என்ன சாப்பிடுவது எப்படி சாப்பிடுவது?- What to eat and how to eat?

 

என்ன சாப்பிடுவது எப்படி சாப்பிடுவது

என்ன சாப்பிட உடம்பு சுறுசுறுப்பாகவும் தளர்ச்சி இன்றி ஆரோக்கியமாக வாழ்வது எப்படி? என்பது தான் அவர்கட்குத் தலையாய பிரச்சனை! இதோ ஒரு உணவுப்பட்டியல்:

காலையில் இஞ்சி 1 துண்டு நசுக்கி குவளைதண்ணீரில் காய்ச்சி வடிகட்டி அதி பசும்பால் 1/4 டம்ளர் + ஏலக்காய் 2 தட்டி போட்டு சுவைத்து சாப்பிடுங்கள்.

9 மணிக்கு வெந்தயம் சேர்த்த இட்லி கருவேப்பிலை சட்னி (அ) தக்காளி சட்ன அத்துடன் உளுந்து வடை சேர்க்கலாம் நல்லெண்ணெய் மிளகுபொடி சேர்ப்பது

 நல்ல து.

• 11 மணிக்கு ஏதாவது ஒரு கீரை சூப் ( Vegetable soup (அ) மோரில் வெந்தய பொடி 1/4 ஸ்பூன் கலந்து சாப்பிடலாம்.

பகல் உணவில் கோதுமை ரவை கஞ்சி குவளை அரிசி சாதம் 2 கப், வேகவைத்த காய்கறிகள் 1 கப், மிளகு+பூண்டு ரசம். கண்டைக்காய் வற்றல் பாகற்காய் (அ)கோவைக்காயை பொறியல் செய்து 1 கப் சாப்பிடலாம். தாளித்த மோர் சாதம் நல்லது.

• மாலை 5 மணிக்கு உளுந்து (அ) வேர்க் கடலை (அ) மக்காச்சோளம் கொண்டு தயாரிக்கப்பட்ட பலகாரம் சிறிது அத்துடன் டீ 1 கப் சாப்பிடலாம்.

இரவு 7 மணிக்கு ஓட்ஸ் கஞ்சி, (அ) ரொட்டியுடன் மூக்குகடலை சுண்டல் குழம்பு, பொட்டுக்கடலை சட்னி (அ) வத்தக் குழம்பு சேர்க்கவும்.

இரவு படுக்கும் போது 1 நாள் ஆப்பிள் துண்டுகள், ஒருநாள் மாதுளம் பழம், ஒருநாள்பப்பாளி துண்டுகள், ஒருநாள் பாதாம்பருப்பு ஒருநாள் சாப்பிடலாம்.

சோயாபீன்ஸ் சுண்டல்

இந்த வகை உணவு உண்பவர்கள் இன்சுலின் (அ) மற்ற மாத்திரை தேடி அலைய வேண்டாம். நீரழிவு கட்டுக்குள் இருக்கும். அத்துடன் அதன் பாதிப்புகளான கண்பார்வை மந்தம், கால்வலி, எரிச்சல், காந்தல், சர்மநோய்கள், வயிற்றுக்கோளாறு நரம்பு மண்டலத்தளர்ச்சி, காம உணர்வுகள் செயல் படாமை போன்றவை சீர் பட்டு, நல்ல ஆரோக்கியமான வாழ்வைத் தொடரலாம். நீரிழிவு நோயாளிகள் உண்பதற்கு சத்தான ஆகாரம் இல்லையே என ஏங்க வேண்டாம். மேலும் மேற்குறித்த உணவே, நீரிழிவைக் கட்டுப்படுத்தும் மருந்தாகவும் பயனாகிறது என்பதை அனுபவத்தில் உணரலாம்.



 

கருத்துகள்