்களின் ஆரோக்கியத்திற்கான மிகச்சிறந்த உணவு கீரைகள் கீரைகள் என்று சொன்னாலே எந்த ஒரு மாற்றுக் கருத்தும் கூற முடியாது அதிலும் குறிப்பாக முருங்கைக் கீரை மற்றும் பொன்னாங்கண்ணிக்கீரை கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு பெரிதும் உதவுகின்றன கண்களுக்கு தேவையான வைட்டமின் ஏ சத்து அமினோ அமிலங்கள் ஆகியவை இந்த கீரைகளில் நிறைந்து காணப்படுகிறது

 எனவே இந்த கீரைகளை உங்களுக்குப் பிடித்த முறையில் சமைத்து உணவாக எடுத்துக் கொண்டு வந்தால் கண்கள் ஆரோக்கியமாக கண்பார்வையும் தெளிவு பெறும் 

2கேரட்

 கேரட்டில் அதிக அளவில் நிறைந்து காணப்படும் வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டீன் போன்ற சத்துக்கள் கண்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது எனவே கேரட்டை தொடர்ந்து சாப்பிட்டு வரும் பொழுது கண்பார்வை அதிகரிப்பதோடு கண்களின் ஆரோக்கியம் மேம்படுகிறது கேரட்டை பொரியலாகவோ அல்லது உங்களுக்கு பிடித்தமான ஏதேனும் ஒரு முறையில் அடிக்கடி உணவில் வாருங்கள் 

3 சிட்ரஸ் பழங்கள்

 சிட்ரஸ் வகைப் பழங்களான திராட்சை ஆரஞ்சு எலுமிச்சம்பழம் இவைகள் மூன்றும் உங்கள் கண்களின் விழித்திரை ஏற்படுத்துவதற்கு மிகவும் உதவியாக இருக்கின்றன இந்த பழங்களில் வைட்டமின் சி சத்து நிறைந்து காணப்படுகின்றது வயல்சார்ந்த கண் குறைபாடுகள் வராமல் காத்துக் கொள்வதற்கு இந்தபழங்கள்ளை தொடர்ந்து சாப்பிடுவது மிகவும் நல்லது 

4 மீன்கள்

 மீன்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்து காணப்படுகிறது இது உங்கள் கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது பெரிதும் உதவுகின்றது கண்களில் வறட்சி தன்மை வராமல் பாதுகாத்துக் கொள்ளவும் கண்புரை நோய் நம்மை நெருங்காமல் காத்துக் கொள்ளவும் மீன்களில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நமக்கு உதவி செய்கின்றது மீன்களை சாப்பிடுவதில் விருப்பம் இல்லாதவர்கள் மீன் எண்ணை கூட பயன்படுத்தலாம்

5 நட்ஸ்

 வகைகளில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் வைட்டமின் சி வைட்டமின் கே போன்ற சத்துக்கள் அதிக அளவில் இருக்கின்றன இவை உங்கள் கண் பார்வையைத் தெளிவு பெறுவதற்கு மிகவும் உதவுகின்றன வால்நட் மற்றும் முந்திரி பாதாம் பிஸ்தா நிலக்கடலை போன்ற நட்ஸ் வகைகளில் உங்கள் கண் பார்வையை அதிகரிப்பதற்கான சத்துக்கள் ஏராளமாக இருக்கிறது எனவே உங்கள் கண்களின் ஆரோக்கியத்தை அதிகரிக்க வகைகளை எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது 

6 முட்டை 

முட்டையில் நமது கண்களுக்கு தேவையான ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிக அளவில் இருக்கின்றது எனவே உங்கள் கண்களின் பார்வை திறனை அதிகரிக்க முட்டையை உணவோடு சேர்த்து அவ்வப்போது சாப்பிடுவது நல்லது

7சர்க்கரைவள்ளிக்கிழங்கு

 சர்க்கரைவள்ளிக் கிழங்கில் பீட்டா கரோட்டீன் அதிகமாக இருக்கின்றது இது கண்களில் ஏற்படும் விழிப்பு பிரச்சினையை கட்டுக்குள் வைத்திருப்பதற்கு பெரிதும் உதவுகின்றது எனவே கண் விழித்தால் பாதிக்கப்பட்டவர்கள் சர்க்கரை வள்ளிக்கிழங்கை சாப்பிட்டு வருவது மிகவும் நல்லது 

8 தண்ணீர்

 தண்ணீர் அருந்துதல் நமது ஒட்டுமொத்த உடல் இயங்குவதற்கு தண்ணீர் என்பது மிகவும் அத்தியாவசியமான ஒன்று தினமும் குறைந்தபட்சம் 2 லிட்டர் அளவிற்கு தண்ணீர் கண்டிப்பாக குடிக்க வேண்டும் ஈரப்பதம் குறைவு தான் கண்கள் சார்ந்த பிரச்சனைகளுக்கு மிக முக்கியமான காரணம் எனவே உங்கள் கண்களில் ஈரப்பதத்தை சரியான அளவில் வைத்துக் கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம்இந்த இயற்கை உணவுகளையும் முடிந்தவரை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நிச்சயம் உங்கள் கண் பார்வைத் திறன் அதிகரிக்கும் கண் தொடர்பான நோய்கள் குணமாகும் உங்களது கண்கள் வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியத்துடன் இருக்கும் மீண்டும் 

கருத்துகள்